AZHAGIRI.R

AZHAGIRI.R

Sunday, December 6, 2009

இந்தியாவை ஆளும் பார்பனர்கள்

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் - பார்ப்பன-பனியாகளிடமே இன்னும் தங்கியுள்ளது. இந்திய தேசியம் என்பது பார்ப்பன-பனியாக்களுக்கானதே என்று பெரியார் உரத்து முழங்கினார். அதன் காரணமாகவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நாட்டுக்கு 'சுதந்திரம்' வந்து விட்டது என்று அறிவித்தபோது, பெரியார் ஏற்க மறுத்தார். அதை துக்க நாள் என்றார். பார்ப்பனர் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் எதிர்கால ஜனநாயகம் பார்ப்பனர் நாயகமாகவே இருக்கும் என்று இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார். பெரியார் தந்த எச்சரிக்கை மறுக்கப்பட முடியாத உண்மை என்பதையே வரலாறுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
நாட்டின் முக்கிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் முழுமையான அதிகாரம் படைத்த தலைவர்களாக, பார்ப்பனரும்-பனியாக்களுமே இருந்து வருகிறார்கள். அது பற்றிய சில தகவல்கள். நிறுவனங்களும், அதன் தலைவர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பார்த்தி ஏர்டெல் நிறுவனம் - சுனில் மிட்டல் (தலைவர்-பனியா)
2. கிரேசியம் அண்டு ஹிண்டால் கோ - குமார் மங்கலம் பிர்லா (பனியா)
3. எச்.டி.எப்.சி. - தீபக் பரேக் (பனியா)
4. இந்துஸ்தான் யூனிலீவர் - நித்தின் பரான்ஜிபே (பார்ப்பனர்)
5. அய்.சி.அய்.சி.அய். வங்கி - கே.வி. காமத் (பார்ப்பனர்)
6. ஜெய் பிரகாஷ் அசோசியேட் - யோகேஷ் கவுர் (பார்ப்பனர்)
7. எல் அண்ட் டி - ஏ.எம்.நாய்க் (பார்ப்பனர்)
8. என்.டி.பி.சி. - ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
9. ஓ.என்.ஜி.சி. - மற்றொரு ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
10. ரிலையன்ஸ் குழுமங்கள் - முகேஷ் மற்றும் அனில் அம்பானி (பனியா)
11. ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா - ஓ.பி.பட் (பார்ப்பனர்)
12. ஸ்டெர்லைப் இன்டஸ்ட்ரிஸ் - அனில் அகர்வால் (பனியா)
13. சன்பார்மா - திலிப் சங்வி (பனியா)
14. டாட்டா ஸ்டீல் - பி.முத்துராமன் (பார்ப்பனர்)
15. பஞ்சாப் நேஷனல் பாங்க் - கே.சி. சக்ரபர்த்தி (பார்ப்பனர்)
16. பாங்க் ஆப் பரோடா - எம்.டி. மல்லியா (பார்ப்பனர்)
17. கனரா வங்கி - ஏ.சி. மகாஜன் (பார்ப்பனர்)
18. இன்ஃபோசிஸ் - கிரிஸ். கோபாலகிருஷ்ணன் (பார்ப்பனர்)
19. டி.சி.எஸ். - சுப்பிரமணியன் ராமதுரை (பார்ப்பனர்)
விமானத் துறை
20. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் - விஜய்மல்லய்யா (பார்ப்பனர்)
21. ஜெட் ஏர்லைன் - நரேஷ் கோயால் (பனியா)
தகவல் தொடர்பு
22. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் - அம்பானி (பனியா)
23. ஏர்டெல் - மிட்டல் (பனியா)
24. வோடாஃபோன் எஸ்சார் - டுயா (பனியா)
25. அய்டியா - பிர்லா (பனியா)
26. ஸ்பைஸ் - மோடி (பனியா)
27. பி.எஸ்.என்.எல். - குல்தீப் கோயால் (பனியா)
28. டாட்டாவின் டி.டி.எம்.எல். - கே.ஏ. சவுக்கார் (பார்ப்பனர்)
29. கிரிக்கெட் அமைப்பு - லலித் மோடி (பனியா)
நாளேடுகள்
30. டைம்ஸ் ஆப் இந்தியா - ஜெயின்
31. இந்துஸ்தான் டைம்ஸ் - பிர்லா (பனியா)
32. தி இந்து - கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் (பார்ப்பனர்)
33. இந்தியன் எக்ஸ்பிரஸ் - கோயங்கா (பனியா)
34. சீ (Zee) டி.வி. - சுபாஷ் சந்திரா கோயல் (பனியா)
35. தைனிச் ஜெக்ரான் (இந்தி நாளேடு) - குப்தா (பனியா)
36. திவ்யா பாஷ்கர் (இந்தி நாளேடு) - அகர்வால் (பனியா)
37. குஜராத் சமாச்சார் (குஜராத்தின் மிகப்பெரும் நாளேடு) - ஷா (ஜெயின்)
38. லோக்மத் - மராத்திய நாளேடு - தார்தா (ஜெயின்)
39. நவபாரத் டைம்ஸ் - கோத்தாரி (ஜெயின்)
40. ராஜஸ்தான் பத்ரிக்கா - கோத்தாரி (ஜெயின்)
41. அமர் உஜ்ஜாலா - மகேஷ்வரி (பனியா) எஃகு உற்பத்தி
42. இந்துஸ்தான் - பிர்லா (பனியா)
43. எஸ்ஸார் (ஸ்டீல் உற்பத்தி) - ரூயா (பனியா)
44. அர்சிலோர் மிட்டல் - லட்சுமி மிட்டல் (பனியா)
45. இஸ்பெட் - மிட்டல் (பனியா)
46. புஷன் ஸ்டீல் - சிங்கால் (பனியா)
47. விசா ஸ்டீல் - அகர்வால் (பனியா)
48. செய்ல் (அரசு நிறுவனம்) - தலைவர் எஸ்.கே. ரூன்த்தா (பனியா)
49. லியாட் ஸ்டீல் - குப்தா (பனியா)
சிமெண்ட் நிறுவனங்கள்
50. அம்புஜா - நியோட்டியா மற்றும் ஷெச்சாரியா (பனியா)
51. டால்மியா சிமெண்ட் - (பனியா)
52. உட்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட் - பிர்லா (பனியா)
53. ஜெ.கே. சிமெண்ட் - சிங்காரியா (பனியா)
54. இந்துஸ்தான் மோட்டார் - பிர்லா (பனியா)
55. பஜாஜ் ஆட்டோ - (பனியா)
நாட்டில் முதலமைச்சர்களாக பார்ப்பனரல்லாதார் வந்து விட்டார்கள். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும், தகவல் தொடர்பு சாதனங்களையும், பார்ப்பன-பனியாக்களே கட்டுப்படுத்துகிறார்கள். தீண்டப்படாத மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மக்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். ஆனால், நாட்டின் அதிகார மய்யத்தில் இவர்களைத் தேடிப் பார்த்தாலும் சிக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு செலவழித்து, தேச ஒற்றுமை, தேச பக்தி என்றெல்லாம் பேசிக் கொண்டு, இந்திய தேசியத்தை இறுக்கிப் பிடிக்க நடக்கும் முயற்சிகள் எல்லாம் இந்த பார்ப்பனர் பனியாக்களின் சுரண்டலுக்கு தானா?
தமிழ்நாட்டின் உரிமைகளில் கருநாடகமும், கேரளாவும் குறுக்கிடுவதற்கு காரணம் இந்திய தேசியம் அல்லவா? இந்திய தேசியக் கட்டமைப்பு, தேசிய இனங்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தானே 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' என்ற நிலை வந்துவிட்டது? நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காத கேரளத்தையும், கருநாடகத்தையும், 'இந்திய தேசியம்' கண்டித்ததா? தண்டித்ததா? பார்வையாளராக மட்டும் வீற்றிருப்பது ஏன்? சக்தி வாய்ந்த 'மலையாள அதிகார மய்யத்தை' உருவாக்கி, ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு திட்டங்களை வகுத்து செயல்பட்டது யார்? இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி அல்லவா?
இந்திய தேசியத்தை எதிர்த்து குரல் கொடுக்காமல், பார்ப்பன பனியாக்களின் சுரண்டலுக்கு போர்க் கொடி உயர்த்தாமல், 'திராவிட' எதிர்ப்பு என்ற இல்லாத ஒரு கோட்பாட்டை தூக்கி போட்டுக் கொண்டு திராவிட எதிர்ப்பு வீரர்களாக அடையாளப்படுத்துவது உண்மை எதிரிகளான இந்திய தேசியத்தையும் அது வளர்த்துவிடும் சுரண்டல் சக்திகளான பார்ப்பன பனியாக்களைக் காப்பாற்றுவது ஆகி விடாதா? கேரளத்துக்காரனும் கன்னடத்துக்காரனும் இந்திய தேசியப் பாதுகாப்பு இருப்பதால் தானே தமிழர்கள் உரிமையைப் பறிக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? தமிழர்களே, சிந்தியுங்கள்!
- விடுதலை இராசேந்திரன்
(இது பெரியார் முழக்கம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

2 comments:

  1. It is true story, not a story but a happening, even after Independance, we have not free ourselves. Instead of Europians, now we are slaves under Parpanargal.( sorry no tamil fonts are readily available with me now, hense I have registered my comments in English.
    Ramu Kumaraswamy

    ReplyDelete
  2. nandri thiru.Kumar.
    Let us eradicate all the higher caste people from higher positions, let our friends, siblings and wards study good courses, wish them to occupy all the superior posts.

    vaazhga thamizhudan
    Azhagiri.R

    ReplyDelete