AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, December 5, 2009

பெண்ணின் சமத்துவம் - தந்தை பெரியார்

பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்று அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களுக்கு ஆண்கள் பெயர்களே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல் கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா அல்லது பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களை புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், கீர்த்தி புகழ் பெரும் பெண்மணியாகவும் வேண்டும். பெண்ணும் தன்னை பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. oivvoru பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம் ? ஏன் நிபந்தனை? உயர்வு - தாழ்வு என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் நம் பெண்கள் வெறும் போகப் பொருள்களாக ஆக்கப்படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. இந்தப் படி பேசுகின்ற தன்மையும் இதற்குத் தான். - தந்தை பெரியார்

No comments:

Post a Comment