AZHAGIRI.R

AZHAGIRI.R

Friday, February 19, 2010

அண்ணாவின் அரும்பணிகள் - பத்து



அண்ணாவின் அரும்பணிகள் - பத்து


1967 இல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று இருந்ததை 'தமிழ்நாடு' என்று பெயரிட்டார்

தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டு வந்தார்

தமிழக மக்களின் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு இந்திய துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமலில் இருந்த போது தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும் தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்

பதவி ஏற்கும் போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி ----- உளமார எனச் சொல்லி பதவி ஏற்றார்

அண்ணா அரசு அமைந்ததும் 'ஆகாஷவாணி' என்பது 'வானொலி' என அழைக்கப்பட்டது
பேருந்துகள் அரசுடமை ஆக்கப்பட்டது

கலப்பு மணம் செய்துக் கொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது
ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்

1968 இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்

பள்ளிகளில் என் சி சி அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்

No comments:

Post a Comment