AZHAGIRI.R

AZHAGIRI.R

Friday, February 5, 2010

பெரியார் களஞ்சியம்! - தொகுதி : 2 - கடவுள்
கடவுள் மறுப்பு

கடவுளை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?

இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், "யோக்கியனாகவோ, கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே. ஏன்?

கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே, ஏன்? மனிதன் எதனால் "கெட்ட" காரியங்களைச் செய்கிறான்?

ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் 'தீங்குகள்' செய்யப்படுகின்றன?

கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?

மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?

ஒரு மனிதனுக்கு அவன் "கெட்ட காரியம்" செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் "கெட்ட" காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?

"கெட்ட" காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?

மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம் துக்கம், அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும் இருந்தும் வர வேண்டும்?

மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?

"நரகத்தை"ப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனையாகச் சிருஷ்டித்த கடவுளை விட வேறு அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?

இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?

ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும், பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்ததாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.

ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.

- (14.07.1970- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

6 comments:

  1. /*கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?*/

    இந்த உலகமும், இந்த உலக வாழ்கையும் முதல் நன்மை , இந்த வாழ்க்கைக்கு பிறகும் உனக்கு ஒரு வாழ்கை உண்டு , அந்த வாழைக்காக நீ இந்த உலகத்தில் நல்லவனாக நடந்துகொள்ள வேண்டும் , இதை மனித சமுதாயம் உணர வேண்டும் .

    ReplyDelete
  2. /*கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?*/

    உணவில் அனைத்து சுவையும் இருந்தால் தான் , அதற்க்கு பெயர் சுவையான உணவு ,
    வாழ்கையில் அணைத்து சுக துக்கங்களும் இருந்தால் தான் வாழ்கை சுவாரசியமாக இருக்கும், அதைவிட முக்கியமானது ,இவைஅனைத்தும் உன்னை நீ நேர்வழி படுத்திக்கொள்ள உதவும் .

    /*பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?*/

    பிறப்பு இல்லை இறப்பு இல்லை
    இவை இல்லை என்றால் என்ன ஆகும் மனிதனே யோசனை செய்து பார் ????
    மனிதர்கள் எப்படி இந்த உலகுக்கு வந்தார்கள் ! பிறப்பு இல்லாமலா ??? இறப்பு இல்லை என்றால் யூசானியா செய்து பார் ???
    நீ நீயாக இருந்து உன் சந்ததிகள் இல்லாமல் அப்படியே எத்தனை காலம் இறப்பு இல்லாமல் இருந்து .... எதற்கு இருக்கிறாய் ???? ஏன் இருக்கிறாய் ??? காரணம் இல்லாமல் ????

    ஆரம்பமும் தேவை இல்லை , முடிவும் தேவை இல்லை , நடுவில் இருப்பது மட்டும் தான் வேண்டும் என்றால் இது பேராசை
    பகலும் தேவை இல்லை இரவும் தேவை இல்லை , என்றால், உலகம் இயங்காது நண்பா?

    பிறப்பு தேவை, மனிதனின் வளர்ச்சி தேவை , அழிவு தேவை , இருந்தால்தால் தான் , நீ ஏன் படைக்கபட்டாய் என்று உணர்வாய்,

    பரீட்சை களத்தில் உனக்கு அவகாசம் கொடுத்து அனுப்பினால் தான் நீ அந்த அவகசதிற்கும் உன் திறமையை / வெளிகொனர்வாய்.
    அவகாசம் விதிக்கபட்டால் தான் உன்னுடைய தொழில் வேலையை நீ திறம்பட செய்வாய்.

    இதே தான் உன் வாழ்கையிலும்!

    ReplyDelete
  3. /*கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், "யோக்கியனாகவோ, கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே. ஏன்?*/

    //ஒரு மனிதனைக் கூட //
    கண்ணை மூடிகொண்டால் உலகம் இருண்டு விடாது !

    கடவுள் நம்பிக்கை இருப்பதால் , தவறு செய்தால் தண்டிக்க ஒரு சக்தி இருகின்றது என்ற பயத்தினால் தான், இன்றளவிலும் உலகம் இருகின்றது . மனிதன் கட்டுமிராண்டியாக மிருகங்களை போல வாழாமல் ,ஓரளவுக்காவது மனிதனாக வாழ்கிறான்.

    இதையும் மீறி தவறு செய்கின்றவன் நாளை மறு உலகில் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவித்தே தீருவான்!

    ReplyDelete
  4. /*கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே, ஏன்? மனிதன் எதனால் "கெட்ட" காரியங்களைச் செய்கிறான்?*/

    ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் 'தீங்குகள்' செய்யப்படுகின்றன?

    மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?

    பரீட்சை களத்தில் , காப்பி அடிக்க கூடாது , பிட் அடிக்க கூடாது என்று தெரிந்தும் , தவறு செய்யும் மாணவர்களை நாம் பார்க்கவில்லையா ????

    தவறு என்ற தெரிந்தும் துணிந்து செய்பவன் தான் வழிதவறுபவன் ! நாளை பெரிய தவறு செய்ய துணிகிறான் , குற்றவாளியாகிறான் .

    இந்த உலகில் மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உண்டு ! ஏற்று கொள்கிறீர்களா? ????

    பதில் ஆம் என்றால் !
    இது நல்லது , இது கெட்டது என்று , கெட்டதை தவிர்த்து நல்லதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவு மனிதனுக்கு மட்டும் உண்டு .

    நல்லதை செய் என்று பகுத்தறிவு மனிதனுக்கு சொல்கின்றது

    இந்த பகுத்தறிவை மனிதனுக்கு மட்டும் கொடுத்தது யார்????
    ஏன் கெட்டதை செய்யகூடாது ? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்?????
    கெட்டதை செய்தால் என்ன??? யார் உங்களை கேட்க போகிறார்கள் ????

    பதில் இருகின்றதா????

    இருகின்றது , இந்த எண்ணம் தான் மனிதனை தவறு செய்ய வைக்கின்றது ........

    இந்த உலகம் மனிதனுக்கு ஒரு பரீட்சை களம், தன்னை படைத்த மிகப்பெரிய சக்தி ஒண்டு உண்டு, அந்த சக்திதான், மனிதனை கெட்டதை செய்யாதே , செய்தால் உனக்கு தண்டனை உண்டு என்ற சொல்வதை , உங்கள பகுத்தறிவு கூட சொல்லும்.

    ReplyDelete
  5. /*கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?*/

    அரைகுறைகளை பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை !

    இந்த உலகம், பரீட்சை களம், நாளை நீங்களோ! நானோ! நாளை இருபோமா அல்லது மரணம் இன்று தான் வரும் என்று கூற முடியுமா என்றால், அறுதியிட்டு கூற முடியாது, கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    இருக்கும் வரை, நல்லதை செய் ! நீ இங்கு செய்யும் நல்லதை வைத்து உனக்கு மறு உலகில் கூலி கொடுக்கப்படும் என்று நம்பும் மனிதன்,
    தீமையிலிருந்து விலகி இருப்பான், கூடுமானவரை நல்லதை செய்துவிட்டு போக நினைப்பான்.

    ReplyDelete
  6. /*ஒரு மனிதனுக்கு அவன் "கெட்ட காரியம்" செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் "கெட்ட" காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?

    "கெட்ட" காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?

    மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம் துக்கம், அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும் இருந்தும் வர வேண்டும்?*/

    நம் கல்வி முறையை ஒரு உதாரனத்திற்க்கு எடுத்துகொள்வோம்,
    பன்னிரிண்டாம் வகுப்பு : நாம் வருடம் பூராவும் படித்து ஏன் பரீட்சைக்கு போக வேண்டும்,அந்த பரீட்சை காலத்திற்கு ஏன் போக வேண்டும், எல்லோரும் பாஸ் என்று போட வேண்டியது தானே ,

    எதற்கு வருடம் பூராவும் கஷ்ட்டப்பட்டு படிக்க வேண்டும், எல்லோரும்ம் பாஸ் என்றால் படிக்க வேண்டியதில்லையே....

    அல்லது கேள்விள் ஏன் கஷ்டமாக இருக்கிறது, ஈசியாக மட்டுமே இருக்கா வேண்டியது தானே????

    இதற்கும் படிக்க வேண்டியதில்லையே...???????

    நம் எல்லோருக்கும் ENGINEER , DOCTOR, ADVOCATE, SOFTWARE ENGINEER, BOTANIST,ZOOLOGIST, BIOCHEMIST ..... SEAT வாங்கிவிடலாம் அல்லவா..

    அதே போல ஓர் மூன்று வருடமோ அல்லது நான்கு வருடமோ அல்லது ஐந்து வருடமோ காத்திருந்து
    நாம் எல்லோரும் ENGINEER , DOCTOR, ADVOCATE ..... ஆகிவிடலாமே !!!!!! ( பரீட்சைஇல்லாமல் ) , இங்கேயும் கஷ்ட்டப்பட்டு படிக்க வேடியத்தில் அவசியம் இல்லையே, ஏன் என்றால், நாம் எல்லோரும் பாஸ் தானே.....?????

    என்ன கேள்வி வியப்பாக இருகிறதா....????

    இதே வியப்பு தான் எனக்கும் உங்கள் கேள்வியை பார்த்து.

    அந்த பரீட்சை களத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் , நீ எப்படி கடின உழைப்பின் PERFORMANCE கொடுகின்றாயோ , அதை பொருத்து தான் உன் மேற்படிப்பில் திசை மாறுகிறது ,

    அதை போல தான் , மறு உலகின் வெற்றிக்கு இங்கு நேர்வழியில் உழைத்தால் தான் , வெற்றி கிடைக்கும்.

    நிலத்தில் ஏர் உழுது , நீர் பாய்ச்சி , நாத்து நெட்டு , உரமிட்டு, பயிரை பாதுகாத்து வளர்த்தல் தான் , அறுவடை செய்யமுடியும் நண்பா...

    இல்லை குறுக்கு வழியில் திரு திட்ரால், இன்றைக்கு நன்றாக இருப்பது போல தோன்றினாலும், நாளை அகபடுவாய்...

    சரி நேரடி பதிலுக்கு வருவோம்...
    மனிதனுக்கு, பகுத்தறிவு என்று இருப்பதை ஒத்துகொண்டாயிற்று ....
    ஏன் அந்த பகுத்தறிவு என்று அந்த பகுத்தறிவை கொண்டு சிந்தித்தால்...பதில் எளிதாக கிடைக்கும்...

    உலகம் ஒரு பரிட்சைகளம், ( உனக்கு பகுத்தறிவு + சுகந்திரம் கொடுத்தாயிற்று )
    உனக்கு, நேர்வழியில் செல்ல, வழிகாட்டுதலும் கொடுத்தாயிற்று( MAP Also PROVIDED)

    மனிதனால் 100% எடுப்பது கஷ்ட்டமான காரியம் , ஆசை(பேராசை ) என்னும் மிருகமும் மனிதனுக்குள் உண்டு.
    சரி . நல வழியில் சென்று PASS செய்யும் வழியை பார்க்க வேண்டியது தானே !!!

    சரி நேர்வழி ஈசியாக இருக்கா வேண்டியது தானே ????? இது தானே உங்களின் கேள்வி....

    நல்ல மார்க் வாங்கிய பின்னும் ஏன் INTERVIEW தேவை???? ....இதுவும் ஆச்சிரிய பட வேண்டிய கேள்வி அல்ல !
    மனிதன் வழிதவருவது எப்போது
    மனிதன் வழிதவருவது 99% கஷ்ட்டதில் தான்
    அப்படி தான் , வாழ்க்கையிலும், உங்களின் நேர்மையை சோதிக்க சில பல காஷ்டங்களும் (கஷ்ட்டங்களை போன்று தோன்றும் விஷயங்களை ) சந்திக்க நேரிடும், இந்த தருனத்தில் வழிதவறாமல் இருப்பவன் தான் 100 % pass.

    இல்லை குறுக்கு வழியில் போவேன் என்றால், அதற்க்கு தகுந்த தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete