AZHAGIRI.R

AZHAGIRI.R

Wednesday, December 2, 2009

கடவுள் இல்லை

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.
கடவுளை கற்பித்தவன் முட்டாள்,
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி,
கடவுளை பரப்புகிறவன் ,அயோக்கியன், மகா மகா அயோக்கியன்.
-தந்தை பெரியார்

1 comment:

  1. /*கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி*/

    தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார். ஈ.வெ.ராமசாமி அவர்களிடம் ஒரு ஆத்திகர், “ஐயா! கடவுள் இல்லை என்கிறீர்களே! ஒருநாள் கடவுள் உங்கள் முன் தோன்றி நான்தான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றதற்கு, பெரியார் “கடவுள் உண்டு என்பேன்!” என்றாராம்!

    ஈ.வெ.ராமசாமி போராட வெளிக்கிட்ட தொடக்கத்தில் அவரது நோக்கம் சாதி ஒழிப்பே தவிர கடவுள் மறுப்பு அல்ல!

    ஆதிமனிதன் கடவுளாக வழிபட்ட பஞ்ச பூதங்கள், மனிதனுக்கு பயத்தை மட்டுமே ஏற்படுத்தி, தன்னை விட ஒரு சக்தி உண்டு என நம்பும் சூழலை ஏற்படுத்தின. தொழில் நுட்பங்களாலும் நாகரிகத்தாலும் வளர்ச்சியடைந்த மனிதன், பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் வல்லமையை ஓரளவு பெற்றதன்பின் அவற்றின் மீதான பயம் விலகி கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால்தான் சிலைகளை வணங்கும் தற்கால கடவுள் நம்பிக்கையாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வீற்றிருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதில் மென்மையான முகம் கொண்ட சாகசக் கதாபாத்திரங்களையும் கடவுள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    ஈ.வெ.ராமசாமி அவர்களின் கொள்கைகளை கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அவர் கடவுள் மறுப்பை விட சாதி வேறுபாடுகளையும், கடவுள் பெயரால் போதிக்கப்படும் மூட நம்பிக்கைகளையுமே அதிகமாக எதிர்த்திருக்கிறார்.

    ஏன் இஸ்லாத்தில் சேர வேண்டும் ...
    பெரியார் களஞ்சியம் மதம் பாகம் - (4) தொகுதி:28
    http://tamizachiyin-periyar.com/index.php?article=1490

    ReplyDelete