AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, December 5, 2009

பாரதிதாசன் அறிவுரைகள்

  • தமிழன் யார்? தமிழ்நாடு - தாய்நாடு- தமிழே - தாய்மொழி, தமிழர் ஒழுக்கம்- தனதொழுக்கம் என்னும் இம்மூவகை பேறும் பெற்றவன் தமிழன். மற்றவன் பிறனே.
  • தமிழை தாய் மொழியாகக் கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பேசுகின்றவனாகவும் தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீடுகாரனாக இருக்கலாம். இக்காரணங்களைக் கொண்டு அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும்
  • எந்த இயக்கம் மக்களுக்கு உன்மையாய்ப் பாடுபடுகிறது, சமுதாயம் முன்னேற உண்மையாய் உழைக்கிறது என்பதை உணர்ந்து அதில் சேர வேண்டியது மக்களின் கடமையாகும்
  • காட்டுமிராண்டி நம்பிக்கைகள் எல்லாம் ஒழிய வேண்டும். மக்கள் முயற்சி என்பதையே நம்பி முன்னேற்றம் அடைய வேண்டும்
  • ஒருமனிதன் சிந்தித்து பார்க்கும் அறிவைப் பயன்படுத்தாமல் வாழ்கிறான் என்றால் , அவன் மனித நிலையினின்றும் இழிந்து விட்டதாகப் பொருள்
  • உலக மொழிகள் பிறவற்றில் இல்லாத பொருள் இலக்கணம் உடையது நம் தமிழ் மொழி . மனத்தால் வாழும் அகத்துக்கும் அதற்கு அப்பாற்பட்டு வாழும் புறவாழ்வும் பொது வாழ்வுக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன் ஆவான்
  • தமிழை என்னுயிர் என்பேன் நான்! உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே!
  • தமிழினம் வாழ்ந்த இனம், தமிழினம் பண்பட்ட உள்ளம் படைத்தது. பகைவரால் அழிக்க முடியாத மொழியை உடையது
  • தமிழ் என்று தோல் தட்டி ஆடு! - நல்ல தமிழ் வெல்க வெல்க ஒன்றே தினம் பாடு!
  • மனிதன் என்பவன் சிந்திக்கின்ற ஒரு உயிர்

No comments:

Post a Comment