AZHAGIRI.R

AZHAGIRI.R

Thursday, December 24, 2009

திருநீறு --- ஓம் --- நாமம் ஏன்? எதற்காக ?

திருநீறு --- நாமம் ஏன்? எதற்காக ?

திருநீறு:
திருநீறு பூசுவதன் மகிமை பற்றி ஏராளம் சொல்லுவார்கள். பாவம் போக்கும் , பிணி போக்கும், பரகதியை தரும், நீறில்லா நெற்றி பாழ்! நீறில்லா நெற்றி சுடுகாடு ! என்றெல்லாம் சைவ மெய்யன்பர்கள் கசிந்துருகுவார்கள், "மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!
விபூதிமா மகிமை 34 முதல் 42 முடிய பாட்டின் கருத்தாவது:
"அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன், இரு ராத்திரி, ஒரு புலைமாதுடன் விபச்சாரம் பண்ணி கொண்டிருக்கையில், அம்மாதின் கணவன் கண்டு, அத் தூர்த்தனை வாளினால் வெடிக் கொன்று, வேலிக்கு அப்பால் எறிந்தானாம். அந்நேரம் பசியால் வருந்தி குப்பை சாம்பலிலே புரண்டிருந்த ஒரு நாய், அப்ப்ராமணப் பிணத்தை கண்டு அதன் மேல் ஏறி மிதித்துக் கொண்டு தசையை கடித்து இழுத்து தின்றது. நாய் கால்களிலே ஒட்டிக் கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின் மேல் படிந்ததால், சிவகணங்கள் வந்து உபசரித்து புட்ப விமானத்தில் ஏற்றும் சமயம், பிராமணின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யமதூதர்கள் வந்த சேர, அவர்களை சிவகணங்கள் விரட்டியடித்து துரத்தி விட்டு காமதூர்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் என்ன தெரிகிறது? எவ்வளவு கேவலமான - அநீதியான காரியத்தை செய்தாலும், அவன் திருநீறு பூசிக் கொண்டால் (குப்பை மேட்டு சாம்பல் உடலில் பட்டாலும்) பாவங்கள் போகும். மோட்சம் கிடைக்கும் என்றால் நாட்டில் பாவம் செய்ய யார் பயப்படுவார்கள்? பெரிய பாவங்கள்- சிறிய கழுவைகள் - இது தான் மதமா? இது ஒழுக்கத்தை வளர்க்குமா - கெடுக்குமா? சிந்திப்பீர்!


நாமக் குறியா?
ஆண் குறியா?


இந்து மதத்தின் பெருங் கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்த்தர்களை வழி நடத்தும் பார்ப்பன பூசாரிகள் அயங்கார்கள் எனப்படுவார்கள்.
இந்துக்களில் ஏறத்தாழ பாதிப் பேர் வைஷ்ணவர்கள். மற்ற இந்துமதப் பிரிவுகளில் இருந்து வைஷ்ணவர்களைத் தனிமைப்படுத்தி
காட்டுவது அவர்கள் தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம் என்பது.


லிங்கத்துக்குப் போட்டி நாமம்!

நாமக்குரியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம் தான். அதாவது சைவர்களின் லிங்கத்துக்கு இணையான வைனவக்குரியே நாமம்! சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுவார்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் இன்னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடு ஆகும்.
நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக் கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு -- இது தான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகா விஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தை
குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையில் தொங்கும் உறுப்பு - ஆண்குறி).


நன்றி : பெரியார் சுயமரியாதை வெளியீடு

No comments:

Post a Comment