குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனகேட்ட தாய்.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கிள்ளை
அதிர வருவதோர் நோய்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு
வாய்மை எனபடுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இல்லாத சொலல்
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment