Tuesday, December 29, 2009
தமிழன் தாழ்ந்தது - ஏன்?
சமுதாயத்தில் - கீழான சாதி
கல்வியில் - 100 க்கு 80 தற்குறி
செல்வத்தில் - 100க்கு 90 கூலி ஜீவனம்
தொழிலில் - 100 க்கு 75 சரீரம் பாடுபட்டு உழைக்கும் தொழில்
ஒற்றுமையில் - 108 சாதிகள்
கட்டுப்பாட்டில் - அவனவன் சுயநலமும் ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும் - ஒழிக்க சமயம் பார்ப்பதும்
சமயத்தில் (மதம்) - எதிரிக்கு அடிமையாய் இருந்து உழைத்து போடுவது
அரசியலில் - வஞ்சக ஐயோக்கியற்கு வால் பிடித்து கை தூக்குவது;
மானத்தில் - ஈனமும்
மதிப்பில் - காரி உமிழக் தக்கவராகவும் இருக்கின்றனர்.
-------- தந்தை பெரியார்
குடிஅரசு - கட்டுரை : 21-11-1943
Thursday, December 24, 2009
திருநீறு --- ஓம் --- நாமம் ஏன்? எதற்காக ?
திருநீறு:
திருநீறு பூசுவதன் மகிமை பற்றி ஏராளம் சொல்லுவார்கள். பாவம் போக்கும் , பிணி போக்கும், பரகதியை தரும், நீறில்லா நெற்றி பாழ்! நீறில்லா நெற்றி சுடுகாடு ! என்றெல்லாம் சைவ மெய்யன்பர்கள் கசிந்துருகுவார்கள், "மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!
விபூதிமா மகிமை 34 முதல் 42 முடிய பாட்டின் கருத்தாவது:
"அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன், இரு ராத்திரி, ஒரு புலைமாதுடன் விபச்சாரம் பண்ணி கொண்டிருக்கையில், அம்மாதின் கணவன் கண்டு, அத் தூர்த்தனை வாளினால் வெடிக் கொன்று, வேலிக்கு அப்பால் எறிந்தானாம். அந்நேரம் பசியால் வருந்தி குப்பை சாம்பலிலே புரண்டிருந்த ஒரு நாய், அப்ப்ராமணப் பிணத்தை கண்டு அதன் மேல் ஏறி மிதித்துக் கொண்டு தசையை கடித்து இழுத்து தின்றது. நாய் கால்களிலே ஒட்டிக் கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின் மேல் படிந்ததால், சிவகணங்கள் வந்து உபசரித்து புட்ப விமானத்தில் ஏற்றும் சமயம், பிராமணின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யமதூதர்கள் வந்த சேர, அவர்களை சிவகணங்கள் விரட்டியடித்து துரத்தி விட்டு காமதூர்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் என்ன தெரிகிறது? எவ்வளவு கேவலமான - அநீதியான காரியத்தை செய்தாலும், அவன் திருநீறு பூசிக் கொண்டால் (குப்பை மேட்டு சாம்பல் உடலில் பட்டாலும்) பாவங்கள் போகும். மோட்சம் கிடைக்கும் என்றால் நாட்டில் பாவம் செய்ய யார் பயப்படுவார்கள்? பெரிய பாவங்கள்- சிறிய கழுவைகள் - இது தான் மதமா? இது ஒழுக்கத்தை வளர்க்குமா - கெடுக்குமா? சிந்திப்பீர்!
நாமக் குறியா?
ஆண் குறியா?
இந்து மதத்தின் பெருங் கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்த்தர்களை வழி நடத்தும் பார்ப்பன பூசாரிகள் அயங்கார்கள் எனப்படுவார்கள்.
இந்துக்களில் ஏறத்தாழ பாதிப் பேர் வைஷ்ணவர்கள். மற்ற இந்துமதப் பிரிவுகளில் இருந்து வைஷ்ணவர்களைத் தனிமைப்படுத்தி
காட்டுவது அவர்கள் தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம் என்பது.
லிங்கத்துக்குப் போட்டி நாமம்!
நாமக்குரியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம் தான். அதாவது சைவர்களின் லிங்கத்துக்கு இணையான வைனவக்குரியே நாமம்! சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுவார்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் இன்னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடு ஆகும்.
நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக் கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு -- இது தான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகா விஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தை குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையில் தொங்கும் உறுப்பு - ஆண்குறி).
நன்றி : பெரியார் சுயமரியாதை வெளியீடு
Tuesday, December 15, 2009
பண்டைய தமிழரின் அளவுகள் - MEASUREMENTS OF ANCIENT TAMIL PEOPLE
பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..!
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.
@ நீட்டலளவு..
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
@ பொன்நிறுத்தல்..
4நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
@ பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
@ முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
@ பெய்தல் அளவு..
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - ௧ பொதி
__________________
கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
__________________
எண்ணல் அளவை..
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
Saturday, December 12, 2009
தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா?
தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா?
ஆதிகாலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம்.
திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்த அவன் தேவர்களை எல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.
தேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறை இட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்கு அளித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமாதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசுரனைக் கொன்றுக் விட்டார்களாம்.
நரகாசூரன் சாகும் பொழுது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம்.
கிருஷ்ணன் 'அப்படியே ஆகட்டும்' என்று வாக்களித்தாராம். ஆதலால் நாம் கொண்டாடு கிறோமாம் , அல்லது கொண்டாட வேண்டுமாம்.
இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்தி பார்ப்போம்.
முதலாவதாக, இந்தக் கதை உண்மையாக இருக்க முடியுமா?
எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும் , உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமாதேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்? (பூமி தேவி என்றால் போமி அல்லவா? பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான் ? அத்தகைய மேம்பாடு உடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித் தான் செய்தாலும், அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்?
அப்படி இருந்தாலும், தானே வந்து தான் கொள்ள வேண்டுமா? மேற்ப்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமி தேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள் தான் உலகத்தை எல்லாம் காப்பாற்றுகிறாளாம் ! உலக மக்கள் செய்யும் பாவங்களை எல்லாம் பொறுத்து கொள்கிறாளாம்!
'பொறுமையில் பூமி தேவி போல்' என்று உதாரணத்திற்கு கூட பண்டிதரும் பாமரரும் அந்த அம்மையாரை
உதாரணமாக கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனை கொல்லும் போது, தானும் உடனிருக்க வேண்டுமெண்டு திருமாலைக் கேட்டுக் கொண்டாலாம்! என்னே தாயின் பாசம்!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்கள் என்றும், ஆரியராகிய பார்பனர்கள் தாங்களே தேவர்கள் என்றும் கற்பித்து கதை கட்டியிருக்கிற, தேவ-அசுர போராட்டத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என்னச் செய்வது? நம்மைப் ஏமாற்றி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுய மரியாதையை என்ன என்பது? நமது பகுத்தறிவை ஏனென்று சொல்வது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மை என்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவை இழந்து, இந்த தீபாவளியை கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது ?
சென்றது போக, இனிமேலாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப் பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது. ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
- தந்தை பெரியார்
தந்தை பெரியார் சிலை - கடலூர் நாள்: 13_08-_1972 இடம்: கடலூர் எழில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்திற்கும், புதிய அண்ணா பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதி,தலைமை : சி.பி. சிற்றரசு (முன்னாள் மேலவைத் தலைவர்)திறப்பாளர்: கலைஞர்
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு’’இது பொய்யா மொழியாரின் வாக்கு. மழையானது உலகத்தாரிடம் எத்தகைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. காரணம், அதற்கு பேதம் எதுவும் இல்லை. அது-போலத்தான் அறிஞர்கள் கைம்மாறு கருதி எதையும், யாருக்கும் செய்வ-தில்லை. இது யாருக்குப் பொருந்து-கிறதோ இல்லையோ நம் மானமீட்பர், மனித நேயர் தந்தை பெரியாருக்கு முற்றிலும் பொருந்துகின்ற ஒன்றாகும்.மடமையில் மயங்கிக் கிடந்த மக்கள் தங்களின் இந்த இழி நிலைக்கு முற்பிறப்-பில் தாங்கள் செய்த பாவம்தான் காரணமே தவிர, வேறொன்றுமில்லை என்று தங்களுக்குத் தாங்களே சமா-தானப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு விடிவு என்பது தேவைதானா என்று கூட தெரியாமல் மலத்தில் புழுத்த புழுக்-களாக இருந்தபோது அவர்களே எதிர்-பாராத நேரத்தில் மழையாக வந்தார் பெரியார். அந்த மழை மக்களிடம் என்ன எதிர்பார்த்தது-? ஒன்றுமே இல்லை. ஆனால் அந்த மழையில் மக்களின் தரிசு மனங்கள் நனைந்தன. பிறகு தழைத்தன, குறுகிய காலமே ஆனாலும் தமிழன் இன்று ஓரளவிற்கு மற்ற மற்ற நாடுகளின் மக்களைப் போல மானமும், அறிவும் பெற்று சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அது மட்டுமல்ல, இந்துத்துவத்தை வேரறுக்கும் பேராயுதமான தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆல்போல தழைத்து அருகுபோல் வேரோடி மூன்று தலைமுறைகளாக நிலைபெற்று நின்று விட்டது. மூன்றாவது தலைமுறை பெரி-யார் தொண்டர்கள் என்கின்ற சொல் வழக்கே வந்துவிட்டது. இனிமேல் தமிழ் -நாட்டில் இந்துத்துவம் எதையும் ஆட்-டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை யாரால் வந்தது என்பதுகூட தெரியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். காலத்தை கொஞ்சம் ஸிமீஷ்வீஸீபீ செய்து பார்க்கக் கூடிய வசதி இருந்திருக்கு மேயானால், இளைஞர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லாதவர்-களை ஆர்வம் கொள்ளச் செய்ய ஒரே ஒரு சம்பவத்தை சொன்னாலே போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா-?ஆம், 29--_07_1944-இல் கடலூரில் ஒப்பாரும் மிக்காரும் இலாத நமது இனக் காவலர் மீது ஏதேதோ வீசப்-பட்டன. அதில் பாம்பும் உண்டு, செருப்-பும் உண்டு பெரியார் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இந்த வரலாறு ஒளிப்படமாகவே மனத்திரையில் விரியும். தன்மீது விழுந்த அந்த ஒற்றைச் செருப்பு தனக்கும் பயன்-படாது. மீதமிருக்கும் ஒற்றைச் செருப்பு அதை வீசியவனுக்கும் பயன்படாது என்று கருதி அதன் ஜோடியான மற்-றொன்றையும் பெரியார் பெற்றுக்-கொண்ட யுக்தி நாம் அறிந்ததே. ஆனால், அடுத்து வரப்போகின்ற செய்-தியை நம்ப முடிகின்றதா என்று பாருங்-கள். எந்த இடத்தில் பெரியார் மீது பூணூல் திருமேனிகளான ஆரியக்குடி-கேடிகள் செருப்பு வீசினார்களோ, அதே இடத்தில் ஏறத்தாழ 28 ஆண்டுகள் கழித்து 13-_08_1972 ஆம் ஆண்டு பெரியாருக்கு அந்த ஊர் மக்களே சிலையெழுப்பி கொண்டாடி மகிழ்ந்-தார்கள். நம்ப முடியவில்லை அல்லவா? அவர்தான் பெரியார்!
ஆம், இந்த வாரம் நாம் காண இருப்-பது கடலூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையாகும்.பகுத்தறிவாளர்களின் சமயோசித புத்திக்கு ஆயிரமாயிரம் சம்பவங்களைச் சொல்லலாம். அதில் கடலூர் சிலை திறப்பு விழாவுக்கு முன்பு நடந்த நிகழ்வு கூடுதல் சுவைகொண்டது. இன்றைய பொதுச் செயலாளரும் அன்றைய பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு என்.ஜி.ஜி.ஓ. சங்கத்தின்தலைவருமான சு. அறிவுக்கரசு சிலைத் திறப்புப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்-பொழுது மாவட்ட ஆட்சியரும், காவல்-கண்காணிப்பாளர் ஒருவரும் வந்தனர். இவர் பார்ப்பனர் ‘‘சிலையில் கடவுள் மறுப்பு வாசகங்கள் எதுவும் பொறிக்கப்-பட்டிருக்கிறதா?’’ என கலெக்டர் சு. அறி-வுக்-கரசு அவர்களிடம் கேட்டிருக்-கிறார். அவர் ‘‘இல்லை’’ என்று சொல்லி-யிருக்கிறார். கலெக்டர் எஸ்.பி.அய்ப் பார்த்து, “பார்த்தீர்களா’’ (யு.சி) என்று மகிழ்ச்சியாகக் கூறினார். அவர்கள் போன பிறகு, அறிவுக்கரசு அவர்களைப் பார்த்து அவருடைய நண்பர்கள், ‘‘வாசகங்கள் இல்லை என்று ஏன் பொய் சொன்னீர்கள்’’ என்று கேட்டனர். இவரும் சிரித்துக் கொண்டே சிலையில் ஏது வாசகம் ? பீடத்தில்தானே இருக்-கிறது. என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். கலெக்டர் “திமீபீமீstணீறீ’’ என்ற சொல்லுக்கு பதிலாக “ஷிtணீtuமீ’’ என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தார். இது எப்படி? பகுத்தறிவா-ளர்-களிடம் ஆணானப்பட்ட கடவுள்-களே படாதபாடு படும்பொழுது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?அன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள், சிலை அமைப்புக் குழு பொரு-ளாளரும் வழக்கறிஞருமான எஸ்.ஜனார்த்-தனம் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவருடன் ஆசிரியர் வீரமணி அவர்களும் மற்றவர்களும் இருந்தனர். இந்த எஸ்.ஜனார்த்தனம் தான் பின்னாட்களில் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதிமன்ற நீதிபதி யாகி ஜஸ்டிஸ் எஸ்.ஜனார்த்தனம் ஆகி ஓய்வு பெற்ற பின்னர் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவராகவும் பிற்படுத்தப்பட் டோர் நலக்கமி ஷனராகவும் நியமிக்கப்பட் டவர். அப்படி அய்யா எஸ். ஜனார்த்தனம் அவர்களின் வீட்டில் இருந்தபொழுது கழகத் தோழர்களும் முக்கிய பிரமுகர்களும் குடும்பம் குடும்பமாக வருகை தந்து அய்யாவைப் பார்த்து தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.பெரியாருக்கு ஓய்வில் கூட பிரச்-சாரப்பணி நடந்திட வேண்டும். ஆயிர-மாண்டுகளில் சாதிக்க வேண்டியவை-களை நூறாண்டுகளில் சாதிக்க போராடும் தாய்மையின் அவசரம் அது. அப்படித்தான் சிலை திறப்பு நாளன்று மதியஉணவு ஏற்பாடு செய்வதற்கு சு.அறிவுக்கரசு அவர்கள் ஆசிரியரிடம் கேட்டு தந்தை பெரியாரின் அனும-தியைப் பெற்று நல்லவண்ணம் சுமார் நூறு பேர்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய வீடு சிறியது என்பதால் அவருடைய நண்பர் ஹாஜிமஸ்தான் அவர்களின் சினிமாத் தியேட்டரில் வைத்து உணவு பரிமாறப்பட்டது. உண்டு முடித்ததும் தந்தை பெரியார் அறிவுக்கரசு அவர்-களைப் பார்த்து “இவர்கள் எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்களா?’’ என்று கேட்டிருக்கிறார். ஆம் என்று இவர் சொன்னதும் “இவங்க மத்தியில் நான் கொஞ்சம் பேசலாமா?’’ என்று கேட்-டார். அய்யாவின் பேச்சுக்கு அப்பீல் ஏது? கோழி தின்பதற்கு கூலி எதற்கு? உடனே மைக் ஏற்பாடு செய்யப்பட்டது. சைவக்காரரான நீரியல் விஞ்ஞானி குமாரசாமி தலைமையில் அய்யா முக்கால் மணிநேரம் பேசினார். சினிமா பார்க்க வந்த ஏராளமான மக்கள் வந்த காரி-யத்தை மறந்து, அய்யாவின் பேச்சை ஆர்வத்-துடன் கேட்ட வாறிருந்தனர். தியேட்டர் மேலாளர்தான் மூக்கால் அழுதுவிட்டார். காரணம் மேட்னி காட்சி தொடங்கியாக வேண்டும். காலம் கடந்து விட்டது இதை ஆசிரி-யர், அய்யாவிடம் கூறிய பிறகே அய்யா தனது உரையை நிறைவு செய்தார். ஆயிரமாயிரம் தமிழ் மறவர்கள் சூழ மேள தாளத்துடன் அய்யா பவனி வந்தார். ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரி புலியூர் கடைத்தெரு) முதல் வர் கலைஞர் உணவு அமைச்சர் ப.உ. சண்முகம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் அய்யாவுடன் பவனி வந்தார்கள். அந்தக் காட்சி மக்களை உணர்ச்சிப் பெருக்கில் தள்ளி அதில் தத்தளிக்க வைத்து விட்டது. அதிலிருந்து மீள்வதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.விழாவில், கலைஞர் ‘அங்கிங்-கெனாதபடி எங்கெங்கும் தமிழகம் முழுவதும், தமிழகத்தைத் தாண்டியும் தந்தை பெரியாருக்கு திருவுருவச் சிலைகள் நிறுவப்பட வேண்டும். அவர் தனிமனிதரல்ல; சகாப்தம்; இயக்கம்; காலகட்டம் என்று முழங்கினார். அன்று கலைஞர், தமிழர் தலைவரை ‘விடுதலை வீரமணி‘ என்ற சொல்-லாடலை பயன்படுத்தி பேசினார். மேலும், கலைஞர் ‘சிலை’ என்ற சொல்-லுக்குப் பொருள் கூறியது சுவையாக இருந்-தது. சிலை என்றால் உருவம் என்-றும் வில் என்றும் பொருள் உண்டு. அந்த வில்லிலிருந்து புறப்பட்ட நாண்தான் பட்டுக்கோட்டை அழகிரி. அந்த வில்லில் இருந்து புறப்பட்ட ‘நாண்’ தான் அறிஞர் அண்ணா. அது மட்டுமல்ல, அந்த வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் எதிரிகளின் கொத்-தளங்களை எல்லாம் சல்லடைக் கண்-களாக ஆக்கிப் போட்டுவிட்டது. கூட்-டம் இந்த வார்த்தை விளையாட்டுகளில் சொக்கிப் போனது. அன்றைய ‘விடுதலை’ வீரமணியும் இன்றைய தலைவருமான தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விழா பேருரையில் தேர்தல் நேரத்தில் ‘கடவுள் இல்லை’ என்று கூறும் பெரியாரின் சிலையை திறந்து வைத்த கலைஞருக்கா உங்கள் ஓட்டு?’’ என்றனர். பொதுமக்கள் ஆம், அவருக்குதான் எங்கள் ‘ஓட்டு’ என்று கூறி தீர்ப்பு அளித்து இருக்கின் றனர் என்று கூறினார். நாத்திகத்தை வெகுஜனமாக்கிய விந்தை தமிழ்-நாட்டைத் தவிர வேறு எந்த நாட்-டிலும் கிடையாது.தந்தை பெரியாரின் போர் உத்தி-களை எதிரிகளால் கணிக்கவே முடி-யாது. அப்படியே கணித்தாலும் கையறு நிலைதான் அவர்களுக்கு. இல்லாமலா செருப்பு வீசிய இடத்தில் 28 ஆண்டு-களுக்குப் பிறகு சிலை முளைத்தது? இன்றைய கணக்கிற்கு சுமார் 65 ஆண்-டுகள் ஆகின்றன. இனி யாருக்காவது அய்யா சிலையின் மீது செருப்பு வீசும் துணிச்சல் வருமா? அப்படி வந்தால் இன்னொரு சிலைமுளைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதா? “செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்’’என்ற புகழ்பெற்ற கவிதை பிறந்தது கடலூரில்தான் இதைப் பாடியவர் கவிஞர் கருணானந்தம்.
உடுமலை வடிவேல்
நன்றி : விடுதலை
கடலூரில் அய்யா சிலை - 1972
--
Friday, December 11, 2009
BREAST FEEDING - TIPS
- You should begin breastfeeding your baby an hour after delivery
- Colostrum, the yellowish milk produced by the mother in the first three days is very healthy for the child
- The baby does not need anything other than breast milk for the first 4-6 months of life. Breast milk provides adequate nutrition and immunity to the baby
- A baby has only breast milk (no additional water) and urinates a minimum of six times in 24 hours is getting enough breast milk
- Your baby should be free to breastfeed whenever and for as long as it chooses. More suckling means more breast milk. Demand feeding alleviates breast engorgement and breast infection
- It is important that the baby not only gets foremilk (rich in carbhohydrates, vitamins and proteins, that also helps quench the baby's thirst), but also get hind milk (rich in fat and calories). Therefore, you should allow the baby to keep suckling from one side until he/she leaves the breast on his/her own, so that he gets enough hind milk
- Try to avoid bottle-feeding entirely. It is not necessary at all.
- Bottle-feeding may be a direct cause for breastfeeding failure
- If the baby cannot tolerate bottle-feeding or artificial feeding, it can lead to a serious illness
SORKKA VAASAL MAGIMAI (SRI RANGAM)
Thursday, December 10, 2009
இனிய தமிழ் பெயர்கள் - பெண் பால்
நாம் அனைவரும் தமிழன் என்று கூறுங்கள்
பெண் பால்
அகநகை
அகரப்பாவை
அகரம்
அகரச்செல்வி
அகரமுதல்வி
அகமுடைநங்கை
அகமுடைமங்கை
அகரமொழி
அகரமொழியாள்
அகரமொழியரசி
அகராதி
அகல்
அகல்விழி
அகல்விளக்கு
அகவழகி
அகவெழில்
அகவெழிலி
அகில்
அங்கயற்க்கண்ணி
அஞ்செல்லை
அஞ்செல்வி
அணி
அணிகலன்
அணிச்செல்வி
அணிநகை
அணிநிலா
அணிமணி
அணிமதி
அணிமலர்
அணிமாலை
அணிமுத்து
அணிமுல்லை
அணியரசி
அணியழகி
அணியிழை
அணியிழையாள்
அணிவளை
அந்தாழை
அம்முல்லை
அமரி
அமிழ்தம்
அமிழ்தச்செல்வி
அமிழ்தமொழி
அமிழ்தவல்லி
அமுதச்செல்வி
அமுதமொழி
அமுதமொழியாள்
அமுதப்புனல்
அமுதம்
அமுதரசி
அமுதா
அமுதின்பம்
அமுதின்பி
அமுதின்பள்
அமுதிணியாள்
அமுது
அமைதி
அரங்கச்செல்வி
அரங்கநாயகி
அரங்கி
அரசம்மாள்
அரசம்மை
அரசர்க்கரசி
அரசியர்க்கரசி
அரசிறைவி
அரிவை
அரியநாயகி
அருக்காணி
அருஞ்சுடர்
அருஞ்செல்வி
அருண்மொழி
அருன்மொழிதேவி
அருட்கண்ணி
அருட்குவை
அருட்கொடி
அருட்கொடி
அருட்சுடர்
அருட்செல்வம்
அருட்செல்வி
அருட்பா
அருட்பாவரசி
அருட்பாவை
அரும்பொன்
அரும்பொன்னி
அருந்தமிழ்
அருநெறி
அரும்பாவை
அரும்பு
அரும்புமலர்
அருமைச்செல்வி
அருமையரசி
அருவி
அருவிமொழி
அருள்
அருள்தேவி
அருள்நங்கை
அருள்நெறி
அருள்மங்கை
அருள்மணி
அருள்மழையரசி
அருள்முகில்
அருள்மொழி
அருள்வடிவு
அருள்விழி
அருளம்மை
அருளரசி
அருளழகி
அருளிறை
அருளிறைவி
அருளுடைச்செல்வி
அருளுடைநாச்சி
அருளுடைநங்கை
அருளுடைநாயகி
அருளொளி
அல்லி
அல்லிக்கொடி
அல்லிப்பாவை
அல்லிமலர்
அல்லியங்கோதை
அல்லியப்பாவை
அல்லியரசி
அல்லிவிழி
அலர்மேல்மங்கை
அலைகடல்
அலைகடல்வாணி
அலைகடலரசி
அலைமகள்
அலையரசி
அலையழகி
அலைவாணி
அவ்வை
அழகம்மா
அழகம்மாள்
அழகரசி
அழகாண்டாள்
அழகாயி
அழகி
அழகு
அழகுச்செல்வி
அழகுநங்கை
அழகுநாச்சி
அழகுநாயகி
அழகுநிலா
அழகுமணி
அழகுமதி
அழகுமலர்
அழகுமுகில்
அழகுமுத்து
அழகுமொழி
அழகுடைச்செல்வி
அழகுடைநங்கை
அழகெழிலி
அழகொளி
அழகோவியம்
அறச்செல்வி
அறநங்கை
அறநெறியரசி
அறம்
அறவரசி
அறவல்லி
அறவழியரசி
அறவாழி
அறவி
அறவிழி
அறிவம்மை
அறிவரசி
அறிவழகி
அறிவு
அறிவுக்கண்
அறிவுக்கண்ணி
அறிவுக்கனல்
அறிவுக்கனலி
அறிவுக்கனி
அறிவுக்கொடி
அறிவுச்செல்வி
அறிவுச்சுடர்
அறிவுடைச்செல்வி
அறிவுடைநங்கை
அறிவுடைநாச்சி
அறிவுடைநாயகி
அறிவுடையநங்கை
அறிவுடையரசி
அறிவுடையநாயகி
அறிவுமணி
அறிவுமதி
அறிவெழிலி
அறிவொளி
அன்பரசி
அன்பழகி
அன்பு
அன்புக்கரசி
அன்புக்கொடி
அன்புச்சுடர்
அன்புச்செல்வி
அன்புநிலா
அன்புமணி
அன்புமதி
அன்புமலர்
அன்புமொழி
அன்புருவி
அன்புவிழி
அன்பெழிலி
அன்றில்
அன்னம்
அனிச்சம்
அனிச்சமலர்
ஆ
ஆக்கச்செல்வி
ஆக்கமுடையாள்
ஆசைச்செல்வி
ஆசைமொழி
ஆடல்நங்கை
ஆடல்நாயகி
ஆடல்வல்லி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்ச்செல்வி
ஆடற்பாவை
ஆண்டாள்
ஆதிமொழி
ஆதி
ஆதியள்
ஆதிரை
ஆதிரைச்செல்வி
ஆதிரைநங்கை
ஆதிரைனாச்சி
ஆதிரைனாயகி
ஆம்பல்
ஆம்பல்செல்வி
ஆம்பல்மலர்
ஆயிழை
ஆராவமிழ்தம்
ஆராவமுதம்
ஆராவமுது
ஆழ்வாரம்மை
ஆழ்வி
ஆழ்வாள்
ஆழி
ஆழிநங்கை
ஆழிநாச்சி
ஆழிப்பாவை
ஆழிமுத்து
ஆழியஞ்ச்செல்வி
ஆழியமுது
ஆழியரசி
ஆற்றல்
ஆற்றல்நாச்சி
ஆற்றல்நாயகி
ஆற்றலரசி
ஆற்றலழகி
ஆறறிவு
ஆறாயி
ஆறிறைவி
இ
இசை
இசைக்கலை
இசைக்கலைச்செல்வி
இசைக்கலைவாணி
இசைத்தமிழ்
இசைத்தென்றல்
இசைமுகில்
இசைமொழி
இசையமுது
இசையரசி
இசையருவி
இசையன்பு
இசையேந்தி
இசைவாணி
இசைவேட்டாள்
இயல்மொழி
இயல்விழி
இயலரசி
இயலி
இயலிசை
இயற்ச்செல்வி
இயற்கை
இயற்கைச்செல்வி
இயற்கையரசி
இயற்கை விரும்பி
இயற்றமிழ்
இயற்றமிழ் அணங்கு
இயற்றமிழ்நங்கை
இருவாட்சி
இலக்கனச்செல்வி
இலக்கிய அணங்கு
இலக்கிய அரசி
இலக்கிய நங்கை
இலக்கிய மங்கை
இலக்கியமணி
இலக்கியமதி
இலக்கியமலர்
இளங்கன்னி
இளங்காளி
இளங்கிளி
இளங்குமரி
இளங்குயில்
இளங்கொடி
இளங்கோமகள்
இளஞ்சுடர்
இளந்திங்கள்
இளந்தென்றல்
இளந்தேவி
இளநகை
இளநங்கை
இளநவ்வி
இளநிலா
இளம்பாவை
இளம்பிறை
இளமதி
இளமலர்
இளமயில்
இளமான்
இளமுகை
இளவரசி
இளவெயினி
இளவேனில்
இன்சுடர்
இன்நகை
இன்னகை
இன்னிலா
இன்பொளி
இன்பமொழி
இன்பமணி
இன்பவல்லி
இன்பவிழி
இன்பி
இன்முகை
இன்முல்லை
இன்னிசை
இன்னிசை அரசி
இனிமை
இனியவள்
இனியநங்கை
இனியாள்
இறை
இறைச்செல்வி
இறைநங்கை
இறைமலர்
இறைமாலை
இறைமொழி
இறையரசி
இறைவி
ஈ
ஈகச்செல்வி
ஈகமணி
ஈகவரசி
ஈகைவிரும்பி
ஈகைவிழி
ஈதலரசி
ஈரநிலா
ஈழக்கதிர்
ஈழச்சுடர்
ஈழச்செல்வி
ஈழத்தமிழ்
ஈழத்தரசி
ஈழநங்கை
ஈழநிலா
ஈழப்பாவை
ஈழமகள்
ஈழமங்கை
ஈழமணி
ஈழமதி
ஈழமலர்
ஈழமின்னல்
ஈழமுகில்
ஈழமுல்லை
ஈழமேந்தி
ஈழவமுது
ஈழவரசி
ஈழவாணி
உ
உடையாள்
உண்மை
உண்மைமொழி
உண்மையொளி
உண்மைவிளம்பி
உணர்வரசி
உய்யக்கொண்டாள்
உய்யவந்தாள்
உயிர்
உயிரோவியம்
உலக அரசி
உலகநங்கை
உலகநாச்சி
உலகநாயகி
உலகம்மை
உலகமுதல்வி
உலகமொழி
உலகி
உலகுடையாள்
உலகுடைச்செல்வி
உலகுடைநாச்சி
உலகுடைநாயகி
உலகோவியம்
உலகொளி
உவகை அரசி
உவகைச் செல்வி
உவகை மணி
உவகை மலர்
உவப்பி
உள்ளொளி
ஊ
ஊழிமுதல்வி
எ
எயினி
எயினி இளம்பிறை
எல்லம்மாள்
எல்லம்மை
எல்லையம்மா
எல்லையம்மாள்
எல்லையம்மை
எவ்வி
எழில்
எழில் ஆதிரை
எழில் நங்கை
எழில் நாச்சி
எழில்நாயகி
எழில்நிலவு
எழில்நிலா
எழில்மகள்
எழில்மதி
எழில்முதல்வி
எழில்விழி
எழிலம்மை
எழிலரசி
எழிலன்பி
எழிலி
எழிலிறைவி
எழிலோவியம்
எழிற்கண்ணி
எழிற்கொடி
எழிற்செல்வி
எழிற்பாவை
எழினி
எழுகதிர்
எழுஞாயிறு
ஏ
ஏந்திசை
ஏந்திழை
ஏழிசை
ஏழிசைச்செல்வி
ஏழிசைநங்கை
ஏழிசைநாச்சி
ஏழிசைநாயகி
ஏழிசைமுதல்வி
ஏழிசைவல்லி
ஐ
ஐயை
ஐயைஅரசி
ஐயைச்செல்வி
ஐயம்மை
ஐயம்மாள்
ஐவணம்
ஒ
ஒண்டமிழ்
ஒண்டமிழ் அரசி
ஒண்டொடி
ஒண்மதி
ஒப்பனை
ஒப்பிலா அணங்கு
ஒப்பிலா மொழி
ஒப்பிலா மொழியாள்
ஒப்பிலாள்
ஒப்பிலி
ஒலிப்பாவை
ஒளி
ஒளியணங்கு
ஒளிச்செல்வி
ஒளிநங்கை
ஒளிநிலா
ஒளிப்பாவை
ஒளிமங்கை
ஒளிமலர்
ஒளியழகி
ஒளியிழை
ஒளிர்மணி
ஒளிர்மதி
ஒளிவடிவு
ஓ
ஓவி
ஓவியள்
ஓவிய அணங்கு
ஓவிய அரசி
ஓவிய செல்வி
ஓவிய நங்கை
ஓவிய நல்லாள்
ஓவியப்பாமொழி
ஓவியப்பாவை
ஓவிய மொழி
ஓவியா
ஓவியாள்
க
கடலணங்கு
கடலரசி
கடல்நங்கை
கடல்நாச்சி
கடல்நாயகி
கடல்மங்கை
கடலழகி
கடலைம்மை
கடலாயி
கடற்செல்வி
கடற்பாவை
கண்ணகி
கண்ணம்மா
கண்ணம்மை
கண்மணி
கண்ணாத்தாள்
கண்ணொளி
கதிர்ச்செல்வி
கதிர்மணி
கதிர்மதி
கதிரொளி
கயல்விழி
கயற்கண்ணி
கருங்குழலி
கருங்குயிலி
கருத்தம்மா
கருதம்மை
கருத்தம்மாள்
கருப்பாத்தாள்
கருப்பாயி
கரும்புமொழி
கல்வி
கல்விக்கரசி
கல்விச்செல்வி
கல்வியரசி
கலை
கலைக்கண்
கலைக்கண்ணி
கலைக்கவின்
கலைக்காவிரி
கலைக்குயில்
கலைக்குவை
கலைக்கோதை
கலைச்செல்வி
கலைத்தென்றல்
கலைநங்கை
கலைநாச்சி
கலைநாயகி
கலைநிலா
கலைப்பாவை
கலைமகள்
கலைமான்
கலைமொழி
கலைஅணங்கு
கலையரசி
கலைவல்லாள்
கலைவல்லவி
கலைவாணி
கவின்
கவின் அணங்கு
கவின் அரசி
கவின் அழகு
கவின் கலை
கவின் குயில்
கவின் குயிலி
கவின்கோதை
கவின்சிலை
கவிந்தமிழ்
கவின்தேன்
கவின்நங்கை
கவின் நாச்சி
கவின் நாயகி
கவின் நிலா
கவின் நிலவு
கவின்நுதல்
கவின் நுவல்
கவின் மலர்
கவின் மாலை
கவின் மேகலை
கவின் மொழி
கவினி
கன்னல்
கன்னல் மொழி
கன்னலமுது
கனல்
கனலி
கனிச்சாறு
கனிமொழி
கா
காக்குனாயகி
காக்கைபாடினி
காமக்கண்ணி
காத்தம்மை
காத்தாயி
காத்தாள்
கார்குழலி
கார்முகில்
காரிகை
காரைகாலம்மை
கார் எழிலி
காளி
காளியம்மாள்
காளியம்மை
காளியாயி
காவற்பெண்டு
காவிரி
காவிரிநங்கை
காவிரிநாச்சி
காவிரிநாயகி
காவிரி அரசி
காவிரி அன்னை
காவிரிச் செல்வி
காவிரித் தாய்
காவிரி மகள்
காவிரி மங்கை
காவிரியம்மை
கி
கிள்ளை
கிள்ளை மொழி
கிளிமொழி
கிளியேந்தி
கு
குஞ்சம்மாள்
குடியரசி
குணக்கடல்
குணக்குயில்
குணகோதை
குணக்கோமகள்
குணச்செல்வி
குண நகை
குண நங்கை
குண நாயகி
குனமங்கை
குணமணி
குணமதி
குண மயில்
குண மல்லிகை
குண மலர்
குண மாலை
குணவடிவு
குண வதி
குணவரசி
குணவழகி
குண வாணி
குமரி
குமரிக் கொடி
குமரிச்செல்வி
குமரி நங்கை
குமரி நாச்சி
குமரி நாயகி
குமரி மதி
குமுதம்
குயில்
குயில் மொழி
குயிலி
குலக்கொடி
குலக்கோதை
குலச்செல்வி
குலமகள்
குலமணி
குலம்விளக்கி
குழந்தை
குழந்தையம்மாள்
குழலி
குறள் அன்பு
குறள் ஒளி
குறள் செல்வி
குறள் நங்கை
குறள் நெறி
குறள் செல்வி
குறள் மங்கை
குறள் மதி
குறள் மொழி
குறள் வாணி
குறள்வாய் மொழி
குறளமுது
குரளன்பு
குறளிசை
குறளியம்பி
குறளோதி
குறிஞ்சி
குறிஞ்சி அரசி
குறிஞ்சிக் குமரி
குறிஞ்சிக் கோதை
குறிஞ்சிச் செல்வி
குறிஞ்சிநங்கை
குறிஞ்சிநாச்சி
குறிஞ்சிநாயகி
குறிஞ்சி மங்கை
குறிஞ்சி மணி
குறிஞ்சி மலர்
குறிஞ்சியழகி
கூ
கூடல் நாயகி
கூடலஅழகி
கூந்தலழகி
கூர்வாள் விழி
கூர்வாளொளி
கூர்விழி
கூர்வேலழகி
கூர்வேள்
கூவிளம்
கூன்பிறை
கூன்பிறைனுதலி
கொ
கொங்கச்செல்வி
கொங்கவள்ளி
கொங் இளங்குமரி
கொங்கிளவள்ளி
கொங்கு நங்கை
கொங்கு நாச்சி
கொங்கு நாட்டரசி
கொங்கு நாயகி
கொங்கு மங்கை
கொடி
கொடி மலர்
கொண்டல்
கொண்டல் நாயகி
கொந்தலர்க் குழலி
கொந்தலர்க் கோதை
கொல்லிப் பாவை
கொழுந்து
கொள்கை அணங்கு
கொள்கை மங்கை
கொற்றவை
கொன்றை
கொன்றைசூடி
கொன்றை மலர்
கொன்றையங்குழலி
கோ
கோங்கமலர்
கோதை
கோதைநாயகி
கோதையம்மாள்
கோபெருஞ் செல்வி
கோப் பெருந்தேவி
கோமகள்
கோயில்நாச்சி
கோயில்நாயகி
கோலவழகு
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோவைமோழி
ச
சங்கு
சண்பகம்
சந்தனம்
சந்தனச்சிந்து
சமரி
சா
சாத்தம்மை
சாத்தி
சாலி
சாலினி
சி
சிட்டுமொழி
சித்திரம்
சித்திரச் செந்தாழை
சித்திரச் செல்வி
சித்திர பாவை
சிந்தனை
சிந்தனை அணங்கு
சிந்தனை அரசி
சிந்தனை செல்வி
சிந்தனை நங்கை
சிந்தனைமங்கை
சிந்தனைமணி
சிந்தனைமதி
சிந்தனைமலர்
சிந்தாமணி
சிந்து
சிந்துமொழி
சிந்தை மொழி
சிரிப்பழகி
சிலம்பணங்கு
சிலம்பரசி
சிலம்பாயி
சிலம்பு
சிலம்புச்செல்வி
சிலம்பு நங்கை
சிலம்பு நாச்சி
சிலம்பு நாயகி
சிலம்பு மங்கை
சிலம்புமணி
சிலம்பொலி
சிலை
சிவச்செல்வி
சிவந்தி
சிவப்பி
சிவமாலை
சிவமொழி
சின்னத்தாய்
சின்னம்மை
சீ
சீர்சால் நங்கை
சீர்த்தி
சீர்திருத்தி
சீர்மொழி
சீர் மொழியாள்
சீர்விழி
சு
சுடர்
சுடர்க்கொடி
சுடர்ச்செல்வி
சுடர்நங்கை
சுடர்நங்கை
சுடர்நுதல்
சுடர்மங்கை
சுடர் மதி
சுடர்மணி
சுடர் விழி
சுடரொளி
சுரும்பார்க்குழலி
சுரிகுழலி
சூ
சூடாமணி
சூடாமலர்
சூடாமாலை
செ
செங்கண்ணி
செங்கதிர்
செங்கதிரொளி
செங்கயல்
செங்கனி
செங்காந்தள்
செங்கொடி
செஞ்சுடர்
செந்தமிழ்
செந்தமிழ் அணங்கு
செந்தமிழ் கோதை
செந்தமிழ்ச் செல்வி
செந்தமிழ்த் தாய்
செந்தமிழ்நங்கை
செந்தமிழ்நாச்சி
செந்தமிழ்நாயகி
செந்தமிழ்மங்கை
செந்தமிழ்மணி
செந்தமிழ்மதி
செந்தமிழ்மலர்
செந்தமிழ்மாலை
செந்தமிழ் அரசி
செந்தளிர்
செந்தாமரை
செந்தாமரைஅரசி
செந்தாமரைவாணி
செந்தாழை
செந்திரு
செந்திருநங்கை
செந்திருநாச்சி
செந்திருநாயகி
செந்திருநாவரசி
செந்திருவரசி
செந்தில்
செந்தில்செல்வி
செந்தில்நங்கை
செந்தில்நாச்சி
செந்தில்நாயகி
செந்தில்வடிவு
செந்தில் அரசி
செந்நா
செந்நாவி
செந்நிலம்
செந்நிலா
செம்பியன்மாதேவி
செம்பிறை
செம்பை
செம்மண் செல்வி
செம்மணி
செம்மதி
செம்மலர்
செம்மனச் செல்வி
செம்முல்லை
செம்மை
செம்மைச் செல்வி
செம்மை நங்கை
செம்மைனாச்சி
செம்மைமங்கை
செம்மை மதி
செம்மைமலர்
செம்மையணங்கு
செம்மையரசி
செம்மொழி
செம்மொழிச்செல்வி
செம்மொழிநங்கை
செம்மொழிநாச்சி
செம்மொழிநாயகி
செம்மொழிமங்கை
செய்தவம்
செய்யவள்
செல்லக்குயில்
செல்லக்குயிலி
செல்லக்குடி
செல்லச்செல்வி
செல்லநங்கை
செல்லம்
செல்லம்மாள்
செல்லம்மை
செல்லமங்கை
செல்லமணி
செல்லமதி
செல்லமலர்
செல்வ அணங்கு
செல்வ அரசி
செல்வகலை
செல்வக்காவிரி
செல்வக்குயில்
செல்வக்குயிலி
செல்வக்கொடி
செல்வச்சுடர்
செல்வச்செல்வி
செல்வத்தரசி
செல்வத்திரு
செல்வநங்கை
செல்வநாச்சி
செல்வநாயகி
செல்வமங்கை
செல்வமணி
செல்வமதி
செல்வமலர்
செல்வி
செல்வியரசி
செவ்வந்தி
செவ்வந்திமணி
செவ்வல்லி
செவ்விழி
செவ்விழி அணங்கு
செவ்விழிக் கொடி
செவ்விழிச் செல்வி
செவ்விழி நங்கை
செவ்விழி மங்கை
சே
சேயிழை
சேரமாதேவி
சேல்விழி
சேல்விழியாள்
சொ
சொக்கம்மாள்
சொக்கி
சொல்லமுது
சொல்லரசி
சொல்லழகி
சொல்வல்லாள்
சொல்விளம்பி
சொல்லின்செல்வி
சொல்லின் நாச்சி
சொல்லின் நாயகி
சோ
சோலை
சோலையம்மை
சோலையரசி
சோழக்குலமணி
சோழகுலவல்லி
சோழநாச்சி
சோழநாயகி
சோழமங்கை
சோழன்மாதேவி
ஞா
ஞாயிறு
ஞாயிறுமொழி
ஞாலம்
ஞால அரசி
ஞாலச் செல்வி
ஞால நங்கை
ஞால மங்கை
ஞால முதல்வி
ஞாலமுதல்வி
த
தங்கம்
தங்கத்தை
தங்கம்மா
தங்கம்மா
தங்க மலர்
தங்கமணி
தங்கமாலை
தடங் கண்ணி
தண் கோதை
தண்டமிழ்
தண்டமிழ்ச்செல்வி
தண்டாமரை
தண்ணளி
தண்ணிலா
தண்ணொளி
தண்மதி
தண்மலர்
தமிழ்
தமிழ் எழிலி
தமிழ்க் குயில்
தமிழ்க் குறள்
தமிழ்க் கொடி
தமிழ் கொடி
தமிழ்க் கோதை
தமிழ்ச் சிட்டு
தமிழ்ச் செல்வி
தமிழ்ச்சோலை
தமிழ்த்தென்றல்
தமிழ்நங்கை
தமிழ்நாச்சி
தமிழ்நாயகி
தமிழ்நாவள்
தமிழ்நாவி
தமிழ்நெஞ்சம்
தமிழ்ப்பாவை
தமிழ்ப்பொழில்
தமிழ்மங்கை
தமிழ்மணம்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மலர்
தமிழ்மாலை
தமிழ்முல்லை
தமிழ்வல்லி
தமிழணங்கு
தமிழமுது
தமிழரசி
தமிழருவி
தமிழிசை
தமிழின்பம்
தமிழினி
தலைமதி
தலைவி
தவமணி
தன்மானம்
தனிக்கொடி
தா
தாமரை
தாமரைக்கண்ணி
தாமரைக்கனி
தாமரைகன்னி
தாமரைச் செல்வி
தாயங்கண்ணி
தாயம்மாள்
தாயம்மை
தாழ்குழலி
தாழை
தாழைக்குழலி
தாழைச்செல்வி
தாழைநங்கை
தாழைமலர்
தாழைமங்கை
தி
திங்கட் செல்வி
திணைமாலை
திரு
திருச் செல்வி
திருநங்கை
திருநுதல்
திருப்பாவை
திருமங்கை
திருமகள்
திருமடந்தை
திருமலர்
திருமலைக்குமரி
திருமாலை
திருமொழி
திருவம்மாள்
திருவம்மை
திருவரசி
திருவருள்
திருவளர்ச்செல்வி
திருவளர்நங்கை
திருவளர்நாச்சி
திருவளர்நாயகி
திருவாய்மொழி
திருவாய்மொழி
திருவாயி
திருவாள்
திருவெழிலி
திருவொளி
தில்லை
தில்லைக்கரசி
தில்லைச் செல்வி
தில்லை நங்கை
தில்லைநாச்சி
தில்லைநாயகி
தீ
தீங்கரும்பு
தீங்குயிலி
தீங்குழலி
தீஞ்சொல்
தீந்தமிழ்
தீந்தமிழ் அணங்கு
தீந்தமிழ் அரசி
தீந்தமிழ் செல்வி
து
துடியிடை
தும்பை
தும்பைச் செல்வி
தும்பைமலர்
துளசி
துளசிமணி
துளசிமாலை
துளசியம்மாள்
துளசியம்மை
thoo
தூயமணி
தூயமலர்
தூயவள்
தெ
தெய்வச்சிலை
தென்குமரி
தென்குமரிதேவி
தென்மொழி
தென்றமிழ்
தென்றமிழ்க் கோதை
தென்றமிழ்ச் செல்வி
தென்றமிழநங்கை
தென்றமிழ்நாயகி
தென்றமிழ்ப்பாவை
தென்றல்
தென்றல்தமிழ்
தென்றல்மகள்ள்
தென்றல்மொழி
தென்றலரசி
தென்னவன்மாதேவி
தென்னவள்
தென்னிறைவி
தே
தேம்பாவணி
தேமலர்
தேமொழி
தேமொழியாள்
தேவி
தேன்
தேன்கதலி
தேன்குழலி
தேன்நிலா
தேன்மலர்
தேன்மொழி
தேனம்மை
தேனமுதி
தேனரசி
தேனருவி
தேனாண்டாள்
தொ
தொல்மொழியரசி
தொல்மொழியால்
தோ
தோகைமயிளால்
தோழமைச் செல்வி
தோழி
தை
தையல்
தையல்நாயகி
தையலம்மாள்
ந
நகைமுகன்
நகையாள்
நங்கை
நங்கையர்கரசி
நச்செள்ளை
நடன அரசி
நடனச் செல்வி
நடனநங்கை
நடனப்பாவை
நடனமங்கை
நடையழகி
நடைஎழிலி
நந்தா தேவி
நந்தா மணி
நந்தா விளக்கு
நப்பசலை
நப்பின்னை
நல்ல நாயகி
நல்லம்மாள்
நல்ல மங்கை
நல்லரசி
நல்லவள்
நல்லாயி
நல்லினி
நல்லெழிலி
நல்லுருவி
நலங்க்குமரி
நற்கண்ணி
நற்குணத்தி
நற்குணதேவி
நற்குமரி
நற்கோதை
நற்செல்வி
நற்பொலிவு
நற்றமிழ்
நற்றிணை
நறுநுதல்
நறுவிழி
நன்நங்கை
நன்மடந்தை
நன்மதி
நன்மலர்
நன்மாது
நன்முல்லை
நன்னங்கை
நா
நாகம்மை
நாகவரசி
நாகவல்லி
நாச்சியார்
நாமகள்
நாமடந்தை
நாமணி
நாயகி
நாவம்மை
நாவரசி
நாவின் கிழத்தி
நாவுக்கரசி
நி
நித்திலின்பி
நித்திலம்
நித்திலக்கோவை
நித்திலச் சுடர்
நித்தில நாயகி
நில மடந்தை
நிலவரசி
நிலவழகி
நிலவு
நிலவுச்செல்வி
நிலவு நங்கை
நிலவு நாச்சி
நிலவு நாயகி
நிலவு மங்கை
நிலவு மடந்தை
நிலவொளி
நிலாச்சுடர்
நிலாச் செல்வி
நிலா நங்கை
நிலாப் பெண்
நிலா மங்கை
நிலாமணி
நிலாமலர்
நிலாமுகம்
நிலாவரசி
நிறை
நிறைகுணம்
நிறைகுணவடிவு
நிறைகுணவழகு
நிறைச் செல்வி
நிறைநாச்சி
நிறைநாயகி
நிறைமகள்
நிறைமங்கை
நிறைமணி
நிறைமதி
நிறைமலர்
நிறைமொழி
நிறையறிவு
நிறையுணர்வு
நீ
நீண்மலர்
நீர்ச்செல்வி
நீர்ப்பூ
நீர்மலர்
நீலம்மாள்
நீலம்மை
நீலமணி
நீலமலர்
நீள்குழலி
நீள் விழி
நு
நுண்ணறிவால்
நுதலி
நுதர்ப்பிறை
நெ
நெஞ்சுக்கிணியால்
நெய்தல்
நெய்தல் செல்வி
நெய்தல் நங்கை
நெய்தல் நாச்சி
நெய்தல் நாயகி
நெய்தல் நிலா
நெய்தல் மங்கை
நெய்தல் மடந்தை
நெய்தல் மணி
நெய்தல் மலர்
நெயதலணங்கு
நெய்தல் அரசி
நெய்தல் அழகி
நெல்லைச் செல்வி
நெல்லை நங்கை
நெல்லை நாச்சி
நெல்லை நாயகி
நெல்லையம்மை
நெற்செல்வி
நே
நேய அரசி
நேயச் செல்வி
நேய நங்கை
நேய மணி
நேய மணி
நேய மலர்
நேயமதி
நேயமழை
நேர் இழை
ப
பகுத்தறிவு
பச்சைக்கொடி
பச்சையம்மாள்
பச்சையம்மை
பட்டம்மாள்
பட்டு
பண்ணரசி
பண்ணார் மொழி
பண்பரசி
பண்பழகி
பண்புச் செல்வி
பண்பு நங்கை
பண்புனாச்சி
பண்பு நாயகி
பண்பு மலர்
பண்பு மொழி
பண்பெழிலி
பதுமை மலர்
பழகு தமிழ்
பவழக் கொடி
பவழத்தாள்
பவழம்
பவழம்மை
பவழமலர்
பவழமணி
பவழமல்லி
பவழமொழி
பவழவல்லி
பவழாத்தாள்
பவழாயி
பன்னீர்ப் பாவை
பனிமலர்
பனிமொழி
பா
பாட்டரசி
பாட்டுச் செல்வி
பாட்டு நாயகி
பாடகி
பாடவல்லநாயகி
பாடவல்லாள்
பாடவல்லி
பாண்டிமாதேவி
பாமகள்
பாவரசி
பாவாணி
பாவை
பி
பிச்சிப்பூ
பிச்சிமலர்
பிறை
பிறைக்கண்ணி
பிறைச்சுடர்
பிறைசூடி
பிறை நிலா
பிறை நுதல்
பிறை மதி
பிறை ஒளி
பு
புகழரசி
புகழ்க்கொடி
புகழ்ச்சுடர்
புகழ்ச்சூடி
புகழ்ச்செல்வி
புகழ் நங்கை
புகழ்நாச்சி
புகழ் நாயகி
புகழ் மங்கை
புகழ்மதி
புகழ்மலர்
புகழ் மாலை
புகழி
புத்தெழிலி
புத்தொளி
புதுப்பாவை
புதுமலர்
புதுமை
புதுமைச் செல்வி
புதுமை மொழி
புதுமையரசி
புதுமை விரும்பி
புதுமொழி
புரட்சி
புரட்சிக்கனல்
புரட்சிக்கொடி
புரட்சிச்செல்வி
புரட்சி நங்கை
புரட்சி மங்கை
புரட்சி மலர்
புரட்சியேந்தி
புலிக்கொடி
புன்னகை
புன்னகை அரசி
புன்னகைச் செல்வி
புன்னகை நங்கை
புன்னகைநாச்சி
புன்னகை நாயகி
புன்னகைமங்கை
புன்னகை மலர்
புனையா ஓவியம்
பூ
பூங்கண்ணி
பூங்கதிர்
பூங்கயல்
பூங்கிளி
பூங்குயில்
பூங்குழலி
பூங்கொடி
பூங்கோதை
பூச்செண்டு
பூஞ்செல்வி
பூஞ் சோலை
பூண் thamizh
பூந்தழல்
பூந்தளிர்
பூந்தாழை
பூம்பாவை
பூம்புனல்
பூம்போது
பூம்பொழில்
பூமகள்
பூமங்கை
பூமடந்தை
பூமொழி
பூவம்மாள்
பூவரசி
பூவழகி
பூவாத்தாள்
பூவாணி
பூவாயி
பூவிருந்தாள்
பூவிழி
பூவின்கிழத்தி
பூவை
பெ
பெண்ணணங்கு
பெண்ணரசி
பெண்ணின் நல்லாள்
பெண் நல்லாள்
பெரிய நாச்சி
பெரியநாயகி
பெரியாள்
பெருங்கண்ணி
பெருங்கவினி
பெருங்கோப்பெண்டு
பெருஞ்சித்திரம்
பெருஞ்செல்வி
பெருந்தேவி
பெருமகள்
பெருமங்கை
பெருமடந்தை
பெருமாட்டி
பே
பேச்சி முத்து
பேச்சியம்மை
பேரணங்கு
பேரரசி
பேரரழகி
பேரெயினி
பேரெழில்
பேரொளி
பேரோவியம்
பை
பைங்கிளி
பைங்கொடி
பைந்தமிழ்
பைந்தமிழ்ச்செல்வி
பைந்தமிழ்நங்கை
பைந்தமிழரசி
பைந்தொடி
பைம்புனல்
பொ
பொங்கெழில்
பொய்யாமொழி
பொழில் நிலவு
பொற்குழலி
பொற்கொடி
பொற்சிலம்பி
பொற்சிலை
பொற்செல்வி
பொற்பாவை
பொற்றாமரை
பொன் நங்கை
பொன்நாச்சி
பொன்நாயகி
பொன்மங்கை
பொன்மடந்தை
பொன்மணி
பொன்மதி
பொன்மயில்
பொன்மலர்
பொன்மான்
பொன்மொழி
பொன்னம்மை
பொன்னரசி
பொன்னழகி
பொன்னாத்தாள்
பொன்னாள்
பொன்னி
பொன்னுத்தாய்
பொன்னெழில்
போன்னேழிலி
ம
மகிழ் malar
மகிழ் மொழி
மகிழ் அணங்கு
மகிழம்பூ
மகிழரசி
மகிழினி
மங்கலம்
மங்கலச் செல்வி
மங்கலநாச்சி
மங்கலநாயகி
மங்கலமங்கை
மங்கல மடந்தை
மங்கலமொழி
மங்கை
மங்கையர்க்கரசி
மங்கையர் திலகம்
மஞ்சு
மடந்தை
மணவழகி
மணவெழிலி
மணி
மணிச் சுடர்
மணிமாலை
மணிமுடி
மணிமேகலை
மணிமொழி
மனியரசி
மணியொளி
மணியோசை
மணிவிளக்கு
மதி
மதிச்சுடர்
மதிமகள்
மதிமங்கை
மதிமடந்தை
மதி மலர்
மதிமுகத்தி
மதிமுகம்
மதி மொழி
மதி அணங்கு
மதியரசி
மதி அழகி
மதிஒளி
மயில்
மயில் விழி
மயிலம்மை
மயிலாத்தாள்
மயிலாள்
மயிலைச் செல்வி
மயிலை நாயகி
மருதச்செல்வி
மருதநாச்சி
மருத நாயகி
மருதம்
மருதம்மாள்
மருதம்மை
மருதரசி
மருதவாணி
மருதாயி
மருதி
மல்லிகை
மல்லிகைச் செல்வி
மலர்
மலர்க்கண்ணி
மலர்க்கொடி
மலர்க்குழலி
மலர்க்கோதை
மலர்ச் செல்வி
மலர் நங்கை
மலர்ப பதுமை
மலர்ப் பாவை
மலர் மங்கை
மலர் மணி
மலர்மாலை
மலர்மதி
மலர்முகம்
மலர்விழி
மலரரசி
மலரழகி
மலரி
மழைச்செல்வி
மழைநங்கை
மழையரசி
மன்றலரசி
மா
மாக்கவின்
மாகவினி
மாகாளி
மாசாத்தி
மாண்பு
மாண்பெழிலி
மாணிக்கநாச்சி
மாணிக்கநாயகி
மாணிக்கம்
மாணிக்க மொழி
மாதவி
மாதரசி
மாதேவி
மாந்தளிர்
மாநிலா
மாமலர்
மாரி
மாரியம்மாள்
மாரியம்மை
மாரியரசி
மாரியழகி
மாரியாயி
மாலினி
மாலை
மாலைச் சுடர்
மாலை மதி
மாவடுவிழி
மாவிழி
மான்விழி
மி
மின்மினி
மின்விழி
மின்னல்
மின்னலழகி
மின்னற்கொடி
மின்னொளி
மீ
மீன்கண்ணி
மீன்கொடி
மீன்விழி
மீனம்மாள்
மீனம்மை
மீனார்க்கண்ணி
மீனாள்
மு
முகில்
முகில் செல்வி
முகில் நங்கை
முகில் நாச்சி
முகில் நாயகி
முகில் நிலா
முகில் நிலவு
முகில் வண்ணம்
முகில்வாணி
முகிலணங்கு
முகிலரசி
முகிலழகி
முகிழ்நங்கை
முகிழ்நாச்சி
முகிழ்நாயகி
முகிழ்நிளவு
முகிழ்நிலா
முகிழ்மதி
முகிழ்மலர்
முத்தம்மா
முத்தம்மாள்
முத்தமிழ்
முத்தமிழ் அரசி
முத்தமிழ்ச் செல்வி
முத்தமிழ் நாச்சி
முத்தமிழ் நாயகி
முத்தமிழ்ப் பாவை
முத்தரசி
முத்தழகி
முத்தாயி
முத்தாரம்
முத்து
முத்துக்குமரி
முத்துச்செல்வி
முத்தெழிலி
முத்து நகை
முத்து நங்கை
முத்து நாச்சி
முத்து நாயகி
முத்து பேச்சி
முத்து மங்கை
முத்துமணி
முத்து மலர்
முத்துமாரி
முத்துமாலை
முதுமொழி
முதல்வி
முப்பாலிகை
முரசொலி
முருகச்செல்வி
முருகநாயகி
முருகம்மாள்
முருக வடிவு
முருகு
முருகெழிலி
முல்லை
முல்லைக் கொடி
முல்லைச் செல்வி
முல்லை நாச்சி
முல்லை நாயகி
முல்லை மலர்
முழு நிலா
முழு நிறை
முழுமதி
மெ
மெயநங்கை
மெய் நாயகி
மெய்ம் மொழி
மெய்யஅணங்கு
மெய்யன்பு
மெய்யாள்
மெய் எழிலி
மே
மேகலை
மேகலைச்செல்வி
மை
மைத்தகுமேனி
மைவிழி
மைவிழிச்செல்வி
மைவிழிமங்கை
மொ
மொய்குழலி
மொழிமுதல்வி
மொழிவிரும்பி
மொழியரசி
மொழியறிவு
யா
யாழ்ச்செல்வி
யாழ்நங்கை
யாழ்நாயகி
யாழ்மங்கை
யாழ்மணி
யாழ்மதி
யாழ்மலர்
யாழ்மொழி
யாழஅணங்கு
யாழரசி
யாழிசை
யாழினி
யாழ்யேந்தல்
யாழேந்தி
வ
வஞ்சி
வஞ்சிக்கொடி
வஞ்சிப்பாவை
வஞ்சியம்மா
வஞ்சியரசி
வடிவம்மை
வடிவு
வடிவுக்கரசி
வடிவுநங்கை
வடிவுடைநாச்சி
வடிவுடைநாயகி
வண்டார்குழலி
வண்ணச்செல்வி
வண்ணமகள்
வண்ணமங்கை
வண்ணமடந்தை
வண்ணமதி
வண்ணமயில்
வண்ணமாலை
வயிரச்செல்வி
வயிரத்தங்கம்
வயிரத்தாய்
வயிரநங்கை
வயிர நெஞ்சால்
வயிரம்
வயிரமகள்
வயிரமங்கை
வயிரமணி
விரைமலர்
வயிரமுத்து
வயிரமொழி
வல்லரசி
வல்லவள்
வல்லி
வலம்பரிமுத்து
வள்ளி
வள்ளிநாச்சி
வள்ளிநாயகி
வள்ளியம்மாள்
வள்ளுவச்செல்வி
வள்ளுவமொழி
வளர்அறிவு
வளர்சிந்து
வளர்செல்வம்
வளர்செல்வி
வளர்நங்கை
வளர்தமிழ்
வளர் பிறை
வளர்மதி
வளர்மொழி
வளவி
வா
வாகை
வாகைஅணங்கு
வாகைஅரசி
வாகைக்கொடி
வாகைச்செல்வி
வாகைச்சூடி
வாகைநங்கை
வாகைநாச்சி
வாகைநாயகி
வாகைமங்கை
வாகைமடந்தை
வாகைமணி
வாகைமதி
வாகைமலர்
வாகைமொழி
வாகைவாணி
வாடாமல்லிகை
வாடாமலர்
வாணி
வார்க்குழலி
வாலைக்குமரி
வாழ்வரசி
வாழவைத்தாள்
வான்குயில்
வான்நிலவு
வான்மங்கை
வான்மடந்தை
வான்மதி
வான்மதியழகி
வான்மழை
வான்மழைதங்கம்
வான்மழைத்தாய்
வான்முகில்
வானம்பாடி
வானமங்கை
வானருவி
வானமாதேவி
வானிலா
வி
விடியல்
விடிவெள்ளி
விடுதலை
விடுதலைக்கனல்
விடுதலைக்கொடி
விடுதலைச் செல்வி
விடுதலை நங்கை
விடுதலை நாச்சி
விடுதலை நாடி
விடுதலை மங்கை
விடுதலை மதி
விடுதலை மலர்
விடுதலையரசி
வியன்செல்வி
வியன்மங்கை
வியன்நங்கை
வியன்மணி
வியன்மலர்
வியனரசி
வியனழகி
வில்நுதல்
விழாநாச்சி
வீ
வீரஅணங்கு
வீரஅரசி
வீரக்கண்
வீரக்கண்ணி
வீரச்செல்வி
வீரத்தாய்
வீரநங்கை
வீரநாச்சி
வீரநாயகி
வீரப்பெரும்பெண்
வீரம்மாள்
வீரமகள்
வீரமங்கை
வீரமடந்தை
வீரமதி
வீரமலர்
வீரமறத்தி
வீரமாதேவி
வீராயி
வெ
வெண்கொடி
வெண்டாமரை
வெண்ணிலா
வெண்மணி
வெண்மதி
வெண்மலர்
வெண்மை
வெள்ளி
வெள்ளிச்செல்வி
வள்ளியம்மை
வெள்ளைச்சி
வெள்ளையம்மாள்
வெற்றி
வெற்றிச்செல்வி
வெற்றித்தங்கம்
வெற்றித்தாய்
வெற்றிநங்கை
வெற்றினாச்சி
வெற்றிநாயகி
வெற்றிமங்கை
வெற்றிமடந்தை
வெற்றிமணி
வெற்றிமதி
வெற்றிமலர்
வெற்றிமொழி
வெற்றியரசி
வெற்றியழகி
வெற்றிவேங்கை
வே
வேங்கையரசி
வேண்மாள்
வேம்பரசி
வேம்பு
வேல்கண்ணி
வேல்செல்வி
வேல்தாய்
வேல்நங்கை
வேல்மங்கை
வேல்விழி
வேலம்மாள்
வேழரசி
வேலாயி
வேனில்
வேநிழரசி
வை
வைகறை
வைகறைச்செல்வி
வைகறைவாணி
வைகை
வைகைச்செல்வி
வைகைநாச்சி
வைகைநாயகி
வையகமணி
வையத்தரசி
வையை
வையை அரசி
வையைச்செல்வி
வையைத்தங்கம்
வையைநங்கை
வையைமகள்
வையைமணி
வையைமணி
அன்புடன்:
இரா. அழகிரி
+919443372460௦
+919791661189