AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, April 24, 2010

நாத்திகம் என்பது - தந்தை பெரியார்



பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

நாத்திகம் என்பது

நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சி - ஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

ஒருவனை ஒருவன் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாத்திகமாகும். கடவுளைச் சரியாக அறியாததே யாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாத்திகர்களாவர். கடவுள் இருந்தால் ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்கவாவது முடியுமா? ஆகவே நாத்திகம், நாத்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளேயாகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்தக் கவலையே இருக்க நியாயமில்லை.

நாத்திகன் ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை என்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு
சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.



நாத்திகத்தின் பிறப்படம்

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரியத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தை செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

1 comment:

  1. நினைவு நாட்கள் பகுத்தறிவா?

    இப்படி இதற்கு என்று ஒரு நாட்களை பகுத்து யார்?
    வியாபாரம் பெருக வேண்டும் என்று வியாபாரிகள் உருவாக்குவதே இத்தகைய நினைவு நாட்கள் ,

    அதனை மற்றவர்களுக்கு பரப்புரை செய்யும் நீங்கள் ஒரு பகுத்தறிவாளனா !!!!!!


    சிந்தித்து செயல்படுங்கள்


    முதலில் பகுத்தறிவு என்றால் என்ன

    பகுத்து அறிவது, ( இது நல்லது இது அறிவுக்கு அப்பாற்பட்டது என்று பகுத்து அறிவது என்று கூறுவீர்கள்.)

    சரி உங்களுடய கருத்துக்கே வருவோம் !!!!

    இது நல்லது என்று எதனை வைத்து கூறுகிறீர்கள்
    இது கெட்டது/அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எதனை வைத்து கூறுகிறீர்கள்

    நான் சொல்லட்டுமா !!!

    உங்கள் அறிவு எதனை நல்லது என்று சொல்கிறதோ அதனை ஏற்றுகொல்வீர்கள்.

    உங்களுடைய அறிவு எதனை கெட்டது/அறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்கிறதோ அதனை எற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

    சரி உங்களுடைய அறிவு சொல்லும் "கெட்டது/அறிவுக்கு அப்பாற்பட்டது" என்று சொல்லும் விடயத்தை - கொஞ்சம் (நீங்கள் சொல்லும்)பகுத்தறிவோடு சிந்தித்து பார்த்ததுண்டா.....

    ஒரு சிறிய உதாரணம் :

    1. பேரண்டம் தோன்றிய விதம்
    அன்று
    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், பேரண்டம் தோன்றவில்லை , அது அது அப்படியே இயற்கையாக அமைந்தது என்று சொல்லிகொண்டிருந்த உங்களின் பகுத்து அறியும் அறிவு ......

    இன்று
    அந்தர் பல்டி அடித்து , ஆமாம் தானாக தோன்ற வில்லை , ஓர் பெருவெடிப்பு உண்டாகி அதன் மூலம் தான் தோன்றியது என்ற இன்று ஒத்துகொண்டாயிற்று !!!!!!

    கேள்வி1: அந்த பகுத்து அறியும் அறிவின் நிலை அன்று என்ன ஆயிற்று ??????

    நாளை:

    உங்கள் பகுத்து அறியும் அறிவிற்கு மற்றொரு கேள்வி .
    இந்த பேராண்டம் தோன்ற காரணமான அந்த பெருவெடிப்பின் காரணி - அந்த மைக்ரோ சிறிய அணு எங்கிருந்து வந்தது ?????

    ௨. டார்வின் கொள்கை - மனிதன் தோன்றிய விதம் :

    அன்று
    மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் :
    ஆமாம் என்று உங்களின் பகுத்து அறியும் அறிவு சொல்லிகொண்டிருந்தது ....

    இன்று :
    JENE - & DNA டெக்னாலஜி மூலம்,
    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது ........
    டார்வின் தியரி பொய் என்று நிரூபணம் ஆகி ,
    நாம் அனைவரும், ஒரு தாய் , ஒரு தந்தையின் மூலம் தான் பிறந்தவர்கள், என்பது நிரூபணம் ஆகி விட்டது ....

    இப்போது என்ன சொல்ல போகிறது உங்களின் பகுத்து அறியும் அறிவு ....

    கடவுள் என்ற சக்தி இல்லாமல் இந்த பிரபஞ்சம், இவ்வளவு துல்லியமாக இயங்கிக்கொண்டு இருக்காது , பகுத்து அறியும் நம் அறிவுக்கு , நாம் என்ன என்ன கண்டுபிடிகின்றோமோ அதனை மட்டும் தான் ஏற்றுகொல்வேன், என்று பிடிவாதம் பிடிப்பது உண்மையான பகுத்தறிவு இல்லை !!!!!!!
    நமது அறிவுக்கு, நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டு ,

    மனிதனின் நன்மைக்காக இந்த பிரபஞ்சத்தில் இறைவன் எவ்வளவோ செய்து வைத்திருகின்றான் , அவை அனைத்தையும் மனிதன் இந்த சிறிய அறிவை கொண்டு கண்டு பிடித்ததற்கு பிறகு தான் ஏற்றுகொள்வேன் ! என்றால் இது பகுத்தறிவு ஆகாது !

    கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை சொல்பவர்கள் சொல்லை அப்படியே கேட்காமல் கொஞ்சம் அவர்கள் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என்பதனை பகுத்து அறிவீர் !!!


    எனவே சிந்திபீர், விழித்துகொல்வீர் ! பகுத்து அறியும் அறிவை கொண்டு சிந்திபீர் !!!

    ReplyDelete