AZHAGIRI.R

AZHAGIRI.R

Wednesday, January 6, 2010

இராசி பலன் --- HOROSCOPE



இராசி பலன்



நாளிதழ் ஒன்றைப் பிரிக்கின்ற ஒருவர் அன்று அவரது ராசிக்கு என்ன பலன் என்பதைப் பார்க்கிறார் ------ வார ராசி பலன் பார்க்கிறார் ------ பெரும்பாலும் பாதகமான குறிப்புகளைப் பலன்களாக எழுதுவதில்லை; எந்த ராசிக்காரராக இருந்தாலும் அவருக்குச் சாதகமான பலன்களே பெரும்பாலும் காணப் படும் ------- "இந்த ராசிக்காரர் மேலதிகாரிகளிடத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும், இன்னின்ன கிரகங்கள் இன்னின்ன இடங்களில் இருப்பதால் மேலதிகாரி கோபப்பட்டாலும் இந்த ராசிக்காரர் அதனை எளிதில் சமாளித்து விட முடியும்" --- என்பது போல் பலன்கள் சொல்லப்பட்டிருக்கும்.



இந்த பலன்களைப் படிக்கின்ற ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர் தனக்குப் பாதகமாகப் சொல்லப்பட்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சாதகமாகச் சொல்லப்பட்டுள்ள குறிப்பைப் படித்து அதனால் சமாதானம் அடைகிறார். எந்த வாரத்தில் ராசி பலனைப் படித்தாலும் படிப்பவர் எந்த ராசிக்காரராக இருந்தாலும் அவர் சமாதானம் அடைந்து கொள்ளத் தகுந்தவாறே பெரும்பாலும் பலன் சொல்லப்படுகிறது.



ஆழ்ந்த பகுத்தறிவு இல்லாதவர்கள், பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்களால் குழப்பமான மனநிலையில் இருப்பவர்களுக்கு ராசி பலன் சொல்கின்ற சில சாதகமான குறிப்புகள் மனச் சமாதானத்தை --- மன அமைதியைத் தருகின்றன. ஒரு சிக்கலான சூழ்நிலையில் ஒருவன் இருப்பதை அறிந்து அவனது நண்பர்களோ உறவினர்களோ அவனுக்கு அந்த சிக்கலால் ஒன்றும் நேராது; கவலைப்பட வேண்டாம்; சிக்கல் விரைவில் தீர்ந்துவிடும் என்றெல்லாம் சமாதானம் சொன்னாலும் அதனை அவன் ஏற்று அமைதியடைய மாட்டான். என்ன இருந்தாலும் இவர்கள் எல்லாம் என்னைப் போலச் சாமானிய மனிதர்கள் தானே என்று நினைப்பான்.



அதே சமாதானத்தை ஒரு சோதிடனோ --- ஒரு நாளிதழின் வார ராசி பலனோ சொன்னால் மன அமைதி பெற்றுவிடுகிறான். இங்குக் கிரகங்கள் சொல்கின்றன; ஒவ்வொரு கிரகமும் ஒரு தெய்வம்: அதனால் தெய்வ நம்பிக்கையுள்ள அவன் ராசி பலனைத் தெய்வங்களே சொன்னதாக நம்பி அமைதி பெறுகிறான்.



மனிதனிடமுள்ள தன்னம்பிக்கை இன்மை, பகுத்தறிவு இல்லாமை, ஆசை, பேராசை --- முதலியன பலவீனங்களைச் சோதிட வணிகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.



நன்றி : பேராசிரியர்.அறிவரசன், எம்.ஏ.
வெளியீடு: திராவிடர் கழகம்



No comments:

Post a Comment