AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, January 11, 2010

மானமுள்ள தமிழர்களே ஹாப்பி பொங்கல் என்று கூறுவதைத் தவிர்த்து இனிய பொங்கல் வாழ்த்து என்று கூறுங்கள், கொண்டாடுங்கள்.

மானமுள்ள தமிழர்களே ஹாப்பி பொங்கல் என்று கூறுவதைத் தவிர்த்து இனிய பொங்கல் வாழ்த்து என்று கூறுங்கள், கொண்டாடுங்கள்.

தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் 2010

தமிழர்களுக்கு ஒர் வேண்டுகோள்

தமிழ் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில்:

தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500 க்கு மேற்பட்ட தமிழ்ச் சான்றோர் கூடி மேற்கொண்ட முடிவினை ஏற்று "தைத் திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தொடங்கும் நாள்" என 2008 ஆம் ஆண்டில் சட்டம் இயற்றி 14.1.2009 அன்று அதாவது, தைத் திங்கள் முதல் நாளன்று "தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள்" கொண்டாடி மகிழும் நல்வாய்ப்பினை உருவாக்கியது தமிழ் நாடு அரசாகும்.

அதனைத் தொடர்ந்து வரும் 14.1.2010 அன்று தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள் மேலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ் புத்தாண்டு - பொங்கல் திருநாளன்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும், வீடு வாயிலிலும் வண்ணக் கோலங்களிட்டு, வீடுகளிலும், வீதிகளிலும் மாவிலை தோரணங்களை கட்டி, பொதுவிடங்களை வண்ணத் தோரணங்களுடன் தென்னை, வாழை, ஈச்ச மரங்களின் குலைகளும் தோகை விரிந்த கரும்புகளும், இஞ்சி, மஞ்சள் கொத்துகளும், இன்னபிறவும் அலங்கரித்து, அழகுபடுத்துவதுடன், அனைவரும் அங்கு கூடி வீடுகள் வாரியாகத் தனித்தனியே பானைகள் வைத்துப் பொங்கலிட்டுக் கொண்டாடிக் களித்திட வேண்டும்.


மேலும் மகளிர், இளைஞர் திறம் விளங்க வீர விளையாட்டுகளும், கிராமப்புற நடனங்களும், இதர கலை நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும்.

இத்தகைய திருப் பணிகளோடு "தமிழ் புத்தாண்டு --- பொங்கல் திருநாள் விழா" வை கொண்டாடுவோம்.!!!

நன்றி தமிழர்களே.
வணக்கம்.

No comments:

Post a Comment