AZHAGIRI.R

AZHAGIRI.R

Tuesday, December 29, 2009

தமிழன் தாழ்ந்தது - ஏன்?

தமிழன் தாழ்ந்தது - ஏன்?

சமுதாயத்தில் - கீழான சாதி

கல்வியில் - 100 க்கு 80 தற்குறி

செல்வத்தில் - 100க்கு 90 கூலி ஜீவனம்

தொழிலில் - 100 க்கு 75 சரீரம் பாடுபட்டு உழைக்கும் தொழில்

ஒற்றுமையில் - 108 சாதிகள்

கட்டுப்பாட்டில் - அவனவன் சுயநலமும் ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும் - ஒழிக்க சமயம் பார்ப்பதும்

சமயத்தில் (மதம்) - எதிரிக்கு அடிமையாய் இருந்து உழைத்து போடுவது

அரசியலில் - வஞ்சக ஐயோக்கியற்கு வால் பிடித்து கை தூக்குவது;

மானத்தில் - ஈனமும்

மதிப்பில் - காரி உமிழக் தக்கவராகவும் இருக்கின்றனர்.

-------- தந்தை பெரியார்

குடிஅரசு - கட்டுரை : 21-11-1943

Thursday, December 24, 2009

திருநீறு --- ஓம் --- நாமம் ஏன்? எதற்காக ?

திருநீறு --- நாமம் ஏன்? எதற்காக ?

திருநீறு:
திருநீறு பூசுவதன் மகிமை பற்றி ஏராளம் சொல்லுவார்கள். பாவம் போக்கும் , பிணி போக்கும், பரகதியை தரும், நீறில்லா நெற்றி பாழ்! நீறில்லா நெற்றி சுடுகாடு ! என்றெல்லாம் சைவ மெய்யன்பர்கள் கசிந்துருகுவார்கள், "மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!
விபூதிமா மகிமை 34 முதல் 42 முடிய பாட்டின் கருத்தாவது:
"அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன், இரு ராத்திரி, ஒரு புலைமாதுடன் விபச்சாரம் பண்ணி கொண்டிருக்கையில், அம்மாதின் கணவன் கண்டு, அத் தூர்த்தனை வாளினால் வெடிக் கொன்று, வேலிக்கு அப்பால் எறிந்தானாம். அந்நேரம் பசியால் வருந்தி குப்பை சாம்பலிலே புரண்டிருந்த ஒரு நாய், அப்ப்ராமணப் பிணத்தை கண்டு அதன் மேல் ஏறி மிதித்துக் கொண்டு தசையை கடித்து இழுத்து தின்றது. நாய் கால்களிலே ஒட்டிக் கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின் மேல் படிந்ததால், சிவகணங்கள் வந்து உபசரித்து புட்ப விமானத்தில் ஏற்றும் சமயம், பிராமணின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யமதூதர்கள் வந்த சேர, அவர்களை சிவகணங்கள் விரட்டியடித்து துரத்தி விட்டு காமதூர்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் என்ன தெரிகிறது? எவ்வளவு கேவலமான - அநீதியான காரியத்தை செய்தாலும், அவன் திருநீறு பூசிக் கொண்டால் (குப்பை மேட்டு சாம்பல் உடலில் பட்டாலும்) பாவங்கள் போகும். மோட்சம் கிடைக்கும் என்றால் நாட்டில் பாவம் செய்ய யார் பயப்படுவார்கள்? பெரிய பாவங்கள்- சிறிய கழுவைகள் - இது தான் மதமா? இது ஒழுக்கத்தை வளர்க்குமா - கெடுக்குமா? சிந்திப்பீர்!


நாமக் குறியா?
ஆண் குறியா?


இந்து மதத்தின் பெருங் கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்த்தர்களை வழி நடத்தும் பார்ப்பன பூசாரிகள் அயங்கார்கள் எனப்படுவார்கள்.
இந்துக்களில் ஏறத்தாழ பாதிப் பேர் வைஷ்ணவர்கள். மற்ற இந்துமதப் பிரிவுகளில் இருந்து வைஷ்ணவர்களைத் தனிமைப்படுத்தி
காட்டுவது அவர்கள் தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம் என்பது.


லிங்கத்துக்குப் போட்டி நாமம்!

நாமக்குரியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம் தான். அதாவது சைவர்களின் லிங்கத்துக்கு இணையான வைனவக்குரியே நாமம்! சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுவார்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் இன்னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடு ஆகும்.
நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக் கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு -- இது தான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகா விஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தை
குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையில் தொங்கும் உறுப்பு - ஆண்குறி).


நன்றி : பெரியார் சுயமரியாதை வெளியீடு

Tuesday, December 15, 2009

பண்டைய தமிழரின் அளவுகள் - MEASUREMENTS OF ANCIENT TAMIL PEOPLE

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..!
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..

1 - ஒன்று

3/4 - முக்கால்

1/2 - அரை கால்

1/4 - கால்

1/5 - நாலுமா

3/16 - மூன்று வீசம்

3/20 - மூன்றுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி(வீசம்)

1/20 - ஒருமா

3/64 - முக்கால்வீசம்

3/80 - முக்காணி

1/32 - அரைவீசம்

1/40 - அரைமா

1/64 - கால் வீசம்

1/80 - காணி

3/320 - அரைக்காணி முந்திரி

1/160 - அரைக்காணி

1/320 - முந்திரி

1/102400 - கீழ்முந்திரி

1/2150400 - இம்மி

1/23654400 - மும்மி

1/165580800 - அணு

1/1490227200 - குணம்

1/7451136000 - பந்தம்

1/44706816000 - பாகம்

1/312947712000 - விந்தம்

1/5320111104000 - நாகவிந்தம்

1/74481555456000 - சிந்தை

1/489631109120000 - கதிர்முனை

1/9585244364800000 - குரல்வளைப்படி

1/575114661888000000 - வெள்ளம்

1/57511466188800000000 - நுண்மணல்

1/2323824530227200000000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு

10 நுண்ணணு - 1 அணு

8 அணு - 1 கதிர்த்துகள்

8 கதிர்த்துகள் - 1 துசும்பு

8 துசும்பு - 1 மயிர்நுணி

8 மயிர்நுணி - 1 நுண்மணல்

8 நுண்மணல் - 1 சிறுகடுகு

8 சிறுகடுகு - 1 எள்

8 எள் - 1 நெல்

8 நெல் - 1 விரல்

12 விரல் - 1 சாண்

2 சாண் - 1 முழம்

4 முழம் - 1 பாகம்

6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)

4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4நெல் எடை - 1 குன்றிமணி

2 குன்றிமணி - 1 மஞ்சாடி

2 மஞ்சாடி - 1 பணவெடை

5 பணவெடை - 1 கழஞ்சு

8 பணவெடை - 1 வராகனெடை

4 கழஞ்சு - 1 கஃசு

4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை

10 வராகனெடை - 1 பலம்

40 பலம் - 1 வீசை

6 வீசை - 1 தூலாம்

8 வீசை - 1 மணங்கு

20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..

300 நெல் - 1 செவிடு

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

5 மரக்கால் - 1 பறை

80 பறை - 1 கரிசை

48 96 படி - 1 கலம்

120 படி - ௧ பொதி

__________________

கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி

2 கைநொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 விநாடி

60 விநாடி = 1 விநாடி-நாழிகை

2 1/2 நாழிகை = 1 ஓரை

3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம்-30 நாள் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு

60 ஆண்டு = 1 வட்டம்

__________________

எண்ணல் அளவை..

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10கோடி - 1அற்புதம்

10அற்புதம் - 1நிகற்புதம்

10நிகற்புதம் - 1கும்பம்

10கும்பம் - 1கணம்

10கணம் - 1கற்பம்

10கற்பம் - 1நிகற்பம்

10நிகற்பம் - 1பதுமம்

10பதுமம் - 1சங்கம்

10சங்கம் - 1சமுத்திரம்

10சமுத்திரம் - 1ஆம்பல்

10ஆம்பல் - 1மத்தியம்

10மத்தியம் - 1பரார்த்தம்

10பரார்த்தம் - 1பூரியம்

Saturday, December 12, 2009

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா?



தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா?

ஆதிகாலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம்.
திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்த அவன் தேவர்களை எல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.
தேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறை இட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்கு அளித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமாதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசுரனைக் கொன்றுக் விட்டார்களாம்.
நரகாசூரன் சாகும் பொழுது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம்.
கிருஷ்ணன் 'அப்படியே ஆகட்டும்' என்று வாக்களித்தாராம். ஆதலால் நாம் கொண்டாடு கிறோமாம் , அல்லது கொண்டாட வேண்டுமாம்.
இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்தி பார்ப்போம்.
முதலாவதாக, இந்தக் கதை உண்மையாக இருக்க முடியுமா?
எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும் , உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமாதேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்? (பூமி தேவி என்றால் போமி அல்லவா? பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான் ? அத்தகைய மேம்பாடு உடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித் தான் செய்தாலும், அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்?
அப்படி இருந்தாலும், தானே வந்து தான் கொள்ள வேண்டுமா? மேற்ப்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமி தேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள் தான் உலகத்தை எல்லாம் காப்பாற்றுகிறாளாம் ! உலக மக்கள் செய்யும் பாவங்களை எல்லாம் பொறுத்து கொள்கிறாளாம்!
'பொறுமையில் பூமி தேவி போல்' என்று உதாரணத்திற்கு கூட பண்டிதரும் பாமரரும் அந்த அம்மையாரை
உதாரணமாக கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனை கொல்லும் போது, தானும் உடனிருக்க வேண்டுமெண்டு திருமாலைக் கேட்டுக் கொண்டாலாம்! என்னே தாயின் பாசம்!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்கள் என்றும், ஆரியராகிய பார்பனர்கள் தாங்களே தேவர்கள் என்றும் கற்பித்து கதை கட்டியிருக்கிற, தேவ-அசுர போராட்டத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என்னச் செய்வது? நம்மைப் ஏமாற்றி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுய மரியாதையை என்ன என்பது? நமது பகுத்தறிவை ஏனென்று சொல்வது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மை என்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவை இழந்து, இந்த தீபாவளியை கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது ?
சென்றது போக, இனிமேலாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப் பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது. ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
- தந்தை பெரியார்

எங்க ஊரு அய்யா சிலை
தந்தை பெரியார் சிலை - கடலூர் நாள்: 13_08-_1972 இடம்: கடலூர் எழில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்திற்கும், புதிய அண்ணா பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதி,தலைமை : சி.பி. சிற்றரசு (முன்னாள் மேலவைத் தலைவர்)திறப்பாளர்: கலைஞர்
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு’’இது பொய்யா மொழியாரின் வாக்கு. மழையானது உலகத்தாரிடம் எத்தகைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. காரணம், அதற்கு பேதம் எதுவும் இல்லை. அது-போலத்தான் அறிஞர்கள் கைம்மாறு கருதி எதையும், யாருக்கும் செய்வ-தில்லை. இது யாருக்குப் பொருந்து-கிறதோ இல்லையோ நம் மானமீட்பர், மனித நேயர் தந்தை பெரியாருக்கு முற்றிலும் பொருந்துகின்ற ஒன்றாகும்.மடமையில் மயங்கிக் கிடந்த மக்கள் தங்களின் இந்த இழி நிலைக்கு முற்பிறப்-பில் தாங்கள் செய்த பாவம்தான் காரணமே தவிர, வேறொன்றுமில்லை என்று தங்களுக்குத் தாங்களே சமா-தானப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு விடிவு என்பது தேவைதானா என்று கூட தெரியாமல் மலத்தில் புழுத்த புழுக்-களாக இருந்தபோது அவர்களே எதிர்-பாராத நேரத்தில் மழையாக வந்தார் பெரியார். அந்த மழை மக்களிடம் என்ன எதிர்பார்த்தது-? ஒன்றுமே இல்லை. ஆனால் அந்த மழையில் மக்களின் தரிசு மனங்கள் நனைந்தன. பிறகு தழைத்தன, குறுகிய காலமே ஆனாலும் தமிழன் இன்று ஓரளவிற்கு மற்ற மற்ற நாடுகளின் மக்களைப் போல மானமும், அறிவும் பெற்று சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அது மட்டுமல்ல, இந்துத்துவத்தை வேரறுக்கும் பேராயுதமான தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆல்போல தழைத்து அருகுபோல் வேரோடி மூன்று தலைமுறைகளாக நிலைபெற்று நின்று விட்டது. மூன்றாவது தலைமுறை பெரி-யார் தொண்டர்கள் என்கின்ற சொல் வழக்கே வந்துவிட்டது. இனிமேல் தமிழ் -நாட்டில் இந்துத்துவம் எதையும் ஆட்-டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை யாரால் வந்தது என்பதுகூட தெரியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். காலத்தை கொஞ்சம் ஸிமீஷ்வீஸீபீ செய்து பார்க்கக் கூடிய வசதி இருந்திருக்கு மேயானால், இளைஞர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லாதவர்-களை ஆர்வம் கொள்ளச் செய்ய ஒரே ஒரு சம்பவத்தை சொன்னாலே போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா-?ஆம், 29--_07_1944-இல் கடலூரில் ஒப்பாரும் மிக்காரும் இலாத நமது இனக் காவலர் மீது ஏதேதோ வீசப்-பட்டன. அதில் பாம்பும் உண்டு, செருப்-பும் உண்டு பெரியார் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இந்த வரலாறு ஒளிப்படமாகவே மனத்திரையில் விரியும். தன்மீது விழுந்த அந்த ஒற்றைச் செருப்பு தனக்கும் பயன்-படாது. மீதமிருக்கும் ஒற்றைச் செருப்பு அதை வீசியவனுக்கும் பயன்படாது என்று கருதி அதன் ஜோடியான மற்-றொன்றையும் பெரியார் பெற்றுக்-கொண்ட யுக்தி நாம் அறிந்ததே. ஆனால், அடுத்து வரப்போகின்ற செய்-தியை நம்ப முடிகின்றதா என்று பாருங்-கள். எந்த இடத்தில் பெரியார் மீது பூணூல் திருமேனிகளான ஆரியக்குடி-கேடிகள் செருப்பு வீசினார்களோ, அதே இடத்தில் ஏறத்தாழ 28 ஆண்டுகள் கழித்து 13-_08_1972 ஆம் ஆண்டு பெரியாருக்கு அந்த ஊர் மக்களே சிலையெழுப்பி கொண்டாடி மகிழ்ந்-தார்கள். நம்ப முடியவில்லை அல்லவா? அவர்தான் பெரியார்!
ஆம், இந்த வாரம் நாம் காண இருப்-பது கடலூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையாகும்.பகுத்தறிவாளர்களின் சமயோசித புத்திக்கு ஆயிரமாயிரம் சம்பவங்களைச் சொல்லலாம். அதில் கடலூர் சிலை திறப்பு விழாவுக்கு முன்பு நடந்த நிகழ்வு கூடுதல் சுவைகொண்டது. இன்றைய பொதுச் செயலாளரும் அன்றைய பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு என்.ஜி.ஜி.ஓ. சங்கத்தின்தலைவருமான சு. அறிவுக்கரசு சிலைத் திறப்புப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்-பொழுது மாவட்ட ஆட்சியரும், காவல்-கண்காணிப்பாளர் ஒருவரும் வந்தனர். இவர் பார்ப்பனர் ‘‘சிலையில் கடவுள் மறுப்பு வாசகங்கள் எதுவும் பொறிக்கப்-பட்டிருக்கிறதா?’’ என கலெக்டர் சு. அறி-வுக்-கரசு அவர்களிடம் கேட்டிருக்-கிறார். அவர் ‘‘இல்லை’’ என்று சொல்லி-யிருக்கிறார். கலெக்டர் எஸ்.பி.அய்ப் பார்த்து, “பார்த்தீர்களா’’ (யு.சி) என்று மகிழ்ச்சியாகக் கூறினார். அவர்கள் போன பிறகு, அறிவுக்கரசு அவர்களைப் பார்த்து அவருடைய நண்பர்கள், ‘‘வாசகங்கள் இல்லை என்று ஏன் பொய் சொன்னீர்கள்’’ என்று கேட்டனர். இவரும் சிரித்துக் கொண்டே சிலையில் ஏது வாசகம் ? பீடத்தில்தானே இருக்-கிறது. என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். கலெக்டர் “திமீபீமீstணீறீ’’ என்ற சொல்லுக்கு பதிலாக “ஷிtணீtuமீ’’ என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தார். இது எப்படி? பகுத்தறிவா-ளர்-களிடம் ஆணானப்பட்ட கடவுள்-களே படாதபாடு படும்பொழுது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?அன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள், சிலை அமைப்புக் குழு பொரு-ளாளரும் வழக்கறிஞருமான எஸ்.ஜனார்த்-தனம் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவருடன் ஆசிரியர் வீரமணி அவர்களும் மற்றவர்களும் இருந்தனர். இந்த எஸ்.ஜனார்த்தனம் தான் பின்னாட்களில் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதிமன்ற நீதிபதி யாகி ஜஸ்டிஸ் எஸ்.ஜனார்த்தனம் ஆகி ஓய்வு பெற்ற பின்னர் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவராகவும் பிற்படுத்தப்பட் டோர் நலக்கமி ஷனராகவும் நியமிக்கப்பட் டவர். அப்படி அய்யா எஸ். ஜனார்த்தனம் அவர்களின் வீட்டில் இருந்தபொழுது கழகத் தோழர்களும் முக்கிய பிரமுகர்களும் குடும்பம் குடும்பமாக வருகை தந்து அய்யாவைப் பார்த்து தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.பெரியாருக்கு ஓய்வில் கூட பிரச்-சாரப்பணி நடந்திட வேண்டும். ஆயிர-மாண்டுகளில் சாதிக்க வேண்டியவை-களை நூறாண்டுகளில் சாதிக்க போராடும் தாய்மையின் அவசரம் அது. அப்படித்தான் சிலை திறப்பு நாளன்று மதியஉணவு ஏற்பாடு செய்வதற்கு சு.அறிவுக்கரசு அவர்கள் ஆசிரியரிடம் கேட்டு தந்தை பெரியாரின் அனும-தியைப் பெற்று நல்லவண்ணம் சுமார் நூறு பேர்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய வீடு சிறியது என்பதால் அவருடைய நண்பர் ஹாஜிமஸ்தான் அவர்களின் சினிமாத் தியேட்டரில் வைத்து உணவு பரிமாறப்பட்டது. உண்டு முடித்ததும் தந்தை பெரியார் அறிவுக்கரசு அவர்-களைப் பார்த்து “இவர்கள் எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்களா?’’ என்று கேட்டிருக்கிறார். ஆம் என்று இவர் சொன்னதும் “இவங்க மத்தியில் நான் கொஞ்சம் பேசலாமா?’’ என்று கேட்-டார். அய்யாவின் பேச்சுக்கு அப்பீல் ஏது? கோழி தின்பதற்கு கூலி எதற்கு? உடனே மைக் ஏற்பாடு செய்யப்பட்டது. சைவக்காரரான நீரியல் விஞ்ஞானி குமாரசாமி தலைமையில் அய்யா முக்கால் மணிநேரம் பேசினார். சினிமா பார்க்க வந்த ஏராளமான மக்கள் வந்த காரி-யத்தை மறந்து, அய்யாவின் பேச்சை ஆர்வத்-துடன் கேட்ட வாறிருந்தனர். தியேட்டர் மேலாளர்தான் மூக்கால் அழுதுவிட்டார். காரணம் மேட்னி காட்சி தொடங்கியாக வேண்டும். காலம் கடந்து விட்டது இதை ஆசிரி-யர், அய்யாவிடம் கூறிய பிறகே அய்யா தனது உரையை நிறைவு செய்தார். ஆயிரமாயிரம் தமிழ் மறவர்கள் சூழ மேள தாளத்துடன் அய்யா பவனி வந்தார். ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரி புலியூர் கடைத்தெரு) முதல் வர் கலைஞர் உணவு அமைச்சர் ப.உ. சண்முகம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் அய்யாவுடன் பவனி வந்தார்கள். அந்தக் காட்சி மக்களை உணர்ச்சிப் பெருக்கில் தள்ளி அதில் தத்தளிக்க வைத்து விட்டது. அதிலிருந்து மீள்வதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.விழாவில், கலைஞர் ‘அங்கிங்-கெனாதபடி எங்கெங்கும் தமிழகம் முழுவதும், தமிழகத்தைத் தாண்டியும் தந்தை பெரியாருக்கு திருவுருவச் சிலைகள் நிறுவப்பட வேண்டும். அவர் தனிமனிதரல்ல; சகாப்தம்; இயக்கம்; காலகட்டம் என்று முழங்கினார். அன்று கலைஞர், தமிழர் தலைவரை ‘விடுதலை வீரமணி‘ என்ற சொல்-லாடலை பயன்படுத்தி பேசினார். மேலும், கலைஞர் ‘சிலை’ என்ற சொல்-லுக்குப் பொருள் கூறியது சுவையாக இருந்-தது. சிலை என்றால் உருவம் என்-றும் வில் என்றும் பொருள் உண்டு. அந்த வில்லிலிருந்து புறப்பட்ட நாண்தான் பட்டுக்கோட்டை அழகிரி. அந்த வில்லில் இருந்து புறப்பட்ட ‘நாண்’ தான் அறிஞர் அண்ணா. அது மட்டுமல்ல, அந்த வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் எதிரிகளின் கொத்-தளங்களை எல்லாம் சல்லடைக் கண்-களாக ஆக்கிப் போட்டுவிட்டது. கூட்-டம் இந்த வார்த்தை விளையாட்டுகளில் சொக்கிப் போனது. அன்றைய ‘விடுதலை’ வீரமணியும் இன்றைய தலைவருமான தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விழா பேருரையில் தேர்தல் நேரத்தில் ‘கடவுள் இல்லை’ என்று கூறும் பெரியாரின் சிலையை திறந்து வைத்த கலைஞருக்கா உங்கள் ஓட்டு?’’ என்றனர். பொதுமக்கள் ஆம், அவருக்குதான் எங்கள் ‘ஓட்டு’ என்று கூறி தீர்ப்பு அளித்து இருக்கின் றனர் என்று கூறினார். நாத்திகத்தை வெகுஜனமாக்கிய விந்தை தமிழ்-நாட்டைத் தவிர வேறு எந்த நாட்-டிலும் கிடையாது.தந்தை பெரியாரின் போர் உத்தி-களை எதிரிகளால் கணிக்கவே முடி-யாது. அப்படியே கணித்தாலும் கையறு நிலைதான் அவர்களுக்கு. இல்லாமலா செருப்பு வீசிய இடத்தில் 28 ஆண்டு-களுக்குப் பிறகு சிலை முளைத்தது? இன்றைய கணக்கிற்கு சுமார் 65 ஆண்-டுகள் ஆகின்றன. இனி யாருக்காவது அய்யா சிலையின் மீது செருப்பு வீசும் துணிச்சல் வருமா? அப்படி வந்தால் இன்னொரு சிலைமுளைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதா? “செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்’’என்ற புகழ்பெற்ற கவிதை பிறந்தது கடலூரில்தான் இதைப் பாடியவர் கவிஞர் கருணானந்தம்.
உடுமலை வடிவேல்

நன்றி : விடுதலை

கடலூரில் அய்யா சிலை - 1972
--

Friday, December 11, 2009

BREAST FEEDING - TIPS

TEN TIPS FOR BREASTFEEDING
  • You should begin breastfeeding your baby an hour after delivery

  • Colostrum, the yellowish milk produced by the mother in the first three days is very healthy for the child

  • The baby does not need anything other than breast milk for the first 4-6 months of life. Breast milk provides adequate nutrition and immunity to the baby

  • A baby has only breast milk (no additional water) and urinates a minimum of six times in 24 hours is getting enough breast milk

  • Your baby should be free to breastfeed whenever and for as long as it chooses. More suckling means more breast milk. Demand feeding alleviates breast engorgement and breast infection


  • It is important that the baby not only gets foremilk (rich in carbhohydrates, vitamins and proteins, that also helps quench the baby's thirst), but also get hind milk (rich in fat and calories). Therefore, you should allow the baby to keep suckling from one side until he/she leaves the breast on his/her own, so that he gets enough hind milk

  • Try to avoid bottle-feeding entirely. It is not necessary at all.

  • Bottle-feeding may be a direct cause for breastfeeding failure


  • If the baby cannot tolerate bottle-feeding or artificial feeding, it can lead to a serious illness


Basics of BreastFeeding:


Positioning:
The baby should be unwrapped before being put to the breast. This will allow it the freedom to feel its mother's body, especially her warm breasts. It must be positioned such that, it is in a semi-upright position with its stomach touching your stomach, its lower shoulder touching you, and its upper shoulder close to your breast.

Latching on:

She must take the entire nipple (the dark areola) in its mouth, it is more important that its lips cover the lower part of the areola than the upper part of the areola. It is its lower jaw that will do the entire suckling.


Timing and Frequency of Feeds:

The baby must be allowed to feed as often and as long as it wants (including during the night). This will ensure that it gets enough hind milk and also a feeling of security


Ban on Feeding Bottles:

Although you may have got many feeding bottles as gifts, it is important that you never use them. The use of feeding bottles could cause nipple confusion and result in breastfeeding failure.



Promoted by :
Azhagiri.R

SORKKA VAASAL MAGIMAI (SRI RANGAM)

SORKKA VAASAL MAGIMAI (THIRU VARANGAM)


மார்கழி மாசம் வந்தால் வைகுண்ட ஏகாதேசி என்று கூட்டம் கூட்டமாய்சிறிரங்கம் முதலிய ஊர்களுக்கு பணச் செலவு செய்து கொண்டு போவதும் பொய்யையும் ,புளுகையும் காவடிக் கதையை சொல்வதும் , அறுத்து சமைத்த பாம்பும் , ோழியும் , மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும்: மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாகபட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இது போல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும் , அழுக்கு குட்டைகளில் குளித்தும் ுடித்தும் ' பஞ்சமிர்தம் 'எனும் அசிங்கத்தை உண்டும் , அதனால் 'காலரா ' போன்ற கொடிய நோய்கு இரையாவதும் நாம்கண்டது தானே ! அசிங்கம் , ஆபாசம் , அறியாமை , இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன !


சிறிரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிரார்களே, தன் தாத்பரியத்தைத் கேளுங்கள் :

"நாகபட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்ரகத்தை திருடி வந்து, அதை உருக்கி டுத்து பணமாக்கி , திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறிரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான் . ஆனால் அக்கோயிலின் சின்னத்தையே - அதாவது 'நாமத்'தையே சாத்திவிட்டான் . கூலி கேட் தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று ூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று ிட்டான் - ஒடக்கறான் துணையோடு !


அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும்,அந்தத் துறைக்குப் 'பார்வானதுரை ' (பார் வானம் - சுடுகாடு , பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச , அவ்வாறே அளிக்கப்பட்டு , அன்று கொல்லப்பட்டவர்களுக்கு எல்லாம் ' முக்தி ' யும் அளிக்கப்பட்டதாம் ! ('திருமங்கை ஆழ்வார் வைபவம் ') என்ற நூல் ஆதாரப்படி ).


சிறிரங்கம் வைகுண்ட எகாதேசியின் போது திறக்க படுகின்றதே 'சொர்க்கவாசல் ' - அது எங்கே செல்லுவது தெரியுமா ? திருமங்கை ஆழ்வார் ொள்ளிடக் கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானதுரைக்கு ! சொர்க்க வாசல் புரிகிறதா ?

- தந்தைபெரியார்