AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, December 27, 2010


தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

நண்பர்களே, தமிழர்களே,
எதிர் வரும் தமிழர் திருநாளாம், தமிழ்ப் புத்தாண்டில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளாக சிலவற்றை கூற விரும்புகிறேன்....

இதோ...

நம்முடைய பெயர்களுக்கு முன் ஆங்கில எழுத்தை (முதல் எழுத்தாக) பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்...

நம் குழந்தைகளுக்கு இனிய தமிழ்ப் பெயர்களை சூட்டுவோமாக...

நம்முடைய தாய் மொழியில் கையொப்பம் இடுவோமாக....

பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், பிறந்த நாளாகட்டும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதை தவிர்ப்போம்...

நம் இல்லங்களின், கடைகளின், வணிக நிறுவனங்களின் பெயர்களை இனிய தமிழில் சூட்டுவோமாக....

வழிபாடுகளை தமிழில் செய்வீர்களாக...

வாகனங்களில் தங்களின் விருப்பமான பெயர்களை ஒட்ட நினைப்பவர்கள் தமிழில் ஓட்டலாமே....

தமிழர்களின் வணிக நிறுவனங்களிலே நம்முடைய வாணிபத்தை செய்வோமாக...

தமிழர்களால் நடத்தப்படும் இதழ்களை மட்டுமே விலைக் கொடுத்து வாங்குவோமாக...

நாம் உரையாடிக்கொண்டிருக்கும் (ஓர்குட், பேஸ் புக் .... ) போன்ற சமூக தளங்களில், நல்ல தமிழ் பெயர்களை அடையாளமாகக் கொண்டு உரையாடலாமே... நம்முடைய முகமூடிகளை தவிர்த்து உண்மையான முகத்தை உலகிற்கு காட்டலாமே....


மேற்க்கூறப்பட்டுள்ளவைகளை, நம்மால் தான் செய்யப் பட வேண்டும்...மற்ற இனத்தவர்கள் சரியாகத் தான் உள்ளனர் ....
இவைகளை நாம் அனைவரும் செய்வோம் என்றால்,,,
தன் மானம், இன உணர்வு பெறுவது உறுதி....


ஓர் வேண்டுகோள்....
தமிழர்கள் அனைவரும்
"உணர்ச்சி கவிஞர். காசி.ஆனந்தனின்"
தொகுப்புகளை ஒரு முறையேனும் வாசித்தால் நல்லது....

நன்றி,
இரா.அழகிரி
தமிழகம்.

Sunday, December 19, 2010

கூவி அழைக்கிறோம்.............






கூவி அழைக்கிறோம்!


மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்-களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.

ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.

ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.

மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்-காரனையும், முதலாளியையும் தொழிலாளி-யையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மா-வையும், சாதாரண ஆத்மாவையும் அவன-வனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!

ஜாதி, சமய, தேசச் சண்டையற்று -_ உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்-கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.

ஈ.வெ.ரா. குடிஅரசு 30.7.1933

Tuesday, December 7, 2010

அன்புள்ள தமிழர்களே,
இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, கொன்று குவித்த, அரசாங்கத்தின் மீது, நம்மிடம் இருக்கும், போர்க்குற்ற படங்களையோ அல்லது ஒளி-ஒலி காட்சிகளையோ, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள் ....
ஐ நா வின் குழு:
panelofexpertsregistry@un.org

Ms. Sooka Yasmin
YSooka@fhr.org.za
webmaster@justice.gov.za

Mr. Steven R. Ratner
sratner@umich.edu

Mr. Marzuki Darusman
contact.us@strategic-asia.com
info@aseanhrmech.org


மேலும்

கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People - www.Salem-News.com

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?
http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is
SIGN THE PETITION
நன்றி, More Thanks