AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, May 24, 2010

இராமனுக்கு சீதை தங்கை; இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்



வரலாற்றுச் சுவடுகள்
இராமனுக்கு சீதை தங்கை; இராவணனுக்கு சீதை மகள்
இராமனுக்கு பல பெண்டாட்டிகள்

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்-கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனி வாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்-கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ.1) அவையாவன:- ஜைன ராமாயணம், பவுத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்-தராமாயணம் என்பவைகளாகும்.
இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்தரா-மா-யணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப்பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத் திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சு-மணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்-பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்-தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்-களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்-பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சுமணன் என்பவர்-களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரி-களைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமையனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமான-பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.
இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு முன் அவ்வழக்க மிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431ஆ-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும், அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்-பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லை-யென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும், அந்தச் சாபத்தின் பலனாய் இராவணன் இராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே இராவணன் இராமனால் கொல்லப்பட்ட-தாகவும், இராவணனுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை இராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு-போய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்ட-தாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், இராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது இராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய இராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்ப-தற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளு-டைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.
எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் இராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 -ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற இராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.
- ‘குடிஅரசு’ கட்டுரை, 03.03.1929

Saturday, May 22, 2010

பாரீர் பார்ப்பனர்களை!




பாரீர் பார்ப்பனர்களை!

பார்ப்பனர்கள் யார்? இந்த 2010லும் அவர்களின் குணம் எப்படிப்-பட்டது என்பதைத் தெரிந்துகொள்-வதற்கு மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படாது.

தமிழ் - _ தமிழர் _ தமிழர் பண்பாடு தளத்தில் அவர்களின் பார்வை எத்தகை-யது என்பதை ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் பளிச் சென்று புலப்பட்டு விடும்.

மேட்டுக்குடி மக்களை மேலோட்-டமாகப் பார்த்து கவிழ்ந்து போகும் கபோதிகளுக்கு அவர்களின் உண்மை உருவம் புலப்படவே புலப்படாது.

செம்மொழி என்று தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்து உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். காலங் கடந்தாவது இந்த அங்கீகாரம் வந்து சேர்ந்ததே என்று ஆனந்தப் பண்பாடினர்; காரணம் அவர்கள் மொழியால், வழியால், விழியால் தமிழர்கள்.

ஆனால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும் சுடுகாட்டு நெருப்பாக எரிந்து தொலைகிறது.

“தினமலர்’’ (13.6.2004) அந்துமணி பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி: தமிழ்மொழியைச் செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்...

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெச-வாளர் வீட்டுத் தறி, நிற்காமல் இயங்-கும்; ஒரு வேளைக் கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்; தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளை-களைத் தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பர் சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர். இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்! இதுதான் பதில்.

இதில் பார்ப்பனர்களின் வயிற்றெ-ரிச்சல் தெரிகிறதே தவிர, நியாயமான விவாதங்கள் ஏதாவது உள்ளனவா?


தமிழ் செம்மொழி ஆனால் ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும் என்று யார் சொன்னார்கள்? அதே நேரத்தில் அந்த ஏழை நெசவாளி செம்மொழி என்று அறிவிப்பு வந்தது குறித்து அளவற்ற மகிழ்ச்சியில் திளைப்பான்; காரணம் அவன் தமிழன்! இவர்களாகவே ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, இவர்களாகவே தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கிறார்கள் என்றால் இவர்களை அடையாளம் காண வேண்டாமா?

சக தமிழர்களிடம் தமிழிலேயே பேச வேண்டும் என்பது “தினமலரின்‘ கருத்தாகக் கொள்ளலாமா? அப்படியென்றால் அதற்காக ‘தினமலர்’ எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்-கிறது? பதில்களை இடித்துக் கூறியிருக்-கிறது?

அடுத்து ‘தினமலரில்’ (18.8.2009 பக்கம் 10) டவுட் தனபாலு பகுதியில் ஒரு நஞ்சு!

தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்-திற்குக் கருநாடகா, ஆண்டுக்கு 20 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும், மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப் படும். கருநாடகா அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து-விட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்-னாங்க.. பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்திட்டோமோ இல்லையா...? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...? இப்படிஒரு பதில்!

பல வருடங்களாக பெங்களூருவில் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக்கிடந்த திருவள்ளுவர் சிலை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்-களின் முயற்சியால் திறந்து வைக்கப்-பட்டது. இதுகண்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் உவகை அடைகிறான்.

ஆனால், தினமலர் கூட்டத்துக்கு மட்டும் கேலியாகவும், இன்னொரு வகையில் வேதனையாகவும் இருக்கிறது _ கடப்பாரையால் வயிற்றை இடித்துக் கொள்கிறது என்றால், இதன் பொருள். அவர்கள் தமிழர்கள் இல்லை. அத-னால் மகிழ்ச்சியும் இல்லை _ இதுதானே உண்மை?

இந்த வாரம் “துக்ளக்’’ இதழில் (19.5.2010 _ பக்கம் 25) ஒரு கேள்வி பதில்.

கேள்வி: “எல்லா உள்ளாட்சி அலு-வலகங்களிலும் இனி “தமிழ் வாழ்க’’ என்ற நியான் விளக்குகள் வைக்கப்-படும்’’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே! இதன் பயன் என்ன? இதனால் தமிழ் வாழ்ந்து விடுமா?

பதில்: இதனால்தான் தமிழ் வாழும் என்றால் -_ அதைவிடத் தமிழுக்கு வேறு கேவலம் தேவையில்லை. இது தமிழ் வாழ்வதற்காக அல்ல. நியான் விளக்குக் காண்ட்ராக்ட் எடுப்பவர் வாழ, இது வழி செய்யும். அது போதுமே.

எப்படியிருக்கிறது பதில்! தமிழ், தமிழன் என்ற உணர்வு இருந்திருக்கு-மேயானால் இந்தக் கோணத்தில் இந்தப் பூணூல் எழுதுமா?

“தமிழ் வாழ்க’’ என்று நியான் விளக்குப் போடுவது கான்ட்ராக்ட் எடுப்பவர் வாழ என்கிற திசையில் புத்தி மேயப் போகிறது என்றால் இந்தப் புரோக்கர் கூட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இதே “துக்ளக்’கில் துர்வாசர் ஒருவர் எழுதுகிறார் _ சமச்சீர் கல்விபற்றி..

இருக்கிற கல்வியே ஒழுங்காக இல்லை. இதில் சமச்சீர் கல்வி என்ன வேண்டிக் கிடக்கிறது?

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை வாசிக்கத் தெரியாத அய்ந்-தாம் வகுப்பு மாணவர்கள், இங்கே மலிந்து கிடக்க, தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடு எல்லாம் எதற்கு என்று கிறுக்குகிறது.

எங்கே சுற்றி வந்தாலும் தமிழை, தமிழர்களை கொச்சைப்படுத்தியே தீருவது என்ற கொழுப்பில் எழுதுகிறது ஒரு கொம்பேறிக் கூட்டம்.

நம்மால் திருப்பிக் கேட்க முடியாதா? குழவிக் கல்லுக்கெல்லாம் கும்பாபி-ஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே, ஏழை வீட்டுத் தறி தடையில்லாமல் ஓடுமா, ஒரு வேளைக் கஞ்சிக்கே வழிஇல்லாதவருக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்குமா?

இந்தக் கேள்விக்கு, இந்தச் சமஸ்-கிருதக் கூட்டம் பதிலைச் சொல்லுமா?

கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் நடமாடிக் கொண்டிருக்கும் சங்கராச்-சாரியாருக்கு ஊருக்கு ஊர் பவள விழா கொண்டாடிக் கொண்டு இருக்-கிறார்களே _ இதனால் நாட்டுக்கு என்ன பயன்? அவருக்குப் பவள விழா கொண்டாடினால் மாதம் மும்மாரி பொழியுமா?

பக்திப் பள்ளத்தில் தமிழர்கள் குப்புற விழுந்து கிடப்பதால், கேட்கும் திராணியற்றவர்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொன்னவர்கள், தமிழைத் தரக் குறைவாக கேலிப் பொருளாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

பார்ப்பனர்களின் இந்த மமதைப் போக்கை அறிஞர் அண்ணா அழகாகப் படம் பிடித்தார்.

“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்-மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்-மொழியெனக் கருதுவதில்லை. அவர்-களின் எண்ணமெல்லாம் வடமொழி-யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான் (“திராவிடநாடு’’ 2.11.1947).

அண்ணாவின் படப்பிடிப்பைப் பார்த்த பிறகாவது பரிதாபத்துக்குரிய நமது “பஞ்சமர்களும்’’ ‘‘சூத்திரர்களும்’’ அடையாளம் காண்பார்களா பார்ப்-பனர்களை?

Tuesday, May 18, 2010

அனைவரும் படியுங்கள்-கண்டிப்பாக


நட்சத்திர ஜன்னலில் விமலா எட்டிப் பார்க்கிறார்

'சூரியவம்சம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. கணவர் படிக்காதவர். பட்டப்படிப்பு முடித்த மனைவி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புவார். ஒரு குழந்தைக்கு தாயான மனைவியைப் பாசத்தோடு படிக்க அனுப்பிவைப்பார் கணவர். "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' என்று கவிஞர் மு.மேத்தாவின் பாட்டு வரும். பாடல் முடிந்தவுடன் கணவரின் சொந்த ஊருக்கே மாவட்ட ஆட்சியராகப் பணி புரிய ரயிலில் வந்து இறங்குவார் மனைவி.
15 நிமிஷங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியோடு அந்தக் காட்சியை மறந்து விடுவோம். ஆனால், காட்சி அதே.. ஆண்டுகள் மட்டும் ஐந்து... கணவர் மற்றும் குடும்பத்தார் உதவியோடு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் (அகில இந்திய அளவில் 162-வது இடம்) திருச்சியைச் சேர்ந்த விமலா (32). திருச்சி திரு.வி.க. நகரில் கணவர் குமார், மகன்கள் ஆகாஷ் (11), பிரகாஷ் (11) (இரட்டைக் குழந்தைகள்), மாமியார் உள்ளிட்டவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் விமலா தனது வெற்றிப் பயணம் குறித்து தொடர்கிறார்...
""கரூர் பசுபதிபாளையம்தான் எனது சொந்த ஊர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 1998-ல் இளநிலை வேதியியல் பட்டப்படிப்பை முடித்தேன். கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய உயர் அதிகாரிகளைக் கண்டதும் நாமும் இதுபோல வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், இறுதியாண்டு படிப்பை முடித்ததும் திருச்சியில் அச்சகம் நடத்தி வரும் குமாருடன் (தனது கணவரைக் கைகாட்டுகிறார்) திருமணம் நடந்துவிட்டது. மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தோடு முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்.
இதற்கிடையே, 2000-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இரட்டைக் குழந்தைகளாக ஆகாஷ், பிரகாஷ் பிறந்ததால் நான் முழுநேரமும் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கினேன்.
2004-ல் ஒரு நாள் கணவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஐ.ஏ.எஸ். படித்திருக்கலாம் என்று ஏக்கத்தோடு கூறினேன். நான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து வந்தது. உனக்கு விருப்பம் இருந்தால் இந்த நொடியிலேயே படிப்பை தொடரலாம் என்றார் எந்தவித கோபமும் இல்லாமல்.
இதுதொடர்பாக குடும்பத்தாரிடம் அன்றே விவாதித்தேன். எனது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறுவதற்கான அறிகுறி கண் முன்னால் வந்து போனது. அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.
2005-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் முதன்முதலாக பங்கேற்றேன். தோல்வியே வந்து சேர்ந்தது. இந்திய வரலாற்றை முதல் நிலைப் பாடமாகவும், தமிழ் இலக்கணத்தை முதன்மைப் பாடமாகவும் தேர்வு செய்தேன்.
திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் போட்டித் தேர்வு மையங்களிலேயே எனது நேரங்கள் கழிந்தன. 2-வது முறையும் (2006) தோல்வியே. 3-வது முறை (2007) முதல் நிலைத் தேர்விலும், 4-வது முறை (2008) முதன்மைத் தேர்விலும் வெற்றி கிடைத்தது. இருப்பினும், முழுமையாக என்னால் வெற்றி பெற முடியவில்லை.
தோல்வி ஏற்பட்டபோது எதனால் தோல்வி என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தொடர் தோல்வி என்னைப் பாதித்தாலும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தனர்.
எனது தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, ஓரளவு திருப்தியோடு 5-வது முறையாக கடந்தாண்டு (2009) தேர்வு எழுதினேன். அனைத்திலும் வெற்றி பெற்று, இப்போது குடும்பத்தார் மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் வயதும், திருமணமும் ஒரு தடையே இல்லை. ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் புத்தகத்தை தொட்டேன். அதுதான் கஷ்டமாக இருந்தது.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற இழந்தவை சொந்த பந்தங்களின் நட்பையும். குழந்தைகளின் பாசத்தையும்தான். சொந்தக்காரர்களின் எந்த நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், பல கஷ்டங்களுக்கு இடையே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
கூட்டுக் குடும்பம், கணவரின் ஒத்துழைப்பு இவை இரண்டுமே திருமணத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற எனக்கு துணையாக அமைந்தவை. இவை மற்ற பெண்களுக்கும் அமைந்தால், அவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்'' என்றார் விமலா.
விமலாவின் கணவர் குமார் தொடர்கிறார்...
""ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற விமலாவைவிட எனக்குத்தான் பாராட்டுகள் அதிகம் வருகின்றன. யார் வாழ்த்து கூறினாலும், உன் உதவி இல்லாமல் விமலா எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்கின்றனர்.
கணவன்- மனைவிக்குள் உள்ள புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் தன்மை, பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவையே விமலாவுக்கு நான் செய்தவை. மேலும், எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதாலேயே, இந்த வெற்றி சாத்தியமானது'' என்றார் குமார்.
பிளஸ் 2 மட்டுமே முடித்துள்ளார் குமார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் போகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்த சில நிமிஷ காட்சிகள் குமார்- விமலா தம்பதியின் வாழ்க்கையில் அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதுதானே!

நன்றி -- தினமணி செய்தி தாள்

Sunday, May 16, 2010

வீர வணக்கம்




வணக்கம் தமிழர்களே,
நம்முடைய உதிர உறவுகள் படுகொலைக்கு உட்பட்டு, இன்னும் சிரமம் அனுபவித்துக் கொண்டு உள்ளார்கள்.
வீர மரணம் அடைந்த அனைத்து தமிழர்களுக்கும் நம்முடைய வணக்கத்தை செலுத்துவோம்
நன்றி
அழகிரி.இரா

Dear Friends,
Let us pay rich tributes to the innocent tamizhs and brave tamizhans killed by the Srilankan rulers last year 18-MAY-2009
Azhagiri.R

Saturday, May 15, 2010

அட்சய திருதியையா?

அட்சய திருதியையா?


கொஞ்ச காலமாக அட்சய திருதியை அட்சய திருதியை என்ற சொல்லாடல் அதிகம் ஒலிக்கிறது.

இது மதம் சார்ந்த மசால் பொடி-தான் என்றாலும் கடந்த சில ஆண்டு-களாகத் தான் இதற்கு மவுசு அதிகரித்-துள்ளது.

வரும் 16ஆம் தேதி அட்சய திருதியை-யாம். அட்சய என்றால் அள்ள அள்ளக் குறையாதது _ வளரக் கூடியது என்று பொருளாம்.

மணிமேகலைக் காப்பியத்தில் அட்சய பாத்திரம் என்ற ஒன்று வருவதைப் படித்திருக்கலாம்.

இந்த நாள் பற்றி புராணங்கள் அள்ளிக் கொட்டுகின்றன. இந்த நாளில்தான் முதல் யுகமான கிருதாயுகம் தோன்றியதாம்.

இந்த யுகத்துக்கு ஆண்டுகள் 17 லட்சத்து 28 ஆயிரமாம்! இதுதான் முதல் யுகமாம்.

கிருதாயுகத்தின் சிறப்பு என்னவாம்? இந்த யுகத்தில் வாழ்பவருக்கு ஆயுள் எவ்வளவாம்? ஒரு லட்சம் வருடங்-களாம்.

ஒரு லட்சம் வருடம் வாழும் இவர்-களுக்குப் பால பருவம் பதினாயிரம் ஆண்டுகளாம்; காளைப் பருவம் 1032 வருடங்களாம்.

அந்த யுகத்தில் வாழ்ந்த மனிதர்-களின் உயரம் எவ்வளவு தெரியுமா? அய்ந்து பனைமரம் அளவாம்!

இந்த யுகத்தில் வாழ்பவர்கள் மேன்மையாக வாழ்வார்களாம், துன்பம் என்பது என்னவென்றே தெரியாதாம். கல்விமான்களாகவும், குற்றமில்லாத குணம் உடையவர்களாகவும் இருப்பார்-களாம். வேதியர் வேத வேள்வியைச் செய்யத் தவறார். வணிகர் மனுநீதிப்படி பொருளைத் தேடி நல்வழியில் பயன்படுத்துவர். சூத்திரர் வேதியருக்குச் செங்கடன் பூண்டு, பூமியை உழுது பயி-ரிட்டு, அதிதிகளை ஓம்பி, அறம்புரிந்து வாழ்வர் (அபிதான சிந்தாமணி பக்கம் 1360)

இவ்வளவு சிறப்புகளையும் உடைய இந்த யுகம் பிறந்தது இந்த அட்சய திருதியையிலாம்.

ஒன்றை உயர்த்த வேண்டும் என்றால் இந்தப் பார்ப்பனர்கள் எப்படி எப்படி-யெல்லாம் கதை கட்டுவார்கள் என்ப-தற்கு இவை போதுமான தகவல்களே!

உயிர்கள் எப்பொழுது தோன்றின _- மனிதன் எப்படி பரிணாமம் பெற்றான் என்ற விஞ்ஞான வினாக்களுக்கு எல்லாம் இங்கு இடமே கிடையாது.

முள்ளு முனையிலே முந்நூறு குளம் வெட்டினேன் என்பதைவிட மோச-மான அண்டப் புளுகு இது.

மத விவகாரங்களில் அண்டப்புளுகு என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாமே புளுகுகள் என்று ஆகிவிட்ட பிறகு, அதில் உசத்தி, மட்டம் என்பது எங்கேயிருந்தது குதித்தது?

குசேலன் அன்புடன் தந்த அவலை சுவைத்த கண்ணன், அட்சய எனக் கூறி அவனை வாழ்த்தினானாம். அதனால் குசேலன் குபேரனானது அட்சய திருதியை நாளில் தானாம்.

குசேலன் பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து, எழுப்பிய கேள்வி கவனிக்கத் தகுந்தது. குலேசனுக்கு 27 குழந்தைகள் இருந்தும் அவன் குடும்பம் பசி _ பட்டினியாம்.

20 வருசத்திற்கு மேற்பட்ட ஏழு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குலேசருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்-காவது என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப் பயல்களாட்-டமாக வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி வந்திருக்-காதா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு புராண அதிகப் பிரசங்கிகள் இதுநாள் வரை பதில் சொன்னதுதான் உண்டா?

இந்த அட்சய திருதியை நாளில் கிருஷ்ணன் அட்சய என்று சொன்னா-னாம் _ குசேலன் குபேரன் ஆனானாம்.

ஒரு வகையில் பார்க்கப் போனால் சோம்பேறித் தடிப் பயல்களை வளர்த்து வருவது தான் இந்த அட்சய திருதியை என்று பொருளாகாதா?

வாட்ட சாட்டமான ஆள் பிச்சை எடுக்க வந்தால் நமது வீட்டுத் தாய்-மார்கள் சொல்லும் வார்த்தை தடிப் பயலாக இருந்து கொண்டு பிச்சை எடுக்கிறாயே! என்று கேட்பதுண்டே!

படிக்காத பாமரத் தாய்மாருக்கு இருக்கும் பொது அறிவுகூட, புத்திகூட பகவான் கிருஷ்ணனுக்கு இல்லை-யென்றால், இவனெல்லாம் ஒரு கடவுளா என்ற கேள்வி தானே எழ வேண்டும்?

அதுசரி, பக்தி என்று வந்து விட்-டால் புத்திக்கு அங்கே நுழைவு சீட்டு எது?

பாஞ்சாலியின் மானம் காக்க பரந்தாமன் ஆடை வழங்கியதும் இந்த அட்சய திருதியை நாளில் தானாம்.

இன்றைக்கு அந்த பரந்தாமன் இருக்கின்றானா _ இல்லையா? எத்தனைப் பாஞ்சாலிகள் ஒவ்வொரு நாளும் துகில் உரியப் படுகிறார்கள்? அவர்-களுக்கெல்லாம் அந்தப் பரந்-தாமன் சேலைகளை வழங்க வருவ-தில்லையே - _ ஏன்?

திருமகளின் எட்டு அவதாரங்களுள் அய்ஸ்வரிய லட்சுமி தான்ய லட்சுமி தோன்-றிய நாளும் இதே நாளில்-தானாம்.

இந்த நாளில் குன்றிமணி அளவு பவுன் வாங்கினால் அது ஆண்டு பூரா-வும் பெருகிக் கொண்டே இருக்குமாம்.

இந்தியாவில் கிராமப்புறங்களில் 26.5 விழுக்காடு குடும்பங்களும், நகர்ப்புறங்-களில் 17.-8 விழுக்காடு மக்களும் கடனாளிகளாக இருக்கிறார்கள்.

இந்திய விவசாயிகள் ஒவ்வொருவர் தலையிலும் விழுந்திருக்கும் கடன் தொகை ரூ.25985.

இந்தியாவில் 77 விழுக்காடு மக்-களின் ஒரு நாளைய வருவாய் ரூ.20.

இப்படி வறுமை நோய் ஆயிரங் கால்களோடு நடமாடிக் கொண்டு இருக்கும் இந்த நாட்டில் அட்சய திருதியை என்று ஒருநாளாம்.

இந்நாளில் பொருள்கள் வாங்கி-னால் கொழியே கொழியோயென்று கொழிக்குமாம்.

இன்றைக்கு ஒரு சவரன் பவுன் விலை ரூ.13512 நாள் ஒன்றுக்கு ரூ.20 சம்பாதிக்கும் ஒரு ஏழை இந்த அட்சய திருதியையில் ஒரு கிராம் தங்கம் வாங்கும் நிலையில் இருக்கிறானா?

அய்ஸ்வர்ய லட்சுமி கடவுளாக உள்ள நாட்டில் இந்த வறுமைக்-கோடுகள் இருப்பது ஏன்? விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாள்வது ஏன்?

ஒரு கணம், ஒரே ஒரு கணம் சிந்தித்-தால் குடி மூழ்கியா போய் விடும்!

அண்மைக் காலத்தில் நகை வியா-பாரிகள் விரித்த பிரச்சார வலையில், மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன மக்கள் விழுந்து விடுகிறார்கள். இந்த நாளில் பவுன் வாங்கினால், அதிர்ஷ்ட தேவதை கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவாளாமே ஆண்டுக்கு ஒரு நாள் - _ அதனை நழுவ விட்டு விட-லாமா என்ற ஏக்கத்தைப் பாமர மக்கள் மத்தியில்கூட ஏற்படுத்துவதுதான் இந்த அட்சய திருதியை பற்றிய மலிவான விளம்பரங்கள்.

கடந்த ஆண்டு இந்த நாளில் நகை வாங்கியவர்கள்வீட்டில் ஓராண்டுக்குள் எத்தனை சவரன் குட்டி போட்டது? ஆதாரப் பூர்வமாக அறிவிக்கத் தயாரா?

அம்பானி வீட்டிலும், முருகேஷ் வீட்டிலும் குட்டி போட்டு இருக்கலாம். -- நாம் கேட்பது _ பாமர மக்கள் வீட்டில் எத்தனை பவுன் எகிறிக் குதித்தது என்பதுதான்.

நியாயமாக தங்கத்தை வாங்குவதை ஊக்கப்படுத்தவே கூடாது. தங்கம் அரசாங்கத்தின் கஜானாவில் இருக்க வேண்டிய பொருள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது தேவை என்பது அடிப்படைப் பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு இது தெரியுமே!

சந்திரன் சாப விமோசனம் பெற்ற-தும் இந்த நாளில்தானாம். அது என்ன சந்திரனைப் பீடித்த சாபம்?

தேவகுருவான வியாழ பகவானின் தர்மபத்தினியை குருவின் சீடானான சந்திரன் கற்பழித்தானாம். அதன் காரணமாக சந்திரனைப் பார்த்து வியாழ பகவானான குரு, உமது கலை நாளுக்கொன்றாய் குறைந்து போகக் கடவது என்று சாபம் விட்டானாம்.

அந்த சாபம் நீங்கிய நாள்தான் அட்சய திருதியையாம்.

என்ன யோக்கியதை குரு பத்தினி-யைக் கற்பழித்தவன் இந்த நாட்டில் கடவுள் _ அதற்குச் சாபமாம் - _ சாபம் நீங்கிட ஒரு நாளாம்.

முட்டாள்தனமும், முற்றிப்போன ஒழுக்கக்கேடும் ஒன்றை இன்னொன்று விஞ்சியது என்று சொல்லும் அளவுக்கு காட்டுவிலங்காண்டித்தனமாய் எந்தக் காலத்திலோ, எந்த ஒரு கிறுக்கனோ கிறுக்கி வைத்த பைத்தியக்கார உளறல்கள் எல்லாம் மதக்கருத்தாகவும், சடங்குகளாகவும் உருவெடுத்தன என்பதுதானே உண்மை.

ஏதோ அன்று உளறினான்; அதை உதறிவிட்டு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதுதானே அறிவுக்கு அழகு?

அந்தக் காட்டுவிலங்காண்டித்-தனத்தை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கட்டிக் கொண்டு அழுவது என்றால் இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா?

பச்சை வண்ண சேலை கடைகளில் தேங்கி விட்டால் வியாபாரிகள் ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். இந்த வருஷம் பொறந்தது சரியானதல்ல! வீட்டில் மூத்த சகோதரர்களுக்கு வில்லங்கங்கள். உடனே சகோதரி-களுக்குப் பச்சைக்கலர் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். அவ்-வளவுதான தேங்கிக் கிடந்த பச்சைப் புடவைகள் எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து போய்விடும்.

சிகப்புக் கலர் சேலைகள் தேங்கி கிடந்தால் அதற்கொரு அய்திகத்தை அவிழ்த்துவிடுவார்கள். உடனே ஆடு மாடுகள் போல பக்தர்கள் ஜவுளி கடைகளுக்குப் படையெடுப்பார்கள்.

அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த அட்சய திருதியை என்பதும்.

நகை வியாபாரி வைத்த நெருப்பு பற்றிக் கொண்டு எரிகிறது. அந்த ஒரு நாளில் மட்டும் தேங்கிக் கிடக்கும் நகைகள் எல்லாம் காலியாகிவிடும்.

அவனுக்குக் கல்லாப் பெட்டி நிரம்பும். கடன் வாங்கி பவுன் வாங்கிய பாமர மக்களுக்கோ வட்டிதான் வள-ரும். அடகு வைத்த பொருள்தான் மூழ்கும்.

பக்தி -_ வியாபாரம் ஆகிவிட்டது என்ப-தற்கு வேறு எடுத்துக்காட்டும் தேவையோ!

Source: viduthalai.com