Thursday, February 18, 2010
சாக்கிரட்டீசு (கிமு 470 - கிமு 399) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர்.
சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.
நகரத்தின் சிந்தனாவாதி சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில், சாகும் தருண்த்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாககாமல்(!) தனது நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும் விஷயங்களைப் பற்றி பேசிக கொண்டிருந்ததாக ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது ‘Great Dialogues’ புத்தகத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
விஷம் அருந்தும் சற்று நேரத்துககு முன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவிழ்ககப்பட்டதால், தன் கால்களை தேய்த்துவிட்டுக கொண்டு சற்று சவுகரியமாக மேடையில் அமர்ந்து கொண்டு ‘ஆன்மாவுககு மரணமுண்டா, மறு பிறவு என்பது இருககிறதா?’ என்று தத்துவ விசாரணைகளில் தனது சீடர்களுடன் ஈடுபட்டாராம். இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுககமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம்.
சாகும் தருவாயில்கூட சீரிய பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம் நாம் பார்கக முடிகிறது. அவரின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, ‘என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைககுள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது! வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுககு கோபம் ஏதும் இல்லையே?’ என்று குரல் உடைந்து அழ,
எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?.
“எனககு விஷம் தயாராக இருககிறதா?”
அவருடைய முதன்மை சீடர் கரீட்டோ கண்ணில் நீர்வழிய,’அவசரமில்லை சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம் கூட ஆகவில்லை. சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக கொள்ளலாம்’ என்றார் பதற்றமாக.
‘நான் கடைசிவரை ஆர்வத்துடன் உயிரைப் பாதுகாத்துக கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா கரீட்டோ? அது சற்று முட்டாள்தனமாகத் தோற்றமளிககாதா?’ என்றுவிட்டு உடனே விஷக கோப்பையை கொண்டுவரச் சொன்னாராம். தன் சாவு பற்றி எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருககு இருந்திருந்தால் சாவு எனும் ‘வாழ்வின் ஒருமுறை’ நிகழ்வுககு அவ்வள்வு தயாராய் இருந்திருப்பார்?.
தன் சாவு- நிச்சயமான ஒன்று என்கிற அறிவு,அதிகார வர்ககம் அவருககு அளித்திருந்த தண்டணையே சாவு என்கிற பகுத்துப் பார்ககிற அறிவு, அவருககு இருந்ததால்தான் அவரால் சாவு என்பது ஒரு வாழ்வின் (கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத் தன்மையோடு அமைதி காகக முடிந்திருககிறது.
அது மட்டுமல்ல!
விஷத்தை அருந்திய சாக்ரடீஸ்,’அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார். பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடந்த அதுவரை சோகத்தை அடககி வைத்துக கொண்டிருந்த சீடர்கள் ஓவென்று கதற,’ என்ன இது? மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகாக இருககுமே!’ என்றாராம்.
‘என்ன ஒரு மனிதர்?’ என்று பிரமிககத் தோன்றுகிறதல்லவா?.
அதனால்தானோ என்னவோ அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, ‘அவர் இறந்துவிட்டார்’ என்றோ,’பரலோக ப்ராப்தி அடைந்தார்’ என்றோ, இறைவனடி சேர்ந்தார்’ என்றோ சொல்லாமல், அவரது மரணத்தை ‘சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.
ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருககிறது!.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment