AZHAGIRI.R

AZHAGIRI.R

Tuesday, December 7, 2010

அன்புள்ள தமிழர்களே,
இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, கொன்று குவித்த, அரசாங்கத்தின் மீது, நம்மிடம் இருக்கும், போர்க்குற்ற படங்களையோ அல்லது ஒளி-ஒலி காட்சிகளையோ, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள் ....
ஐ நா வின் குழு:
panelofexpertsregistry@un.org

Ms. Sooka Yasmin
YSooka@fhr.org.za
webmaster@justice.gov.za

Mr. Steven R. Ratner
sratner@umich.edu

Mr. Marzuki Darusman
contact.us@strategic-asia.com
info@aseanhrmech.org


மேலும்

கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People - www.Salem-News.com

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?
http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is
SIGN THE PETITION
நன்றி, More Thanks

Friday, November 26, 2010

பார்ப்பவர்கள் யார்??? ஓர் அரிய புள்ளி விவரம்...

ஓர் அரிய புள்ளி விவரம்

ரமேஷ் பிரபா சொன்ன ஒரு புள்ளி விவரம் ஒரு புதிய உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
பல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டு இருப்ப தாகப் பாவலா செய்து கொண்டிருக்கிறோம் - உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் அத்தாட்சி.
ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும், அதற்குமேல் என்ன வேண்டியிருக்கிறது? என்ற மனப்பான்மை இருப்பதுண்டு.
உண்மையிலேயே இந்த ஆங்கிலத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் யார் - எத்தனைப் பேர் என்கிற புள்ளி விவரத்தை அவிழ்த்துக் கொட்டினார்.

உதாரணத்துக்குச் சில:
சி.என்.என். அய்.பி.என். CNN-IBN
மும்பையில் பார்ப்போர் 0.24
கொல்கத்தாவில் 0.06
டில்லி 0.21
சென்னை 0.03
பெங்களூரு 0.11
அய்தராபாத் 0.17
சராசரி விகிதம் 0.16.

என்.டி.டி.வி. NDTV
மும்பை 0.16
கொல்கத்தா 0.11
டில்லி 0.13
சென்னை 0.14
பெங்களூரு 0.07
அய்தராபாத் 0.06
சராசரி சதவிகிதம் 0.12

டைம்ஸ் நவ் TIMES NOW
மும்பை 0.08
கொல்கத்தா 0.08
டில்லி 0.09
சென்னை 0.33
பெங்களூரு 0.19
அய்தராபாத் 0.12
சராசரி 0.13

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன?
ஒரு சதவிகிதம் கூட இந்த ஆங்கிலத் தொலைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் கிடையாது.
ஆனால், இவர்கள்தான் மக்கள் மத்தியிலே கருத்துத் தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்கிறார்கள்.
இவற்றை முறியடிக்கும் வகையில் ஓர் ஊடகம் நம் கைகளில் இருந்தால் ஒழிய, இந்த நச்சுத்தன்மையை நம்மால் முறியடிப்பது மிகவும் கடினமாகும்.
இந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வெறும் செய்தியை மட்டும் வெளியிடுபவை. வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. விளம்பர வருமானங்களும் குறைவு. பெரும் பாலும் நட்டத்தில்தான் இயங்குபவை. ஆனாலும், இவர்களால் இவற்றை நடத்த முடிகிறது என்றால், அது எப்படி? இவர்களின் பின்ப(பு)லத்தில் இருப்பவர்கள் யார்? முதலாளிகள்! முதலாளிகள்! முதலாளித் திமிங் கலங்கள்!!!
அப்படியென்றால், இதன் பொருள் இவர்கள்தம் முதலாளிகளின் குரலை (ழளை ஆயளவநச ஏடிஉந)த்தான் ஒலிக்கிறார்கள். அதனை மக்கள் கருத்தாக மாற்ற முயலுகிறார்கள் என்பதுதானே உண்மை!
புதன் மாலை தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டம் படித்தவர்களையும் கண் திறக்கச் செய்து விட்டது - பாமர மக்கள் மத்தியிலும் உண்மைகளைக் கொண்டு செல்ல அவசியமான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. மக்களைச் சுற்றி ஓட்டை விழுந்த ஓசோன்கள்
ஆபத்தான ஆரிய வலைப் பின்னல்கள்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

SOURCE : WWW.VIDUTHALAI.COM

Sunday, November 14, 2010

தமிழ் பூக்கள் - 99

தமிழ் பூக்கள் - 99


காந்தள்
ஆம்பல்
அனிச்சம்
குவளை
குறிஞ்சி
வெட்சி
செங்கொடுவேரி
தேமா
மணிச்சிகை
உந்தூழ்
கூவிளம்
எறுழ்
சுள்ளி
கூவிரம்
வடவனம்
வாகை
குடசம்
எருவை
செருவிளை
கருவிளம்
பயினி
வானி
குரவம்
பசும்பிடி
வகுளம்
காயா
ஆவிரை
வேரல்
சூரல்
சிறுபூளை
குருநறுங்கண்ணி
குருகிலை
மருதம்
கோங்கம்
போங்கம்
திலகம்
பாதிரி
செருந்தி
அதிரல்
சண்பகம்
கரந்தை
குளவி
மாமரம்
தில்லை
பாலை
முல்லை
கஞ்சங்குல்லை
பிடவம்
செங்கருங்காலி
வாழை
வள்ளி
நெய்தல்
தாழை
தளவம்
தாமரை
ஞாழல்
மௌவல்
கொகுடி
சேடல்
செம்மல்
சிறுசெங்குரலி
கோடல்
கைதை
வழை
காஞ்சி
கருங்குவளை
பாங்கர்
மரவம்
தணக்கம்
ஈங்கை
இலவம்
கொன்றை
அடும்பு
ஆத்தி
அவரை
பகன்றை
பலாசம்
பிண்டி
வஞ்சி
பித்திகம்
சிந்துவாரம்
தும்பை
துழாய்
தோன்றி
நந்தி
நறவம்
புன்னாகம்
பாரம்
பீரம்
குருக்கத்தி
ஆரம்
காழ்வை
புன்னை
நரந்தம்
நாகப்பூ
நள்ளிருணாரி
குருந்தம்
வேங்கை
புழகு


Source: www.karkanirka.wordpress.com

Friday, November 5, 2010

தீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்

தீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்

சாமி.சிதம்பரனார்

தீபாவலிப் பண்டிகைக்காக வழங்கி வரும் கதையே சுட்டுக் கதையாக முடிகின்றபோது, தீபாவலியை எப்படி நமக்குரிய பண்டிகையென்று கொள்ள முடியும்? இத்தகைய மூடக் கதையை-பொருந்தாத போலிக் கதையை ஆதாரமாகக்கொண்ட தீபாவலியை வீண் செலவு செய்து ஏன் கொண்டாட வேண்டுமென்றுதான் கேட்கின்றோம்?


இந்துக்கள் என்பவர்கள் கொண்-டாடும் பண்டிகைகளில் தீபாவலிப் பண்டிகையும் ஒன்றாகும். இதுவும், இந்து மதவழக்கத்தில் ஒன்றாகும். ஒவ்-வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு புராணக் கதை கற்பிக்கப்பட்டு இருப்-பதை யாவருமறிவோம். அவ்வாறே தீபாவலிக்கும் ஒரு புராணக் கதையைச் சுருங்கக் கூறி முடித்துவிட்டு அதன் பின்னர் நமது எண்ணத்தை வெளி-யிடுகின்றோம்.

இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்து கொண்ட பொழுது, திருமால் பன்றி-யுருக்கொண்டு வந்து இரண்யாட்-சதனைக் கொன்று பூமியை நிலைக்கச் செய்தாராம். அப்பொழுது பன்றியு-ருவோடிருந்த திருமாலை, பூமி தேவி மணம் செய்து கொள்ள விரும்பி-னாளாம், உடனே பன்றியும் பூமி-தேவியும் திருமணம் செய்து-கொண்டார்-களாம். அவ்விரு வர்களுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நரகாசுரன் என்று பெயர். இவன் மாகிஷ்மதி என்னும் பட்டணத்தை அரசாண்டு கொண்டி-ருந்தான். துவஷ்டாவின் பெண்ணா-கியணா கசேரு என்பளை இவன் ஒரு யானை உருவத்துடன் சென்று சிறை பிடித்துக்கொண்டு வந்து மணம் செய்து கொண்டானாம். இவன் காசிபரின் மனைவியாகிய அதிதியென்பவளின் காதணியையும், வருணனுடைய குடை-யையும் கவர்ந்து கொண்டானாம். அன்றியும் எப்பொழுதும் தேவர்-களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தானாம். இவ்வாறே இவன் அனேக, ஆண்டுகள் வாழ்ந்து வந்தானாம்.

இந்நரகாசுரன் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல், தேவர்களனை-வரும், முறையிட்டதைக் கேட்ட திருமால் அவனைக் கிருஷ்ணாவதாரத்-தில் கொன்று விடுவதாக வாக்-களித்திருத்திருந்தாராம். அதன்படியே, கிருஷ்ணன், ஒரு சமயத்தில் திருமாலின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற தானும், பூமிதேவி அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை-யென்னும் தனது மனைவியும் சேர்ந்து நரகாசுர பட்டினத்தையடைந்தார்கள். கண்ணன் நரகாசுரனுடன் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றான். நரகா-சுரன் இறக்கும்போது தான் இறந்த நாளை உலகத்தார் கொண்டாடும்படி செய்ய வேண்டுமென்று வேண்டிக்-கொண்டானாம். அவன் வேண்டு-கோளை நிறைவேற்றவேண்டுமென்று சத்தியபாமையும், விரும்பினாளாம். அதற்கறிகுறியாகத்தான் தீபாவலிப் பண்டிகை ஏற்பட்டதாம். இதுதான் பாகவதம் முதலிய புராணங்கள் வழங்கும் கதையாகும்.

இனி இக்கதை எவ்வளவு தூரம் உண்மையாக விருக்க வேண்டுமென்-பதைச் சிறிது ஆராயலாம். பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்தான் என்னுங் கூற்று பொருந்-துமா? பூமி உருண்டை வடிவமா? தட்டை வடிவமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிப்பது எப்படி? பூமியெங்கிருக்கின்றது, கடல் எதன் மீது இருக்கின்றது? என்ற கேள்விகளைக் கேட்போமாயின், திருமாலின் பன்றியவதாரத்திற்கே ஆபத்து வந்து விடுகின்றதன்றோ? பிறகு பூமிதேவி பன்றியைக் கண்டு ஆசைப்-பட்டாள் என்று கூறுவதனால் பூமி என்பது ஒரு பெண்ணுருவமா? ஒரு பெண்ணின் மேலா நாம் இவ்வளவு காரியங்களையும் செய்து கொண்டி-ருக்கின்றோம்? என்ற கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை-யன்றோ? ஒரு இயற்கைப் பொருளைப் பெண்ணாக ஆக்கி அப்பெண் ஒரு பன்றியோடு சேர்ந்து பெரும் புகழ் வாய்ந்த ஒரு பிள்ளையைப் பெற்றதாகக் கூறப்படும் கதையையும் உண்மை-யென்று நம்புவார் பகுத்தறிவுடைய-ராகவிருக்க முடியுமா?

இனிக் கடைசியாக நரகாசுரனைக் கொன்றதாகக் கூறப்படும் கண்ணனைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்ப்போம். திருமாலவதாரமென்று சொல்லப்-படுகின்ற கண்ணன் நரகாசுரனுக்குத் தந்தையாக வேண்டுமன்றோ? ஆகவே தகப்பன் மகனைக் கொலை புரிந்த கதைதான் தீபாவலியென்று முடிக்கின்-றதன்றோ? தகப்பன் தான் மட்டுஞ் சென்று மகனைக் கொல்லாமல் தாயாரையும் பக்கத்தில் வைத்துக்-கொண்டு கொன்றானாம், பூமி தேவியின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை நரகாசுரனுக்கு தாயன்றோ? மகனைக் கொன்ற கண்ணன் பெருமை-யைத்தான் பெருமையாகப் பேசுகின்-றோம். அந்தோ, இதை விட குறைந்த அறிவுடைய செயல் வேறென்னவிருக்-கின்றது!

மேற்கூறிய உத்தமமான புராணக்-கதையினால், நமது பரிசுத்தமான தீபாவலிப் பண்டிகையின் பெருமையை நீங்களே ஊகித்து உண்மையை உணர லாம். சிலர் தீபாவலிப் பண்டிகை மழைக் காலத்தில் வருவதால் அன்று சுகாதார முறையைக் கைக்கொள்வதற்குப் பதிலாக இப்பண்டிகையின்மூலம் நம்மையும் நமது வீடுவாசல்களையும் சுத்தஞ்-செய்கின்றோம் என்கிறார்கள். எண்ணெய் தேய்த்து முழுகுவதும் புதிய ஆடையை உடுத்துக்கொள்வதும், சுகாதாரத்திற்கறிகுறியாம். வாணங்களை வாங்கிக் கொளுத்திக் கெட்ட காற்றை உட்-ககொள்வதும் சுகாதாரமாம். எண்ணெய்ப் பண்டங்களை உண்டு பிணியடைவதும் சுகாதாரமாம் என்னே இவர்தம் அறியாமை?

நாம் தீபாவலியைப் பற்றிக் கூறுங்-கால் ஏராளமான பொருளை வீண் செலவு செய்யும், பொருளற்ற மத சம்பந்தமான சடங்குகளில் ஒன்றுதான் தீபாவலி என்றுதான் கூறுவோம். தீபாவலியன்று நமது இந்தியாவில் எவ்வளவு பொருள் வீணாகின்ற, தென்பதைக் கணக்கிடுவோமாயின் கோடிக்கணக்கான பொருள் வீணாகின்றதென்பது விளங்கும், புதிய ஆடைகளுக்காக-ஆடம்பரமான உடைகளுக்காக-அந்நிய நாட்டினர்க்கு அளவு கடந்த பொருளை அள்ளிக்-கொடுக்கிறோம். ஒரு பயனுமற்ற வெடிகளுக்காக எத்தனை லட்சம் ரூபாய் அள்ளி இறைக்கின்றோம். காசைக் கரியாக்காதே வாணத்தை வாங்கிச் சுடு என்ற பரிகாசப் பழமொழி நம்மை ஏளனஞ் செய்வதற்கு எழுந்த பழமொழியன்றோ? நமது இச்செய்-கையைக் கண்ட அந்நியர் எவர்தான் நகைக்க மாட்டார்கள்? எவர்தான் நம்மை அறிவிலிகள் என்று கூற-மாட்டார்கள்?

இம்மட்டோ! இன்னும் இவ்வெடி-களால் உண்டாகும் ஆபத்துக்கள் எவ்வளவு? வெங்காயவெடி செய்வ-தனால் கண்ணிழக்கின்றவர்கள் எத்-தனை பேர்? கை யிழக்கின்றவர், காலிழக்-கின்றவர் எத்தனை பேர்? உயிர் விடு-வோர் எத்தனை பேர்? மற்றும் வெடிக்-கும் வெடிகளால் காயமடைவோர் எத்தனை பேர்? இதற்கெல்லாம் காரணம், தீபாவலி யென்னும் பாழும் கடன்கார மதச்சடங்கன்றோ? மதச்-சடங்கு என்பதைவிட மடச்சடங்கென்று கூறுவது பொருந்துமென்று நினைக்கின் றோம்.

இதுமட்டோ? மழை நாளில் எண்ணெய்ப் பண்டங்களையுண்டு வயிற்று நோய் கொண்டோர் எத்தனை பேர்? விஷ பேதிக்குட்படுவோர் எத்தனை பேர்? சுரநோய் கொள்வோர் எத்தனை பேர்? இதற்கு வேறு உதாரணம் வேண்டாம், தீபாவலியன்று காலையில் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பார்வை யிடுவீர்களாயின் பலகாரப் பெருமையையும் தீபாவளியின் மாண்-பையும் உணரலாம்.

ஆகவே, மதம் மதம் என்று சொல்லிக்கொண்டிருப்பதனால்- எவ்வளவு துன்பமுண்டாகின்ற தென்-பதை ஆராய்ந்து பாருங்கள். இந்தத் தீபாவளிச் சடங்கினால், நமது பொரு-ளுக்கும், உடம்புக்கும், அறிவுக்கும், எவ்வளவு சேதமுண்டாகின்ற-தென் பதைச் சிறிது கூர்ந்து நோக்கு-வோமாயின் இதுபோன்ற சடங்கு-களைக் கொண்டாட-மத சம்பந்தமான சடங்கென்று சொல்ல முன் வருவோமா? தமிழ் மக்களுக்குப் பல வகையிலும் சேதம் விளைவிக்கின்ற இத்தீபாவலிப் பண்டிகையை- ஆரியப் புராணக்கதையில் ஏற்பட்ட இத் தீபாவலிப் பண்டிகையை-இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளை-யிடும் இத்தீபாவலிப் பண்டிகையை ஒழிப்பதற்கு வழி தேடவேண்டும். இவ்வாறனா மூடச்சடங்குகளையும், பண்டிகைகளையும், வழக்கங்களையும், ஒழிப்பதில்தான், நமது விடுதலை அடங்கிக் கிடக்கின்றது.

Tuesday, October 26, 2010

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்


பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி

2. புத்தி என்ற மனைவி

(சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!)

3. மோதை

4. பிரமோதை

5. சுமகை

6. சுந்தரி

7. மனோரமை

8. மங்கலை

9. கேசினி

10. காந்தை

11. சாருகாசை

12. சுமத்திமை

13. நந்தினி

14. காமதை

15. வல்லபை

முதலியவரை மணந்தனர்.

பக்கம் 1751, விநாயகர் தலைப்பு

பக்தர்களே, பிள்ளையார்தான் வல்லபை கணபதி வரலாறு எவ்வளவு ஆபாசம் - சிதம்பரத்திலும், மத்தூரிலும் இந்த கணபதி உள்ளது.

(திருவல்லிக்கேணி கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, 18.9.2010).

Tuesday, October 19, 2010

தீபாவளியும் - அவதாரங்களும்!

தீபாவளியும் - அவதாரங்களும்!

மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரி-வினரான சைவர் ஏற்றுக் கொள்-வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவ-தாரங்கள் எடுத்தது. - ஒன்பது முடிந்து-விட்-டது.- ஒன்று மீதி உள்ளது. - அது கல்கி அவதாரம் - என்றெல்லாம் புரா-ணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.
நாம்தான் வேதங்களைப் படிக்-கக்-கூடாது. நாம் படிப்பதற்காகத்-தான் புராணங்களே எழுதப்பட்-டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்-றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவ தாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான் எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவ-தாரம் _ தான் என்று கூறிப் பெண்-களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.
முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது.- இரண்-டாம் அவதாரம் ஆமை.- இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடி-யது. - மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. - நான்காம் அவதாரம் நரசிம்மம். -பாதி விலங்கு, பாதி மனி-தன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விக-டன், காமகோடி, ஆன்மீகம்_- அருள்சோதி என்றெல்-லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.
கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம்,- மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன் - இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை - 14 ஆம் அவ தாரம் நரசிம்மம் - 15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசு ராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.
பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்-தான் அதன் அவ-தாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்-டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றி-யின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!
பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே_- விஷ்ணுவே_- பூமாதேவிக்குச் சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்ய-பன்,- அதிதி தம்-பதிகளின் புத்திரன், விசு-வாஸ்-வனன். அவன்தான் சூரியன் என்-கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்-திலேயே சூரியனை அறி-முகப்படுத்திவிட்டு 15 ஆம் புரா-ணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?
இதே வராக (பன்றி) அவ-தாரத்-தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதி-யிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்ட-தாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமி-தேவியை எடுத்ததாம். அதன் வேண்டு-கோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளிய-தாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புரா-ணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).
யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்-பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்-களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை பெரிய திருமொழிப் பாசுரம்
ஏனாகி உலகிடந்து அன்று இரு-நிலனும்
பெருவிசும்பும் தாளாய பெரு-மான்
எனப் பாடுகிறது. பிறகு நர-காசுரன் எங்கே வருகிறான்?
கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கட-லுக்குள் நுழைந்தார். இரண்யாட்-சத-னுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.
பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.
ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்-போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவி-யும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்-யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?
ஒரு மாநிலத்தில் வாமன அவ-தாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.
ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.
ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதை-யுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.
ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.
இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதை-யளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...
புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும்-கூடப் புத்திசாலித்தனம் தேவைப்-படுமே! பலப்பல நபர்கள் பலப்-பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதை-கள்தான் புராணங்கள்! அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!
(விடுதலை, 19.10.2006)

Source: www.viduthalai.com

Tuesday, September 14, 2010

அண்ணா எழுப்பிய கேள்விகள்






திராவிட நாடு இதழில் (16ச்.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?

13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?

19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?

25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?

36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?

41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46) அவைத் தனித்தனி கடவுள் களா?

47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?

55) மலையரசன் மகனென்றால் என்ன?

56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?

58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?

60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?

61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?

64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69) வருணாசிரமம் உண்டா?

70) உண்டென்றால் ஆதாரம் எது?

71) இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?

73) சைவ மடங்கள் எதற்கு?

74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78) அருகதை உடையவர் யார்?

79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?