AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, June 26, 2010

கீதாசாரம்

கீதாசாரம்

கடமையைச் செய் பலனை எதிர்ப்பார்காதே என்பது பகவத்கீதையின் அமுதமொழி என்று கீதையைப் படிக்காதவர்கள் சொல்லித் திரிகிறார்கள். கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற கருத்து பகவத்கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. தற்பொழுது கீதாசாரம் என்ற தலைப்பில் சில சொற்களைத் தாங்கிய அட்டைகள் தமிழகத்தில் பரவலாக வீடுகளிலும், கடைகளிலும், அரசு நிறுவனங்களிலும், வங்கிகளிலும் காணப்படுகின்றன. கீதாசாரத்தில் காணப்படும் சொற்கள்,

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகாவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு
எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்
எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனுடையது ஆகிறது .
இதுவே உலக நியதியும் என்னுடைய படைப்பின் சாராம்சமுமாகும். "



மேலே காட்டிய கீதாசாரத்தின் கருத்துக்களை நோக்கினால் அக்கருத்துகள் படிப்பவரின் உள்ளத்தையும் ஊக்கத்தையும் மழுங்கச் செய்யும் கருத்துக்கள் என்பதை உணரலாம். தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கண்ட உள்ளங்களுக்கு வேண்டுமென்றால் அச்சொற்கள் ஓரளவு ஆறுதல் அளிக்கலாம். ஆனால் மேற்கண்ட கருத்துகள் பகவத்கீதையில் சொல்லப்படவில்லை.

ஒரே தெருவில் ஒரு வீட்டில் திருமணம் நடக்கும். மற்றொரு வீட்டில் ஒருவர் இறந்து விடுவார். திருமணம் நடைபெறும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும், இழவு வீட்டில் துன்பம் இருக்கும். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவரின் உறவினருக்கு ஆறுதல் மொழி கூறுவார்கள். திருமண விழாவில் நலுங்கு பாடுவார்கள். இழவு வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள். திருமண விழாவில் மணமக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது பற்றி பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவரின் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுவார்கள். திருமண விழாவில் மணமக்கள் பெற்ற பரிசுப் பொருட்கள், சீர் முதலியவற்றை பற்றி மக்கள் பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவன் விட்டுச் சென்ற சொத்துக்கள் பற்றி பேசப்படும்.

இறந்தவன் உயிரோடு இருக்கும் போது அவனைப் பாராட்டிப் பேச விரும்பாதவர்கள் கூட இன்று அவனைப் பாராட்டுவார்கள். நேற்று இதே நேரத்தில் என்னோடு நன்றாகப் பேசி கொண்டிருந்தார். இன்று திடீர் என்று இறந்துவிட்டாரே என்று கூறுவார் ஒருவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நம்ம ஊருக்கு பிழைப்புத் தேடி வந்தார். நன்றாக சம்பாதித்து விட்டார். ஆனால், எதையும் திக்காமல் போய்விட்டார். அவர் பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை என்று ஒருவர் நினைப்பார். என்ன சொத்து சேர்த்து என்னப் பயன்? சுடுக்காடிலே கொண்டுப்போய் அவர் போட்டிருந்த அரைகான்கயிற்றையும் கழற்றி விட்டுத் தான் எரிக்கப் போகிறார்கள். அம்மணமாய் பிறந்தான் அம்மணமாய் போகிறான். இது தான் வாழ்க்கை என்ற தத்துவம் உரைப்பார் ஒருவர். பிணத்தை கற்றிக் கொண்டு வயிற்றிலேயும் மார்பிலேயும் கைகளால் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாட்டு பாடுவார்கள் சிலர். நேற்று அரசனைப் போல் நடந்து வந்தாயே, இன்று பிணமாய் போகிறாயே! சொத்து சுகம் சேர்த்தாயே, அனுபவிக்காமல் (துய்க்காமல்) போறீயே! போன்ற கருத்துகள் அடங்கியப் புலம்பலை ஒப்பாரியாகப் பாடுவார்கள்.

'வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் நிலையை வாழ்ந்தவர் யாரடா' என்ற தத்துவங்களை எல்லாம் இழவு வீட்டில் பேசிக் கொண்டிருப்பவர்கள் பேச்சுகளிலும் ஒப்பாரி பாடல்களிலும் நாம் கேட்கலாம்.

இழவு வீட்டில் பிணத்திற்கு முன்னால் இருந்து கொண்டு புலம்பும் புலம்பலுக்கும் கீதாசாரத்திர்க்கும் ஏதேனும் வேற்றுமை உண்டா? கீதாசாரம் என்பது இறந்தவனின் பிணத்தின் முன் நின்று இறந்தவனின் ஆத்மா சாந்தியடைவதற்க்காக சொல்லப்படும் செய்திகள் போலல்லவா இருக்கிறது?

இந்த புலம்பற் சொற்களில் ஏதோ சிறப்பு இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள் தங்கள் இல்லங்களிலும், கடைகளிலும், கீதாசாரத்தை தொங்கவிட்டிருக்கிறார்கள். கீதாசாரத்தை ஒரு பிணத்தின் முன் நின்று கூறிப் புலம்பலாம். ஆனால் திருமண விழாவில் தாலிக் கட்டிய கணவனிடம் சென்று எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையதாகும் என்று கீதாசாரத்தை யாரேனும் சொல்லத் துணிவார்களா? வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவரும் வாடிக்கையாளரிடம் ' எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவனுடையது ஆகும்' என்று கீதாசாரத்தை வங்கி மேலாளர் கூறுவாரா? கீதாசாரத்தை பகவத்கீதையின் சாறு என்று கூறுகிறார்களே, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்போம். எது நடந்ததோ அது நன்றாக நடந்தது என்று கீதாசாரம் கூறுகிறதே அப்படியென்றால் சீதையை இராவணன் தூக்கிச் சென்றானே அது நன்றாக நடந்தது தானே. இராமன் ஏன் சீதையை இழந்து வாட வேண்டும்? ஏன் சீதையை தேட முயல வேண்டும்? இன்று சீதை (எது) உன்னுடையவலாக இருந்தாளோ அவள் (அது) நாளை இராவனனுடையவள் என்று நினைத்து அமைதியாக அல்லவோ இருந்திருக்கவேண்டும். இராமனும், கிருட்டிணனும் திருமாலின் அவதாரங்கள்தானே. அவதாரம் சொல்வதையே மற்றொரு அவதாரம் போற்றவில்லையே.

கீதாசாரத்தை சமச்க்கிருதத்திலியே எழுதி மாட்டியிருந்தால் கூட நாம் ஒருவேளை வருந்தாமலிருக்கலாம். தமிழிலியே கீதாசாரத்தை எழுதித் தொங்கவிட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிற தமிழர்களின் நிலையை என்னென்று கூறுவது? பெரும்பாலான தமிழர்கள் பார்ப்பன புரோகிதரை வைத்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். பார்பன புரோகிதன் சமஸ்கிருதத்தில் தான் ஏதோ உளறுவான். அவன் சமஸ்க்கிருதத்தில் புலம்புவதால் மக்களுக்கு அவன் கல்யாண மந்திரம் ஓதுகிறானா அல்லது கருமாதி மந்திரம் ஓதுகிறானா என்பது தெரியாது.

'மாங்கல்யம் தந்துநானே ந மம ஜீவ ந ஹேது நா கண்ட் டே பத்னாமி சுபகே சஞ்சீவ சரத சதம்'

'இது மங்கலகரமான் கயிறு. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமாக இதை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீ நூறு ஆண்டு வாழ்வாய்' . தாலி கட்டுகிறவன் ஒரோன். ஆனால் பலர் முன்னியிலையில் மணமகளின் கழுத்தில் மங்கல கயிறு கட்டுகிறேன் என்று உறுதிமொழி எடுக்கிறான் புரோகிதன்.

இந்த இழிவு இன்னும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த உறுதிமொழி சமஸ்க்கிருத மொழியில் இருப்பதால் புரியாமல் இழிவை தேடிக் கொள்கிறார்கள். ஆனால் கீதாசாரம் என்று தமிழிலியே எழுதியதையும் வைத்துக் கொண்டு ஆடுகிறார்களே தமிழ் மக்கள்.

நன்றி
பகவத்கீதை - ஒரு பார்வை
ஆசிரியர் - வே. இந்திரசித்து

Friday, June 11, 2010

அன்புள்ள நண்பர்களே,....... Dear Friends,.......

அன்புள்ள நண்பர்களே,

சமீப காலமாக, நீங்கள் அறிந்திருப்பீர்கள், பேரினவாத இலங்கை அரசுடன், நாட்டுடன் இந்திய பண முதலைகளில் ஒரு நிறுவனமான, ஏர்டெல்(AirTel)
என்ற அலைபேசி நிறுவனம் வணிக ஒப்பந்தம் புரிந்துள்ளது. பலத்த எதிர்ப்புகளையும் மீறி , அப்பாவி மக்களை கொன்று குவித்த அரசுடன் வணிகத் தொடர்பு வைக்க உள்ள இந்நிறுவனத்தை கண்டிப்போம், அறவே புறக்கணிப்போம்.
ஒரு நபரில் தொடங்கி ஒரு கோடி வரை நீக்க முடியும், ஆதரியுங்கள்,
வேறு நிறுவனங்களின் அலைபேசி அட்டைகளை இன்றே பெறுங்கள்,
சிந்திப்பீர், செயல்படுவீர்.

நன்றியுடன்,
இரா.அழகிரி


Dear Friends,

You all might be aware of the brutal killings of the Tamizh people by the racist SriLankan government. Recently, from India, the private cellular operator, AirTel has signed agreement to start business with the human blood stained ruler of SriLanka. Let us teach a lesson to that operator by surrendering all our AirTel sim cards(if you are a AirTel customer). Boycott all the services by that group, please....
If we start from one person, it will reach to crore numbers. (in tamilnadu alone it has nearly 1.25 crore customers and 13 crore customers in the entire India)
So, we have to share this with our friends and workers, students etc.......
I hope, you will do this for a human cause......

Many Thanks
Azhagiri.R

Thursday, June 10, 2010

நம்ம ஊர் – 25

நம்ம ஊர் – 25

கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.
காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.
கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.
ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.
சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.
தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.
சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.
நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.
கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.
50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.
ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.
செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.
எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.
பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.
கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.
தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.
ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.
புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.
இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.
100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.
மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.
உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.
இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க
தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க.
டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.

நன்றி - எல்லைத்தமிழன்

Wednesday, June 9, 2010

நாத்திகர்கள் 81 விழுக்காடு

உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகுகிறது
வியட்நாமில் நாத்திகர்கள் 81 விழுக்காடு

சென்னை, ஜூன் 9_ உலகில் கடவுள் மறுப்பா-ளர்-களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்று அறிவியல் தகவல்கள் கூறுகின்றன.
670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள்வரை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். கடந்த பத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் புள்ளி விவரங்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த மதிப்பீடு.
இந்தப் போக்கு எதைக்காட்டுகிறது? அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் நாத்திகமும் வளர்ந்து வருவதாக கலிபோர்னியா பிட்சர் கல்லூரியின் பேராசிரியர் பில் ஜுகர்மேன் கூறுகிறார். வளர்ச்சி பெறாமல் பின் தங்கி உள்ள நாடுகளில் மதம் இன்னும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருப்ப-தால், உலக அளவில் நாத்திகம் வளருவது என்ற இந்த போக்கு பின்னடைவையே பெற்றுள்ளது எனக் கூறலாம். இந்த நாடுகளில்தான் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுடன், வளர்ந்த நாடுகளை விட மக்கள் தொகைப் பெருக்கமும் இந்த நாடுகளில்தான் விரைவாகவும் உள்ளது என்பதே இதன் காரணம்.
நாத்திகர்களும் (Atheists), கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து அற்றவர்-களும் (Agnostics) அதிகமாக வாழும் 10 நாடுகள்:
1. ஸ்வீடன் 46_85 விழுக்காடு
2. வியட்நாம் 81 விழுக்காடு
3. டென்மார்க் 43_80 விழுக்காடு
4. நார்வே 31_72 விழுக்காடு
5. ஜப்பான் 64_65 விழுக்காடு
6. செக் குடியரசு 54_61 விழுக்காடு
7. பின்லாந்து 26_80 விழுக்காடு
8. பிரான்ஸ் 43_54 விழுக்காடு
9. தென்கொரியா 30_-52 விழுக்காடு
10. எஸ்டோனியா 49 விழுக்காடு
பல காரணங்களை முன்னிட்டு இந்த புள்ளி விவரங்களை மிகச் சிறந்த மதிப்பீடுகள் மட்டுமே எனக் கூறலாம். மேற்கு அய்ரோப்பாவின் வளர்ச்சி பெற்ற நாடுகள், வட அமெரிக்கா மற்றும் சில நாடு-களைத் தவிர வேறு நாடுகளில் பெரும் அள-விலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாக மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதில்லை. சில நேரங்களில் பதில் அளிக்கவும் மறுக்கின்றனர் என்றும் கூறலாம். கடவுள் என்பதில் முழுமை-யான நம்பிக்கை இல்லை (absolutely not believe in god) என்றோ, நான் மதத்தில் இல்லை (I am not into religion) என்று அவர்கள் பல்வேறு சொற்-றொடர்களைப் பயன்படுத்துகின்றனர். என்றாலும் இந்தப் புள்ளிவிவரங்கள் ஏறக்குறைய ஒரு சரியான மதிப்பீட்டை அளிக்கின்றன.
நாத்திகர்கள் வழக்கமாகவே இளைஞர்களாக, ஆண்களாக, அதிகம் படித்தவர்களாக, சரியான தேர்வை ஆதரிப்பவர்களாக, பெண்உரிமை ஆதர-வாளர்களாக, உடலை வருத்தும் தண்டனைகள் அளிப்பதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர் என்பதை மக்கள் தொகை இயல் ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்தியர்களில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கடவுள் நம்பிக்கை அற்றவர்-களாக உள்ளனர் என்று 2004 இல் மேற்கொள்ளப்-பட்ட பி.பி.சி. ஆய்வு ஒன்று தெரிவிப்பதாகவும், இந்தி-யர்களில் 5 விழுக்காடு கடவுள் நம்பிக்கை அற்ற-வர்கள் என்று நோரிஸ் மற்றும் ஈங்கில்-ஹார்ட் என்னும் இரண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சி-யாளர்கள் கண்டுள்ளனர் என்றும் ஜூகர்மேன் குறிப்பிடுகிறார். 88 விழுக்காடு மக்கள் தொடர்ந்து முறையாக தொழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்-டுள்ளனர்.
அய்ரோப்பாவில் நாத்திகம் பரவலாக நிலவுவதாக தோன்றுகிறது. பிரெஞ்சுக்காரர்களில் 33 விழுக்காடும், டச்சுக்காரர்களில் 27 விழுக்-காடும், பெல்ஜியத்துக்காரர்களில் 27 விழுக்காடும், ஜெர்மானியர்களில் 25 விழுக்காடும், பிரிட்டிஷ் காரர்களில் 20 விழுக்காடும் கடவுள் நம்பிக்-கையோ எந்த ஒரு ஆவி அல்லது வாழ்க்கையை இயக்கும் சக்தி இருப்பதில் நம்பிக்கையோ அற்றவர்கள் என்பதை 2005 இல் அய்ரோப்பா பற்றி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்-கிறது. ஸ்கான்டிநேவிய மக்களில் அதிக எண்-ணிக்கை கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை அற்ற-வர்களாக உள்ளனர். அமெரிக்காவில் நாத்தி-கம் மிகவும் பிரபலமடைந்து வருதாக பல ஆய்வு-கள் தெரிவிக்கின்றன. 2007 இல் பியூ ஆய்வின்படி 5 விழுக்காட்டினரும், 2008 ஹாரிஸ் கணக்கெடுப்-பின்படி 19 விழுக்காட்டினரும் தங்களை நாத்தி-கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
- சுபோத் வர்மா-
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

Source: viduthalai.com

Saturday, June 5, 2010

How to maintain a refrigerator at home?

Refrigerator (165 liter):
Energy consumption 200 watts of electric power. Ensure that your refrigerator is functioning properly as it is one of the most energy consuming home appliances.
• Always ensure the cleanliness of the capacitor located at the rear side of the refrigerator.
• Ensure that the refrigerator door is tightly closed and do not open it repetitively. Close the door quickly whenever you open it in order to prevent the cold air from escaping.
Take into account the arrangement of items in the refrigerator so as to ease their handling. Leave a space between the food items inside the fridge in order to allow for air movement around them. However, the opposite procedure is recommended for the Freezer which should be fully loaded and if necessary fill the blanks with ice cube bags.
• Melt the ice from time to time so that its thickness shall not exceed ¼ inch.
• When you leave your home for a week or more, clean the refrigerator and
keep the door open.
• When you buy a refrigerator try to know the approximate annual running cost.
• During summer time, use a Coleman cooler for keeping cold water handy as this reduces the number of times you open the refrigerator door.